Friday, October 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 4 (உய்யக்கொண்டார்)

கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையில் திருமால், திருமகள், சேனைமுதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரை பார்த்திருக்கிறோம். இன்று நாதமுனிகளின் சீடரான உய்யக்கொண்டாரின் திருநாமத்தைப் பார்க்கிறோம்.

"இரவி. உய்யக்கொண்டாரைப் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் பெயர் மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது. அவரைப் பற்றி சொல்லுங்களேன்"

"குமரன். இது அறிவினா தானே? என்னைச் சோதித்துப் பார்க்கிறீர்களா?"

"இல்லை இரவி. உண்மையாகவே தான் சொல்கிறேன். உய்யக்கொண்டார் நாதமுனிகளின் சீடர் என்று மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது"

"சரி. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்று நம்பி அவரைப் பற்றி சொல்கிறேன்.

உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர். திருவெள்ளறையில் பிறந்தவர். இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.

சிறுவயதில் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றவர். திருவெள்ளறையில் இருக்கும் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தொண்டு புரிந்தவர்கள் இவர் குடும்பத்தவர்கள். தகுந்த வயதில் இவரை மேலும் கல்வி கற்க நாதமுனிகளிடம் அனுப்பினார்கள் இவரின் பெற்றோர்கள்"

"இவர் இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்றால் உய்யக்கொண்டார் என்ற பெயர் எப்படி வந்தது?"

"அதுவா? உலகத்து மக்களின் மேல் இவருக்கு இருக்கும் அன்பைக் கண்டு நாதமுனிகள் வைத்த பெயர் அது!"

**

"அடியேன்".

"வாரும் பிள்ளாய். நலமாய் உள்ளீரா?"

"தேவரீரின் திருவருட் பெருமையால் அடியேன் அன்பனாய் உள்ளேன்".

"தாமரைக்கண்ணரே. நீரும் குருகைக்காவலப்பனும் எனது முதன்மைச் சீடர்கள். என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன. பக்தியோகத்தால் ஒருவர் தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்; ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரப் பனுவலால் ஒருவர் தன்னையும் மற்றவரையும் கடைத்தேற்றிக் கொள்ளலாம். உமக்கு யோக இரகசியம் வேண்டுமா? நாலாயிரப் பனுவல் வேண்டுமா?"

"ஐயனே. பிணம் கிடப்பார் வீட்டில் மணம் உண்டோ? உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடி நினையாமல் செத்துக் கொண்டிருக்கும் போது ஒற்றை உயிர் இறைவன் திருவடிகளை அடைவதில் என்ன பயன்? அடியேனுக்கு தேவரீர் அருளிச் செயல்களையே அருளிச்செய்ய வேண்டும்"

"ஆகா. புண்டரீகாட்சரே! உலகம் உய்யக்கொண்டீரே! உம் விருப்பம் போலவே நாலாயிரப் பனுவல்களையும் சொல்லித் தருகிறேன்"

**
"இரவி. இவருடைய வாழித் திருநாமத்தைப் படித்துப் பார்த்தேன். அதில் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு என்று வருகிறது. திருப்பாவையை ஐயைந்தும் ஐந்தும் என்றும் நாச்சியார் திருமொழியை ஒரு நூற்று நாற்பத்தி மூன்று என்றும் சொல்வது போல் இவர் இயற்றிய பாடல்களைச் சொல்கிறார்களா?"

"குமரன். இவர் நூலெதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. திருப்பாவைக்குத் தனியன் எழுதியவர் இவர்."

"எந்த தனியன் இரவி?"

"அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


படிச்சிருப்பீங்களே! இந்தத் தனியனும்

சூடிக் கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு


இந்தத் தனியனும் இவர் எழுதியது."

"ஆமாம். இந்தத் தனியன்கள் தெரியும். ரொம்ப எளிமையான தனியன்கள். இவர் இந்தத் தனியன்கள் மட்டுமே எழுதினார் என்றால் வாழித் திருநாமத்தில் வரும் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு எல்லாம் என்ன?"

"ரொம்ப விளக்கமாக சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் குமரன். மூன்று மறைப்பொருட்களான ரகஸ்ய த்ரயம் தான் அவை"

"இரகசியத் திரயமா? ஓஓ. இரகசியத் திரயமா? சரி தான். இப்போது புரிகிறது.

நாலிரண்டு எட்டு - எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய. நான் உன்னையன்றி இலேன். நீ என்னையன்றி இலாய். சரி தான்.

ஐயைந்து இருபத்தியைந்து - இரு வரிகளில் இருபத்தியைந்து எழுத்துகளில் வரும் துவய மந்திரம்.

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:


திருமகள் நாதன் திருவடிகளை சரணாக நான் அடைகிறேன். திருமகள் கேள்வனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன்.

நாலெட்டு முப்பத்தியெட்டு - முப்பத்தியெட்டு எழுத்துகளில் வரும் கீதைச் சுலோகமான சரம சுலோகம்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:


எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்.

அருமை. இம்மூன்றையும் அடுத்த தலைமுறைக்குப் பொருளுடன் கொண்டு சென்றவர் என்பதால் இவரை இப்படி போற்றுகின்றதா வாழித்திருநாமம்"

**
வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையத்தில் வாழியே


இளஞ்சூரியன் அழகு மிகுந்தவன். இருளை நீக்கி வண்ண ஓவியங்களை வானமெங்கும் பூமியெங்கும் அவன் ஒளி எழுதும். அவன் ஒளி கண்களைக் கூசாது. அப்படிப் பட்ட இளம்பரிதியின் வடிவழகை வெல்லும் அழகைப் பெற்றுள்ளவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

பரசுராமன், இராமன், பலராமன் என்று முன்பு திருமாலின் வடிவாய் வந்த மூன்று இராமர்களைப் போல் நான்காவது இராமனாய் வந்த இராமமிச்ரரான மணக்கால் நம்பி தன் குருவாகக் கொண்டு தொண்டு செய்யும் மலர்களைப் போன்ற திருப்பாதங்களை உடையவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

நற்குணங்களும் நன்னடத்தையும் நல்லெண்ணங்களும் உடைய நாதமுனிகள் என்னும் ஆசாரியரின் பெருமைகளை எப்போதும் உரைத்துக் கொண்டிருப்பவர் வாழ்க வாழ்க!

சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரப் பெருநாளில் உலகம் சிறக்க பிறந்தவர் வாழ்க வாழ்க!

நாலிரண்டான எட்டெழுத்து மந்திரத்தின் பொருளையும் ஐயைந்தான துவய மந்திரத்தின் பொருளையும் நமக்கு உரைத்தவர் வாழ்க வாழ்க!

நாலெட்டான சரம சுலோகத்தின் உட்பொருளை தன் வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தவர் வாழ்க வாழ்க!

திருமாலவன் திருவரங்கன் அழகிய மணவாளன் திருப்பெயர்களையும் திருப்புகழ்களையும் எப்போதும் சொல்லுபவர் வாழ்க வாழ்க!

உலகம் உய்யக் கொண்டவரின் திருவடிகள் இந்த வையகத்தில் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க!

62 comments:

  1. //பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?//

    உலகெல்லாம் உழலும் போது, தனி ஒருவனுக்கு எதுக்கு யோகம்? அடியார்கள் பொருட்டு பாசுரங்களைத் தாருங்கள் போதும்,
    - என்று பக்தியிலும் சுயநலம் கலக்காத "உண்மை உள்ளம்"-ன்னா அது உய்யக் கொண்டார் தான்!

    அது தான் உடையவருக்கும் முன்னோடி ஆகி, அனைவரும் மோட்சம் போவார்களே, நான் ஒருவன் தானே நரகம் புகுவேன் என்று இராமானுசரைப் பேச வைத்தது!

    இப்படி "தன்" உள்ள உகப்புக்கும், "தன்" யோகத்துக்கும், "தன்" கர்மாவுக்கும், "தன்" மோட்சத்துக்கும் சிந்திக்காது, "நம்" உய்யக் கொண்டார் ஆகையாலே உய்யக் கொண்டார்!

    கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அடியார்கள் கட்சியில் நிற்கும் தோழி கோதைக்குத் தனியன் எழுதணும்-ன்னா சும்மாவா? அதான் உய்யக் கொண்டாரை மட்டும் எழுத விட்டாள் போலும்!

    உய்யக் கொண்டார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  2. முருகா.....அது யாரு குமரன் கதையில் வருவது, இரவி, இரவி-ன்னு? :)
    இப்பல்லாம் ஒரே உரையாடல் மயமாத் தான் பதிவு போடறீக போல! :)

    மக்களே, பதிவில் வரும் "இரவி" யாருன்னே எனக்குத் தெரியாது!
    அதே போல் குமரன் அறியாத எம்பெருமான் வியாக்யானங்களும் இல்லை!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //நாலிரண்டு எட்டு - எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய//

    //நான் உன்னையன்றி இலேன். நீ என்னையன்றி இலாய்.//

    - ஓ! நாலிரண்டுக்கு இது தான் பொருளா, குமரன்? :) நன்று! நன்று!

    //ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே//

    ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே-ன்னு சொல்வாங்க இல்லையா? எது சரி?

    இந்த ஐ+ஐந்துக்கும்
    அவள் ஐ+ஐந்தும்+ஐந்துக்கும்
    உள்ள தொடர்பு என்ன?

    இந்த துவய மந்திரப் பொருளை எப்போ எங்களுக்கு எல்லாம் சொல்லப் போறீங்க?

    ReplyDelete
  5. //நாலெட்டு முப்பத்தியெட்டு//

    எங்கூரு வாழைப்பந்தல்-ல நாலெட்டு முப்பத்தி ரெண்டு தான்! :)

    //வரும் கீதைச் சுலோகமான சரம சுலோகம்//

    அது என்ன சரம சுலோகம்? சரம என்றால் என்ன குமரன்?

    //எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய்//

    என்னை மட்டுமே கதி-ன்னா, அது சரணாகதியா குமரன்?
    கீதை-ல சரணாகதி கூட இருக்கா என்ன?

    கீதாசார்யன், கர்ம-ஞான-பக்தி யோகங்களை, அதே வரிசையில் விலாவரியாப் பேசி விட்டு, இந்த "சரணம்" வ்ரஜ" மட்டும் ஒரே வரியில் சொல்லுவது எதை, குமரன்?

    ReplyDelete
  6. //மோக்ஷயிஷ்யாமி மா சுச://

    இப்படி "மோட்சம் கொடுக்கிறேன்"-ன்னு. வெளிப்படையா, வேற எந்த கீதை அத்யாயத்திலும் சொல்லப்பட்டிருக்கா குமரன்?

    ReplyDelete
  7. *நாலெட்டு முப்பத்தியெட்டு*

    முப்பத்திரண்டு

    ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய
    மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ
    மோக்ஷயிஷ்யாமி மா சுச:||

    இது நான்கு பாதங்களாகப் பிரிக்கப் படுகிறது;
    பாதத்துக்கு 8 அக்ஷரங்களாக 32 அக்ஷரங்கள்.

    ஸ,வ,த,மா,ப,ரி,ய,ய - 8
    மா,ஏ,க,ச,ர,ண,ர,ஜ - 8
    அ,ஹ,வா,ஸ,வ,பா,பே,யோ - 8
    மோ,க்ஷ,யி,யா,மி,மா,சு,ச: - 8
    ---
    32
    ----
    ஒற்று நீக்கப்பட்டுள்ளது.

    சரம ச்லோகம் இடம் பெறுவது 18ம் அத்யாயத்தில் மட்டுமே;66ம் ச்லோகம்

    தேவ்

    ReplyDelete
  8. //உலகெல்லாம் உழலும் போது, தனி ஒருவனுக்கு எதுக்கு யோகம்? அடியார்கள் பொருட்டு பாசுரங்களைத் தாருங்கள் போதும்,
    - என்று பக்தியிலும் சுயநலம் கலக்காத "உண்மை உள்ளம்"-ன்னா அது உய்யக் கொண்டார் தான்! //

    miha parantha thiruvullam.

    Aacharyan thiruvadigale saranam

    ReplyDelete
  9. நன்றி குமரன். உங்களிடம் நிறைய கேள்விகள் எல்லாம் கேட்கிறார்களே, அவர்கள் சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்தால் என்ன? :-)

    ReplyDelete
  10. புண்டரீகாக்ஷர் திருவடிகளே சரணம்.
    உய்யக்கொண்டாருக்கு அருள் புரிந்த நாதமுனிகள் திருவடிகளே சரணம்.

    அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
    அருளினான் அவ்வருமறையின் பொருள்
    அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே.

    நாதமுனிகளுக்கு அருள் புரிந்த நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    நம்மாழ்வாருக்கு அருள் புரிந்த புண்டரீகாக்ஷர் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  11. ஆமாம் இரவி. நீங்கள் சில வாரங்களுக்கு முன்பு உய்யக்கொண்டாரைப் பற்றி சொன்ன போது எனக்கும் அது தான் தோன்றியது - எம்பெருமானாருக்கு முன்னோடியாக உய்யக்கொண்டார் இருந்திருக்கிறார் என்று.

    குமரன் யாருன்னு தெரிஞ்சா இந்த உரையாடல்ல வர்ற இரவி யாருன்னு தெரியும் இரவி. :-)

    நாலிரண்டுக்கு என்ன பொருள்ன்னு இனிமே தான் படிச்சுப் பார்க்கணும் இரவி. நீங்க கொடுத்த வேலையைச் செய்யும் நேரம் இன்னும் வரலை.

    அஹம் இல்லாம தான் முந்தி ஒரு முறை துவயத்தை எழுதியிருந்தேன். அப்போது தேவ் ஐயா வந்து திருத்தினார். வேறு எங்கேயோ சரி பார்த்தேன் என்றும் நினைக்கிறேன். ஆனால் அஹம் இல்லாமல் எழுதினால் தான் ஐயைந்து எழுத்துகள் வருகின்றன. அதனால் தேவ் ஐயா தான் விளக்க வேண்டும்.

    துவயப் பொருளை இடுகையில் சொல்லியிருக்கிறேனே இரவி. பார்க்கவில்லையா? ஐயைந்திற்கும் ஐயைந்து ஐந்திற்கும் உள்ள தொடர்புகளை நீங்கள் தான் சொல்லவேண்டும். பின்னூட்டப் பெட்டி திறந்து தானே இருக்கிறது. :-)

    நாலெட்டு முப்பத்தியிரண்டு தான். தேவ் ஐயா சொன்னது போல் எழுத்துகளை எண்ணிப் பார்த்துவிட்டுத் தான் இட்டேன். ஆனால் எப்படியோ முப்பத்தியெட்டு என்று தவறாக இடுகையில் இட்டிருக்கிறேன். சரி செய்கிறேன்.

    சரம என்றால் இறுதின்னு தானே பொருள் இரவி? கீதையின் இறுதியில் வருவதால் இதற்குச் சரம சுலோகம் என்று பெயரா?

    என்னை மட்டுமே கதியாக அடைவாய்ங்கறது சரணாகதி தானே இரவி? ஆசாரியர்கள் அப்படித் தான் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரி தானா?

    ஆமாம். கீதாசாரியன் ஏன் மத்ததை எல்லாம் விலாவாரியா பேசிட்டு சரணாகதியை மட்டும் ஒத்தை வரியில சொல்லிட்டுப் போறார்?

    மோக்ஷம் தர்றேன்னு வேற எந்த கீதை சுலோகத்திலயும் கீதாசாரியன் சொல்றாரான்னு தெரியலை இரவி. ஆனா மோக்ஷம் கிடைக்கும்ன்னு வேற சுலோகங்கள்ல சொல்றாருன்னு நினைக்கிறேன். சரி தானா? ரெண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கா?

    ReplyDelete
  12. நாலெட்டை விளக்கியதற்கு நன்றி தேவ் ஐயா. ஐயைந்திற்கும் இப்படி எழுத்துகளைக் கூட்டிப் பார்த்தால் சரியான எண்ணிக்கை வரவில்லை. என்ன தவறு செய்கிறேன் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. வாங்க செல்வநம்பி ஐயா. ஆமாம் ஐயா. ஆசாரியர்களின் பரந்த உள்ளத்தைப் பார்த்தால் வியப்பாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  14. சந்தேக சக்ரவர்த்திக்கிட்ட எத்தனை கேள்விகள் கேட்டால் தான் என்ன இராதா? கேள்விகளால் வேள்வி செய்யும் அன்பர்கள்கிட்ட சந்தேக சக்ரவர்த்தியான நான் அக்கேள்விகளையே திரும்பி அனுப்பத் தான் செய்ய முடியும். ஐயங்களைத் தீர்க்க இயலாது!

    பாட்டு எழுதினா அதுக்குப் பொருளும் சொல்லணும்ன்னு ரொம்ப நாளா 'குமரன் விதி'ன்னு ஒன்னு வலையுலகத்துல இருக்கு இராதா. அருள் கொண்டாடி நீங்க சொன்ன பாட்டுக்குப் பொருளும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  15. ஆஹா ! எத்தனையோ பாசுரம் இட்ட பொழுது இல்லாத விதி திடீரென்று என்று முளைத்தது ??
    யாரை ஏமாற்ற பார்க்கிறீர்? ரவியிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  16. அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
    அருளினான் அவ்வருமறையின் பொருள்
    அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே.


    இது "கண்ணிநுண் சிறுதாம்பு"-ல் வரும் பாசுரம்.
    இறைவனின் அருளைேக் கொண்டாடும் அடியார்கள் பாடி இன்புற, நம்மாழ்வார் வேதத்தின் பொருளை இனிய தமிழ்ப் பாக்களாக அருளினார். (கல் நெஞ்சம், இரும்பு நெஞ்சம், என்று எத்தகைய கொடிய நெஞ்சம் படைத்தவர் ஆயினும் அவர்களும் உய்யும் பொருட்டு) அருள் கொண்டு, கரைய உருக்குகின்ற தன்மை கொண்ட ஆயிரம் இனிய (அந்தாதிப்) பாக்களினால் ஆன திருவாய்மொழியைப் பாடினார். இவ்வுலகினில் இதனை விட மிக்கதான அருளிச் செயல் வேறு எதுவும் இல்லை என்று மதுரகவியின் அபிப்பிராயம்.

    ReplyDelete
  17. இதற்கு மேல் விரிவாகப் பொருள் சொல்ல சிலர் வருவார்கள். :)

    ReplyDelete
  18. சரணாகதி சம்பந்தமாக சரம ஸ்லோகம் அல்லாமல் இன்னொரு இடத்திலும் கீதாசார்யானால் பேசப் படுகிறது.

    கிட்டத்திட்ட கீழ் கண்ட பொருளில் வரும்:
    "...மூன்று குணங்களால் ஆன என் மாயையை கடத்தல் அரிது.
    எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ அவர்கள் அதைக் கடக்கிறார்கள்."
    (கீதை 7-14)

    ReplyDelete
  19. //துவயப் பொருளை இடுகையில் சொல்லியிருக்கிறேனே இரவி. பார்க்கவில்லையா?//

    பார்த்தேன் குமரன்! புரியவில்லை!

    //திருமகள் நாதன் திருவடிகளை சரணாக நான் அடைகிறேன் - ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே//

    * எம்பெருமான் திருவடிகளைச் சரணம் அடைதலா?
    * பிராட்டியின் சரணத்தை அடைந்து எம்பெருமான் சரணத்தை அடைதலா?
    * பிராட்டியை "முன்னிட்டு" எம்பெருமான் சரணத்தை அடைதலா?

    //திருமகள் கேள்வனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன் - ஸ்ரீமதே நாராயணாய நம//

    நாராயணனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன் என்றும் சொல்லலாமே? எதுக்கு "ஸ்ரீ" சப்தம்?

    முதல் வரியில் வரும் ஸ்ரீமந் என்றால் என்ன?
    அடுத்த வரியில் வரும் ஸ்ரீமதே என்றால் என்ன?

    ReplyDelete
  20. //கீதையின் இறுதியில் வருவதால் இதற்குச் சரம சுலோகம் என்று பெயரா//

    பதினெட்டாம் (இறுதி) அத்தியாயத்தில் வருவதனால் மட்டுமே இதற்கு "சரம" என்று பெயர் கிடையாது!

    இதுவே "ULTIMATE"! இறுதியானது! உறுதியானது! அதனால் இதற்கு "சரம" சுலோகம் என்று பெயர்!

    இதற்கு அப்புறம் கண்ணன் பேசவில்லை! பகவான் உவாச இல்லை என்பது உடையவர் கருத்து!

    ReplyDelete
  21. //மோக்ஷம் தர்றேன்னு வேற எந்த கீதை சுலோகத்திலயும் கீதாசாரியன் சொல்றாரான்னு தெரியலை இரவி. ஆனா மோக்ஷம் கிடைக்கும்ன்னு வேற சுலோகங்கள்ல சொல்றாருன்னு நினைக்கிறேன். சரி தானா?//

    எனக்குத் தெரியாது குமரன்!
    கர்ம, ஞான யோகங்களால் மோட்சம் கிட்டும்-ன்னு கீதையில் பகவான் எங்கே கூறுகிறான்?
    இதைக் கீதா வல்லுநர்களைத் தான் கேட்க வேண்டும்!

    ஆச்சார்யர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்!
    கர்ம, ஞான யோகங்கள் மலைக்குச் செல்லும் அடிவாரப் பாதைகள் பலவற்றில் ஒன்று! அதனாலெல்லாம் மலை உச்சிக்குப் போய் விட முடியாது! மலை உச்சிக்குப் போக வேறு பாதை என்று ஆச்சாரியர்கள் காட்டிக் கொடுக்கிறார்கள்!

    பக்தி யோகத்தால் பல பிறவிகள் கடந்து மோட்சம் கிடைக்கும் என்று வேண்டுமானால் கீதையில் வரலாம்! அந்த நேரடியான வாசகம் எது என்பதைத் தேடிச் சொல்லுங்கள்!

    மற்றபடி இதெல்லாம் மோட்சத்தின் மேல் ஆசை வைத்த பெரியவர்கள்/அறிஞர்கள் உரையாடுவது!
    நாம தான் தோழி கோதையைப் போல எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு-ன்னு பிறவியைத் தானே கேட்கிறோம்? மோட்சத்தையா கேட்கிறோம்? :)
    சம்சார துக்க நிவர்த்தையைக் கேட்கலையே! எம்பெருமானை அல்லவா கேட்கிறோம்? அதனால் இது பற்றிச் சொல்ல அடியேனுக்குத் தெரியவில்லை!

    ReplyDelete
  22. //ஆனா மோக்ஷம் கிடைக்கும்ன்னு வேற சுலோகங்கள்ல சொல்றாருன்னு நினைக்கிறேன்.//

    ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி முடிக்கிறேன்!
    மோட்சம் "கிடைக்கும்"-ன்னு சொல்லுறத்துக்கும், மோட்சம் "தருகிறேன்"-ன்னு சொல்லுறதுக்கும் நிறையவேஏஏஏஏஏஏஏஏ வித்தியாசம் உண்டு! :)

    "தருகிறேன்"-ன்னு அவன் சொல்லுறது, சரணாகதிக்கு மட்டுமே! வேறு எதற்கும் இப்படிக் கீதையில் சொன்னதா தெரியவில்லை!

    சர்வ தர்மாந் பரித்யஜ்ய
    மாம் ஏகம் "சரணம் வ்ரஜ"!
    அகம் த்வா சர்வ பாபேப்யோ
    மோக்ஷ "இஷ்யாமி" மா சுச:

    என் ஆருயிர் தோழன், உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே, இடுக்கண் ஏற்படும் போது, மானம் மறைக்கத் துணி "கிடைக்கும்"-ன்னு சொல்லுறத்துக்கும், துணி "தருகிறேன்"-ன்னு தருவதற்கும் நிறையவேஏஏஏஏஏஏஏஏ வித்தியாசம் உண்டு! :)

    "சரணம் வ்ரஜ"!
    "சரணம் வ்ரஜ"!
    "சரணம் வ்ரஜ"!

    ReplyDelete
  23. உய்ய்க்கொண்டாரைப் பற்றி இவ்வளவு தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி குமரன்.

    ReplyDelete
  24. //பிராட்டியை "முன்னிட்டு" எம்பெருமான் சரணத்தை அடைதல்//

    எம்பெருமானிடம் சரணடைய பிராட்டியிடம் சரண் புகுகிறோம்.. சரி

    ஆனால் பிராட்டியிடம் சரண் அடைய யாரை முன்னிட வேண்டும்?? ஆசார்யனையா ?

    ReplyDelete
  25. என்ன என்னமோ வித்தியாசம் எல்லாம் சொல்றாங்கப்பா. என் அல்ப புத்திக்கு எதுவும் எட்டலை.

    ஒரு உயிர் பகவானின் வார்த்தையில், சிலவற்றில் மற்றும் நம்பிக்கை கொள்வது, சிலவற்றில் கொள்ளாதது என்பது பகவானுக்கும் அந்த உயிருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட சமாச்சாரம். தனிப்பட்ட சமாசாரத்தில் நுழைந்திட எனக்கு உரிமை இல்லை. நான் கழண்டுக்கறேன். :) அடுத்த பதிவில் பார்க்கலாம் குமரன்.

    ReplyDelete
  26. //ஒரு உயிர் பகவானின் வார்த்தையில், சிலவற்றில் மற்றும் நம்பிக்கை கொள்வது, சிலவற்றில் கொள்ளாதது//

    பகவானின் வார்த்தையே என்ன என்று இன்னும் தாங்கள் எடுத்துக் காட்டவில்லை!
    கேட்டும் ஆகி விட்டது! ஆனா இன்னும் பதில் சொன்னபாடில்லை!அதுக்குள்ளாற பகவத் வார்த்தையில் சிலவற்றில் மட்டும் நம்பிக்கை கொள்ளாதது-ன்னு எல்லாம் சும்மானா சொல்லப்பிடாது! :))

    இதுக்கு நேரடியான பதில் தாருங்களேன்...ப்ளீஸ்...
    * கர்ம, ஞான யோகங்களால் மோட்சம் கிட்டும்-ன்னு கீதையில் பகவான் எங்கே கூறுகிறான்? எந்த வார்த்தை?
    * பக்தி யோகத்தால் கிட்டும்-ன்னு சொல்லுறான்! எந்த வார்த்தை?

    * சரணம் வ்ரஜ, மோக்ஷ இஸ்யாமி-ன்னு பகவத் வார்த்தை! - இதைப் போல் இன்ன பிற பகவத் வார்த்தைகளை இங்கே எடுத்துக் காட்டுங்கள்! :)
    ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! :)

    ReplyDelete
  27. சரண உணர்வை அடைந்தால்
    "கிடைக்கும்"-ன்னு சொல்லாமல்,
    "தருகிறேன்"-ன்னு சொல்லுறான்!

    - இந்த ரெண்டுத்துக்கும் அடியேன் வித்தியாசம் காட்டினேன்!

    "கிடைக்கும்"-"தருகிறேன்" = ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்க!

    பொத்தாம் பொதுவாப் பேசாமல், நேரடியாக உரையாடினால், தீபீகையின் ஒளி பரவும் என்பது அடியேன் விண்ணப்பம்!
    "கிடைக்கும்"-"தருகிறேன்" = ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கா? இல்லையா?

    ReplyDelete
  28. Ravi,
    This chain will never end. :)
    I had already mentioned that Sanskrit is a language that easily provides room for multiple interpretations for the same verse. I believe in Swami Vivekananda when he says - "The Yogas of work, of wisdom, and of devotion are all capable of
    serving as direct and independent means for the attainment of Moksha." You may find this statement in "Complete Works of Swami Vivekananda" under the topic Karma Yogam.

    There are several texts from Ramakrishna mutt and various other mutts which provide the meaning for the Bhagavat Gita slokams supporting the above statement. All the texts are by Sanyasins well-versed in the Sanskrit language. All you need to do is get hold them and read them with an "open mind" - that is if you really want to know the answers for your questions. :)

    I already quoted slokam 3-19 when you asked where it is stated that karma yogam provides moksham.

    http://www.asitis.com/3/19.html
    http://acharya.iitm.ac.in/cgi-bin/show_gita_ch.pl?3_3

    People coming from Ramanujar school may find the above interpretation unacceptable. (In Ramanujar's school, the word "param" would be equated to "a higher state" instead of "Supreme".) They tend to believe that karma yogam leads to gnanam and gnanam leads to bhakthi... Again, there are other schools which change the order and emphasise more on gnana yogam. Having read books like the Gospel of Sri Ramakrishna, I don't find any conflict in any interpretation.

    As I had already mentioned, I believe that the Supreme's grace is the root cause for any kind of spiritual progress. To love a personal God unconditionally, we definitely need the Supreme's grace. To get rid of the body consciousness and to contemplate on the impersonal endless continuum, we definitely need the Supreme's grace. I would say that even for open-mindedness we need the Supreme's grace. Once the root cause became clear, I lost interest in the petty details.

    Ok. The only way I can see this conversation coming to an end is like this:
    Let us agree to disagree. :)
    You are free to stick to the interpretation that appeals to you. So am I. :)

    ReplyDelete
  29. :) I don't find any big difference between "you will get it" and "i shall give you". In both cases I am getting what I asked for. In this context, both are the Lord's words and are bound to happen - 200%.

    I don't know why you emphasise so much on how we get moksham - for a vaishnavite its again going to be performing kainkaryam in Vaikuntam. :)

    ReplyDelete
  30. பாடலுக்குப் பொருள் சொல்லும் விதி ரொம்ப நாளாவே இருக்கிறது தான் இராதா. நம்ம ஊர் காவல்துறையைப் போல் நடந்து கொண்டு விட்டேன் - இந்த ஊரில் என்றால் - எது விதியோ எது சட்டமோ அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி/அமல்படுத்திக் கொண்டு இருப்பார்கள். நான் அப்படி செய்யாததால் இதற்கு முன் இந்த விதியைச் சொல்லவில்லை. இரவியிடம் கேட்டீர்களா? அவரும் சில முறை என்னுடைய இந்த விதியைப் பற்றி அவருடைய இடுகைகளின் பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.

    இந்தப் பாசுரத்தை முன்பு படித்திருக்கிறேன் இராதா. மதுரகவியாழ்வாரின் பாசுரம் என்பதை மறந்துவிட்டேன். எங்கே இந்தப் பாசுரம் வருகிறது என்று சொல்லி பொருளும் சொன்னதற்கு நன்றி.

    எல்லாத்துக்கும் Grace தான் காரணம் என்று சொல்லும் நீங்கள் தானே அருள் கொண்டாடும் அடியவர்! நீங்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு நானும் அருள் கொண்டாடும் அடியவரா நடிக்கிறேன். :-)

    அருள் கண்டீர் இவ்வுலகில் மிக்கதே! இந்த வரியை மட்டும் எடுத்துக் கொண்டால் நீங்கள் சொல்லும் 'Grace தான் எல்லாத்துக்கும் அடிப்படை'ங்கற கருத்தே வருகிறது. இந்தப் பாசுரம் ஆயிரம் இன் தமிழ் பாடியவனின் அருளைப் பேசுகிறது என்று தெரிந்தாலும் தனியே அந்த வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பொருள் பார்க்கலாமே என்று தோன்றியது.

    மூன்று குணங்களால் ஆன மாயையைக் கடத்தல் பற்றி நிலைமதியோன் (ஸ்திதப்ரக்ஞன்) பற்றி பேசும் போதும் சொல்வார் என்று நினைக்கிறேன். 'தெய்வ தரிசனம்' கிடைக்கும் வரை வாசனைகள் நீங்காது என்று. சரி தானா?

    ReplyDelete
  31. இரவி,

    துவயப் பொருளை துவயம் மட்டுமே எடுத்துக் கொண்டு பேசும் போது இன்னும் விரிவாகப் பேசுவோம். மிதுனமே பிரதானம் என்பதைப் பற்றி 'திருமகளும் நம்மையுடையவள்' என்ற தலைப்பில் முன்னர் ஒரு முறை கூடலில் இடுகை இட்டதாக நினைவு. உண்மையாகவே (!!!!) புரியவில்லை என்றால் அந்த இடுகையை முடிந்தால் படித்துப் பாருங்கள். (இவை எல்லாம் அறிவினாக்கள் என்று தெரிந்தே தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!).

    இப்படி கேள்விகளாகக் கேட்பதை விட எப்போதும் போல் விளக்கங்களாகச் சொன்னால் இன்னும் அருமையாக இருக்குமே!

    ReplyDelete
  32. சரம என்பதற்கான பெயர் விளக்கத்தைச் சொன்னதற்கு நன்றி இரவி. கீதையில் 'நெறி' என்ற வகையில் கடைசியாகச் சொல்லப்படுவது என்பதும், இதுவே இறுதியும் உறுதியுமான நெறி என்பதும் இதனைச் சரமம் என்று குறிக்கச் செய்தது என்று படித்த நினைவிருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னர் 'பகவான் உவாச' வராது என்பதும் அதனால் இதுவே பகவானின் கடைசிக் கருத்து (கீதையில்) என்பதும் இது உடையவர் கருத்து என்பதும் இன்று தான் அறிந்தேன்.

    இந்த சுலோகத்திற்குப் பிறகும் சில சுலோகங்கள் தொடர்ந்து கண்ணனின் வாய்மொழியாக கீதையில் வருகின்றன என்று தோன்றுகிறது. சரி பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் உடையவர் சொல்ல வந்தது என்ன என்பதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  33. தமிழக வைணவ ஆசாரியர்கள் கரும ஞான தியான யோகங்களால் சித்த சுத்தியும் ஆத்ம சாக்ஷாத்காரமும் (கைவல்ய மோட்சம்) கிடைக்கும் என்றும் பல பிறவிகளில் தொடர்ந்து பக்தி யோகம் செய்தால் (வேத வேதாந்தங்களில் சொல்லப்பட்ட உபாசனாமுறைகளில் ஒன்றைச் செய்வது பக்தி யோகம்) சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், சாயுஜ்யம் என்ற முக்திகளில் ஒன்று கிடைக்கும் என்றும், பிரபத்தியென்னும் சரணாகதியே இந்தப் பிறவியின் இறுதியில் மோட்சத்தைக் கொடுக்கும் என்றும் பல இடங்களில் சொல்வதைப் படித்திருக்கிறேன். அதே போல் மற்ற வேதாந்த மரபில் வரும் ஆசார்யர்கள் கரும ஞான யோகங்களே நேரடியான மோட்சம் தரும் என்றும் சொல்வதையும் படித்திருக்கிறேன். அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவர் ஆசார்யர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.

    அடியேன் அறிவுக்கு ஏற்கும் வழி எது என்றால் 'புல்லாகிப் பூண்டாகி' தொடரில் வந்த நரசிம்மதாசன் எதனைக் கேட்ட பின்னர் கூத்தாடினார் என்பதைப் பார்க்க, புரியும்!. :-)

    'கிடைக்கும்', 'தருகிறேன்' என்ற இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கலாம் இரவி. மற்ற நெறிகளில் இயங்குபவர்கள் அந்நெறிகளே அவர்களுக்கு விடுதலையைத் தரும் என்று நினைப்பதால் 'கிடைக்கும்' என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல் அந்த யோகங்களை முன்னிலைப்படுத்திச் சொல்கிறானோ என்னவோ? இங்கே சரணாகதியில் 'செய்கை' என்று ஒன்றும் தனியாக இல்லை! உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்ற எண்ணமே முதலாக இருக்கிறது. அவனே வழியும் சீவனுமாக இருந்து அடைய வேண்டிய அவனை அடையச் செய்வதால் 'தருகிறேன்' என்று சொல்கிறான் போலும்.

    கைவல்யமும் மோட்சத்தில் ஒரு வகை என்று ஏற்றுக் கொண்டு 'அந்த' வகையில் கரும ஞான யோகங்களும் மோட்சம் தரும் என்று வைணவ ஆசார்யர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று படித்த நினைவு.

    ReplyDelete
  34. இராகவ்,

    இடுகையை இன்னொரு தடவை நல்லா படிங்க. உய்யக்கொண்டாரைப் பற்றி நானேவா சொன்னேன்?! இரவி சொன்னதை நான் எழுதினேன். அவ்வளவு தான். அவர் உடையவர்! நான் கூரத்தாழ்வான்! (அப்பாடா! எப்படியோ என் முதுகுல நானே தட்டிக் குடுத்துக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது! :-) )

    உங்கள் நன்றியெல்லாம் அவருக்குத் தான் போக வேண்டும்!

    ReplyDelete
  35. பிராட்டியை முன்னிட்டு பெருமாளைச் சரணடைகிறோம் என்று சொல்வது வழக்கம் தான் என்றாலும் 'மிதுனமே பிரதானம்' என்று வேதாந்தாசாரியர் சொன்னது இருவருமே ஒரே நேரத்தில் சரணடைவதற்கு உரியவர்கள் என்பது தான் என்று நினைக்கிறேன் இராகவ். இருவரும் சேர்ந்ததே பரம தத்துவம் என்று சொல்லுவது, பிராட்டியை விட்டுத் தனியே பெருமாளை மட்டும் அடைய நினைத்தவர்களுக்கு காமவல்லி(சூர்ப்பநகை)யையும் பெருமாளை விட்டு பிராட்டியை மட்டுமே அடைய நினைத்தவர்களுக்கு இராவணனையும் எடுத்துக்காட்டாகச் சொல்லுவது, இருவரும் சேர்ந்தே விடுதலை தருபவர்கள் என்று சொல்லுவது, ஏகம் ஏவ அத்விதீயம் - ஒன்றே இரண்டில்லாதது என்ற வேத வாக்கியத்திற்கு இருவரும் பரம்பொருளாக இருப்பது எப்படி எதிரில்லாதது என்று விளக்குவது என்று நிறைய வைணவ ஆசார்யர்களின் அருள்மொழிகளில் படிக்கலாம் இராகவ்.

    பிராட்டியிடமும் பெருமாளிடமும் ஒரே நேரத்தில் சரணாகதி செய்யும் போது ஆசாரியனை முன்னிட்டுச் செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது! நேரடியாக இருவரிடமும் சரணாகதி செய்வதும் இருக்கிறது! செய்யாமல் 'அவனே பார்த்துக் கொள்வான்' என்று எந்தக் கவலையும் இல்லாமல் சரணாகதி என்று தனியாக ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் இருக்கிறது!

    ReplyDelete
  36. //அவர் உடையவர்! நான் கூரத்தாழ்வான்.//
    உடையவர் திருவடிகளே சரணம் !
    கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் !
    :)

    ReplyDelete
  37. //அருள் கண்டீர் இவ்வுலகில் மிக்கதே! இந்த வரியை மட்டும் எடுத்துக் கொண்டால் நீங்கள் சொல்லும் 'Grace தான் எல்லாத்துக்கும் அடிப்படை'ங்கற கருத்தே வருகிறது.//
    ரொம்ப நன்றி குமரன். :)
    ரவி இந்த வரிக்கு பொருள் சொல்வார் என்று ஒரு நப்பாசையுடன் இருந்தேன். :)

    ReplyDelete
  38. //இரவியிடம் கேட்டீர்களா?//
    அவர் தற்பொழுது என் மீது செம கோபத்தில் இருக்கிறார். :)
    கொஞ்ச நாள் ஆகட்டும். கேட்கிறேன். :)

    ReplyDelete
  39. //மூன்று குணங்களால் ஆன மாயையைக் கடத்தல் பற்றி நிலைமதியோன் (ஸ்திதப்ரக்ஞன்) பற்றி பேசும் போதும் சொல்வார் என்று நினைக்கிறேன். //
    கீதை 7-14 ஸ்லோகத்தில் இரண்டாவது வரிக்கு "ஸ்ரீ பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ்"-ல் கொடுத்துள்ள ப்ரதி பத அர்த்தத்தை இங்கு தட்டச்சு செய்கிறேன்.
    "யே மாம் ஏவ ப்ரபத்யந்தே தே ஏதாம் மாயாம் தரந்தி"
    யே - எவர்கள்
    மாம் ஏவ - என்னையே
    ப்ரபத்யந்தே - சரணம் அடைகிறார்களோ
    தே - அவர்கள்
    ஏதாம் மாயாம் - இந்த மாயையை
    தரந்தி - தாண்டுகிறார்கள்.

    "ப்ரபத்தி", "ஆஸ்ரயம்(ashrayam)" போன்ற பதங்களை சரணாகதி என்ற பொருளில் கொண்டு நிறைய உரைகள் உள்ளன. ஸ்திதப்ரக்ஜனை பற்றி இந்த அத்தியாயத்தில் வருகிறதா என்று நிதானமாக படித்து பார்க்க வேண்டும் குமரன்.
    மறுமுறை கீதையை படிக்கத் தூண்டும் உங்களுக்கு கோடி நன்றிகள். :)

    ReplyDelete
  40. //பிராட்டியிடமும் பெருமாளிடமும் ஒரே நேரத்தில் சரணாகதி செய்யும் போது ஆசாரியனை முன்னிட்டுச் செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது! நேரடியாக இருவரிடமும் சரணாகதி செய்வதும் இருக்கிறது! செய்யாமல் 'அவனே பார்த்துக் கொள்வான்' என்று எந்தக் கவலையும் இல்லாமல் சரணாகதி என்று தனியாக ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் இருக்கிறது!//
    மிக்க நன்றி. :)

    ReplyDelete
  41. //மூன்று குணங்களால் ஆன மாயையைக் கடத்தல் பற்றி நிலைமதியோன் (ஸ்திதப்ரக்ஞன்) பற்றி பேசும் போதும் சொல்வார் என்று நினைக்கிறேன். 'தெய்வ தரிசனம்' கிடைக்கும் வரை வாசனைகள் நீங்காது என்று. சரி தானா? //
    ஸ்தித ப்ரக்ஞனின் லக்ஷணங்களை சாங்கிய யோகத்தில் (கீதை இரண்டாவது அத்தியாயம்) அர்ஜுனன் கேட்கும்பொழுது (ஸ்லோகம் ஐம்பத்து நான்கு) பகவான் விரிவாக சொல்கிறான். ஸ்லோகம் ஐம்பத்து ஒன்பதில் வாசனைகள் பற்றி நீங்கள் சொல்லும் விஷயம் பேசப்படுகிறது.
    http://acharya.iitm.ac.in/cgi-bin/show_gita_ch.pl?2_5

    ReplyDelete
  42. //மற்ற நெறிகளில் இயங்குபவர்கள் அந்நெறிகளே அவர்களுக்கு விடுதலையைத் தரும் என்று நினைப்பதால் 'கிடைக்கும்' என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல் அந்த யோகங்களை முன்னிலைப்படுத்திச் //
    அழகாக சொன்னீர். "பலனில் எந்த வித பற்றுதலும் இல்லாமல் கடமையைச் செய்" என்ற வார்த்தையில் நம்பிக்கை வைத்து கர்ம யோகம் செய்பவர் எத்தனையோ பேர். இவர்கள் எவரும் "தன்னை" முன்னிலை படுத்துபவர் இல்லை. "தன் கர்மா" என்று எல்லாம் எண்ணுவதும் இல்லை. பகவானின் வார்த்தையை தான் முதலாகக் கொள்கிறார்கள். அவன் சொன்னானே என்று தான், பலனில் அக்கறை இல்லாமல் கடமையை மட்டும் செய்கின்றனர். இதுவும் ஒரு வகை இறை ஆராதனை தான். அவனை மகிழ்விக்க தான் செய்கிறது.
    கீதையை படித்தாலே அவனை பூஜித்ததாகக் கொள்கிறான்.(ஸ்லோகம் 18-70) அவன் வார்த்தையை கடைப்பிடித்தால்...அதை விட அவனுக்கு மகிழ்ச்சி தருவது வேறு என்ன இருக்க முடியும்? மற்ற யோகங்களை பின் பற்றுபவர் அவனை மகிழ்விப்பதில்லை என்னும் கூற்று, அவன் வார்த்தையை பின்பற்றுவதனால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று சொல்வது போல.

    ReplyDelete
  43. //உடையவர் திருவடிகளே சரணம் !
    கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் !//

    அப்படியே இதையெல்லாம் கூட சேர்த்துக்கோங்க இராதா.

    வியாசர் திருவடிகளே சரணம்.
    விநாயகர் திருவடிகளே சரணம்.

    மாணிக்கவாசகர் திருவடிகளே சரணம்.
    திருச்சிற்றம்பலமுடையான் திருவடிகளே சரணம்.

    :-)

    ReplyDelete
  44. யப்பா !! ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு பேரா ? :) "ஒருவர் சொல்ல இன்னொருவர் எழுத" என்ற பட்டியல் நன்றாக தான் இருக்கிறது. :)

    ReplyDelete
  45. இந்தப் பட்டியல்ல இன்னும் ரெண்டு பேரு பேரும் சேரப் போகிறது. அடுத்த இடுகை வரை காத்திருக்கவும். :-)

    ReplyDelete
  46. அடப் பாவிங்களா
    கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வர ஊருக்குப் போனா, என்னைய வச்சி இங்க இம்புட்டு கும்மியா? இதுக்கு அண்ணன் குமரனும் வக்காலத்தா? :)

    ராதாவைப் பார்த்தது பற்றிப் பல தொடர் பதிவுகளே போடணும்! அம்புட்டு இருக்கு விசயம்! :)
    நான் வேற இந்த சமயம் பார்த்து, பதிவிடா விரதமான கிரந்த சன்னியாசத்தில் இருக்கேன்! ஐயகோ! :)

    ReplyDelete
  47. நல்ல பதிவு, நல்ல உரையாடல் நடை. நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  48. வாங்க இரவி. ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா? உங்களுக்காகத் தான் அடுத்த இடுகையைப் போடாம காத்துக்கிட்டு இருக்கேன். இனிமே அடுத்த இடுகையை எழுதத் தொடங்க வேண்டியது தான்.

    ReplyDelete
  49. நன்றி பித்தனின் வாக்கு ஐயா.

    ReplyDelete
  50. //ஆனால் இதற்குப் பின்னர் 'பகவான் உவாச' வராது என்பதும் அதனால் இதுவே பகவானின் கடைசிக் கருத்து (கீதையில்) என்பதும் இது உடையவர் கருத்து என்பதும் இன்று தான் அறிந்தேன்.//

    :)
    இந்த சுலோகம் கீதையில் 18.66

    இதற்குப் பிறகு அர்ஜூன உவாச வரும் (18.73), சஞ்சய உவாச வரும் (18.74); ஆனால் பகவான் உவாச வராது!

    * எனவே இதுவே இறுதியானது! அதனால் "சரம" சுலோகம்!

    * இதற்கு அப்புறம் பகவான், மானுடத்துக்கு வேறு பாதை ஏதும் காட்டவில்லை! "சரணம் வ்ரஜ" என்று காட்டி அனைத்தும் சம்பூர்ணம் செய்கிறான்! எனவே இதுவே சம்பூர்ணமான நெறி!
    உபாயம், உபேயம் என்று அனைத்தும் உள்ளடக்கிய "சரணம்" என்கிற சரணாகதியை மானுடத்துக்குத் தானே காட்டிக் கொடுத்து, தன் வார்த்தையை நிறைவு செய்கிறான் இறைவன்!

    சரணம் வ்ரஜ = Ultimate Word! இறுதியான வார்த்தை!
    சரம = Ultimate! இறுதியானது!
    அதனால் இது "சரம" (ultimate) சுலோகம்!

    //இந்த சுலோகத்திற்குப் பிறகும் சில சுலோகங்கள் தொடர்ந்து கண்ணனின் வாய்மொழியாக கீதையில் வருகின்றன என்று தோன்றுகிறது//

    அவை அனைத்தும் பல ஸ்ருதி மற்றும் நூல் விதிமுறைகள் போன்ற சுலோகங்கள்! நெறி காட்டும் சுலோகங்கள் அல்ல!

    18.66 - சரண நெறியைக் காட்டிய பின்....
    18.67 to 18.72 - கீதை நூலுக்கான code of conduct & நூற் பயன் (பல ஸ்ருதி) மட்டுமே!

    18.67, 18.69 - கீதையை இன்னாருக்குச் சொல்லலாம், இன்னாருக்குச் சொல்லக்கூடாது!
    18.70, 18.71 - கீதை வாசித்து வழிபடுவோர்கள், பாவம் தொலைந்து, நல்லுலகம் அடைவர்கள்!
    18.72 - உன் ஐயங்கள் தீர்ந்ததா அர்ஜூனா? என்ற கேள்வி!

    18.73 - அர்ஜூனன் பேச்சு!
    18.74 to 18.77 - சஞ்சயன் பேச்சு!
    18.78 - கீதை நிறைவு!

    அதனால் தான் சரணம் வ்ரஜ என்ற சுலோகமே பகவான் காட்டும் நெறியில் உறுதியானது! இறுதியானது! Ultimate! என்று உடையவர் காட்டிக் கொடுக்கிறார்! அந்த சுலோகத்துக்கு அப்புறம் பகவானின் தர்ம உபதேசங்கள் இல்லை!

    தேசிகரும் இதைத் தான்...
    "சாதகமே சரண நெறி என்று உனக்கு
    வேறு சாதகங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா!" என்று சரம சுலோக விளக்கமாகப் பாடிப் போந்தார்!

    //சரி பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் உடையவர் சொல்ல வந்தது என்ன என்பதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்//

    இப்போது ஏன் உடையவர் அப்படிச் சொன்னார் என்று புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  51. //'கிடைக்கும்', 'தருகிறேன்' என்ற இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கலாம் இரவி.

    மற்ற நெறிகளில் இயங்குபவர்கள் அந்நெறிகளே அவர்களுக்கு விடுதலையைத் தரும் என்று நினைப்பதால் 'கிடைக்கும்' என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல் அந்த யோகங்களை முன்னிலைப்படுத்திச் சொல்கிறானோ என்னவோ?//

    Exactly!
    சரியாகப் புரிந்து கொண்டீர்கள்! :)

    மானம் காக்க, கை, ஆடையைத் தேடிப் போகும் போது...
    உனக்கு ஆடை "கிடைக்கும்" என்று சொல்லிப் போவதற்கும்...

    டேய், நான் இருக்கேன்-டா உனக்கு, "தருகிறேன்"...
    இதோ என்று ஆடையைத் தன் கையால் தருவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு!

    * கிடைக்கும் = மற்ற யோகங்கள்!
    * தருகிறேன் என்று இறைவனே சொல்லும் நெறி = சரணாகதி!

    //அந்நெறிகளே அவர்களுக்கு விடுதலையைத் தரும் என்று நினைப்பதால்//

    தங்கள் "செய்கைகளே" தங்களுக்குக் கூலி பெற்றுத் தரும் என்ற ஸ்வயம் அங்கு தூக்கலாக இருப்பதால், காதல் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு "கிடைக்கும்" என்று மட்டுமே சொல்கிறான்!

    அவர்களை ஒதுக்கவில்லை! அவர்களுக்கும் "கிடைக்கும்" தான்! ஆனால் "தருகிறேன்" என்று காதலுடன் இறைவன் பேசவில்லை! மம ப்ரியஹ என்று பேசுவதும், நானே "தருகிறேன்" என்று சொல்வதும்...சரணத்தில் திளைக்கும் காதல் அன்பர்களுக்கு மட்டுமே!

    ReplyDelete
  52. //There are several texts from Ramakrishna mutt and various other mutts which provide the meaning for the Bhagavat Gita slokams supporting the above statement.//

    There is no need to bisect and dissect what Ramanuja said or Ramakrishna said or Swami Vivekananda said...
    The only question here is: What Krishna said...As simple as that!

    To know what Krishna said, directly read the gita with an "open" mind, like a layman. The Lord has abundant "grace", so he talks in a simple language that even laymen can understand.

    All vyakyaanams and interpretations, including that of Ramanuja, are just peripherals. Gita is the core. Directly reading from it will throw light...

    //People coming from Ramanujar school may find the above interpretation unacceptable//

    All schools are the same! There is no difference between Ramanuja or Vivekananda. All Great Souls speak alike! All hearts beat alike!

    Vivekananda might talk about the sun from the east coast and Kulasekara azhwar from the west coast. So it looks kinda different. But it is only "apparent"! Both talk abt sun and the sun is the same! :)

    //Once the root cause became clear, I lost interest in the petty details//

    After having lost interest in petty details, why there is so much support running for karma yogam? :)
    That too when nothing is talked "low" abt karma yogam? :)

    The only thing that is said here is karma yogam leads to atma saakshaatkaram.
    Karma yogam is good. The Lord himself talks about it. It should not be demeaned.
    But what is being said here is - "dont just stop at karma yogam - pine for the lord as he pines for you". Hope that clears the air :)

    ReplyDelete
  53. @ராதா
    //:) I don't find any big difference between "you will get it" and "i shall give you". In both cases I am getting what I asked for.//

    ஹா ஹா ஹா
    அவன் கையால தரானோ, அல்லது, ஆட்டோமேட்டிக்கா கிடைக்குதோ, ஆக மொத்தம் "எனக்கு" கிடைச்சா சரி! I am getting what I asked for...என்ற மனப்பான்மை! - இது ஒரு பக்கம்...

    எனக்குன்னு தனியா ஒன்னும் இல்லை! எனக்குப் பொருள் கிடைக்குதா என்பது முக்கியம் இல்லை! பொருளை விட, அவன் கையால் தொட்டுக் கொடுக்கிறானே, அந்த இன்பமே போதும் என்ற மனப்பான்மை! - இது ஒரு பக்கம்...

    ரெண்டுல எது உத்தமம்? பாமரனைக் கேட்டாக் கூட பதில் சொல்லீருவான்! :)

    ஆளுயர மாலை உனக்கே தானா எப்படியோ "கிடைக்கும்" என்பதற்கும்...

    அரை முழம் மல்லிப்பூ நான் "தருகிறேன்"-ன்னு அவன் கையால் காதலிக்கு வாங்கித் தருவதற்கும்...
    ...உள்ள வேறுபாடு இது தான்! :)


    * கிடைக்கும் = மற்ற யோகங்கள்!
    * தருகிறேன் = சரணாகதி!

    இதுவே கீதை காட்டும் நெறி!
    Not even an iota of confusion, interpretation, school of thought etc etc...Be it Sankara, Ramanuja, Vivekananda, Aurobindo, whoever it is! Go to the roots. Go to the words of the Lord. It is plain simple language...
    உனக்குத் தானாக் கிடைக்கும் vs நான் என் கையாலேயே தருகிறேன்! Ordinary man knows the difference. Let the wise keep intrepreting! :)

    ReplyDelete
  54. //மற்ற யோகங்களை பின் பற்றுபவர் அவனை மகிழ்விப்பதில்லை என்னும் கூற்று, அவன் வார்த்தையை பின்பற்றுவதனால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று சொல்வது போல//

    மற்ற யோகங்களைப் பின்பற்றுபவர் அவனை மகிழ்விப்பதில்லை என்று எங்குமே சொல்லவில்லை!
    மற்ற யோகங்களைப் பின்பற்றுபவர் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைகிறார்கள் என்று மட்டுமே சொன்னேன்!

    ஆத்ம சாக்ஷாத்காரம் மிகவும் முக்கியம்! தன் ஆத்மாவை அறிந்தால் தானே பரமாத்மாவை அறிய முடியும்?
    அதனால் ஆத்ம சாக்ஷாத்காரம் முக்கியம்! கர்ம யோகம் முக்கியம்!
    அது முதல் படி! ஆனால் அதுவே இறுதி அல்ல!

    பகவானும் கீதையில் அந்த அடிப்படையிலேயே கட்டமைக்கிறான்! முதல் படியாக கர்ம யோகத்தைக் காட்டி, படிப்படியாக இன்ன பிற யோகங்களைக் காட்டி, ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றுத் தெளிந்து...
    ஆத்மாவின் நோக்கம் பரமாத்மாவை அடைவதே என்று பரமாத்ம சாக்ஷாத்காரத்தைக் காட்டி, இறுதியாக சரணம் வ்ரஜ என்கிறான்! காதலுடன் "தருகிறேன்" என்கிறான்!

    பகவான் இத்தனை எளிமையாகச் சொல்லி வைக்க...
    படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக, அவரவர், அவரவர் பெகாவத் கீதாவை எழுதிக் கொள்கிறார்கள்! :))

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. //I already quoted slokam 3-19 when you asked where it is stated that karma yogam provides moksham//

    tasmad asaktah satatam
    karyam karma samacara
    asakto hy acaran karma
    param apnoti purusah

    இதைத் தானே சொல்றீங்க? :)
    புருஷஹ பரம் அப்னோதி = புருஷன் மேன்மையை அடைவான்!

    பரத்தை அடைவான் என்று தான் சொல்லி இருக்கு! பரப்பிரம்மத்தை அடைவான்-ன்னு சொல்லலையே! பர நிலையை அடைவது மோட்சமா? பரப்பிரம்மத்தை அடைவது மோட்சமா? :)

    பரம் என்று தானே சொல்லி இருக்கு! மோட்சம் என்று explicit-aa சொல்லலையே? :)

    மோட்ச இஸ்யாமி-ன்னு சரணத்துக்கு நெத்தியடியா direct-aa சொல்றான் கண்ணன்!
    அது போல மற்ற யோகங்களுக்கு எங்கே direct-aa சொல்லி இருக்கு-ன்னு அருள் கூர்ந்து காட்டுமாறு வேண்டிக் கொள்கிறேன்! :)

    எனக்கு விவேகானந்தர் சொன்னாரு, இராமானுஜர் சொன்னாரு எல்லாம் வேணாம்! :)
    கண்ணன் எங்கே சொல்கிறான்? அது மட்டும் காட்டுங்க! :)

    ReplyDelete
  57. //புருஷஹ பரம் அப்னோதி = புருஷன் மேன்மையை அடைவான்!
    //

    கர்ம யோகத்தில் ஒழுகுபவன் மேன்மையை அடைவான்! மேன்மையை அடைந்து? அதற்கு அப்புறம்? மேன்மை மட்டுமே போதுமா? மேன்மையை அறிவதும், அடைவதும், எம்பெருமானிடத்தில் காதலாகிக் கசிவதற்கே! = பரமாத்ம சாக்ஷாத்காரம்! அதைத் தான் அடுத்து வரும் அத்தியாயங்களில் சொல்கிறார்!

    சரி, "பாழாப் போன" மோட்சம் தான் கண்ணை உறுத்துதா? :)
    உங்க வழிக்கே வரேன்! கர்ம யோகமே போதும்! அது ஒன்னே மோட்சத்தைக் "கொடுக்கும்" -ன்னு இந்த சுலோகம் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம்! பரம் = மோட்சம் என்று உங்க கணக்குப் படியே வைத்துக் கொள்வோம்! :)

    அப்போ கர்ம யோகத்துக்கு மோட்சத்தைச் சொன்ன கண்ணன், ஞான யோகத்துக்கு ஒன்னுமே சொல்லலையா? :) ஞான யோகத்துக்கும் இப்படி "பரம் அப்னோதி"-ன்னு காட்டும் சுலோகம் எங்கே? காட்டுங்க பார்ப்போம்! :))

    ஹா ஹா ஹா
    ஹைய்யோ, ஹைய்யோ!
    கீதையைக் கீதையாப் படிச்சாலே பாதி வெளங்கிடும்!
    பாழாப் போன மோட்சம்! அது யாருக்கு வேணும்? எங்களுக்கு எம்பெருமானுடைய காதல் அல்லவா வேண்டும்?

    பரம் அப்னோதி = மேன்மையை அடைவான் எல்லாம் ஓக்கே தான்!
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! பாவிகளே வைகுந்தம் புகத் தடையில்லை! அப்படி இருக்க, கர்ம யோக/ ஞான யோக ஆட்களும் கூட வைகுந்தம் அல்லவா புகுவர்! இது எங்களுக்குத் தெரியாதா?

    கண்ணன் கீதையில் மோட்சம் "தருகிறேன்" என்பது தான் சூட்சுமம்! "தருகிறேன்" என்ற அந்த ஒற்றைச் சொல் தான் சகலமும்!

    பரம் "அடைவார்கள்", அது "கிடைக்கும்" என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! நீயாகவே "அடைவாய்", உனக்கு "கிடைக்கும்"-ன்னு எல்லாம் விட்டேத்தியாச் சொல்லாம, அவன் கையால் ஆசையாத் "தருகிறேன்"-ன்னு சொல்வது சரண நெறிக்கு மட்டுமே!

    யாரு கேட்டா மோட்சம்? மோட்சம் எங்களுக்குத் தேவையில்லை!
    ஆனால் அவன் கையால உரிமையோட "தருகிறேன்"-ன்னு சொல்றான் பாருங்க! அதான் எங்களுக்கு வேணும்! அரை முழம் பூவானாலும், புருசன் கையால் காதல் மனைவிக்கு "தருகிறேன்"-ன்னு சொல்றான் பாருங்க! அந்த உறவு தான் எங்களுக்கு வேணும்!

    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
    இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா....
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு நாங்கள்!

    உனக்"கே" நாம் ஆட்செய்வோம்!
    த்வாம் ஏகம் சரணம் வ்ரஜ!
    த்வாம் ஏகம் சரணம் வ்ரஜ!
    மோட்ச "இஸ்யாமி"!
    மோட்ச "இஸ்யாமி"!

    ReplyDelete
  58. //எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையை தாண்டுகிறார்கள்//

    இதுவும் சரணத்துக்கு மட்டுமே! மற்ற யோகங்களில் எப்படி மாயையைத் தாண்டுகிறார்கள் என்பதை கீதை வரிகளில் இருந்தே எடுத்துச் சொல்லுமாறு அருள் கொண்டாடிக் கேட்டுக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  59. //செய்யாமல் 'அவனே பார்த்துக் கொள்வான்' என்று எந்தக் கவலையும் இல்லாமல் சரணாகதி என்று தனியாக ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் இருக்கிறது!//

    இது தான் சூப்பரு! :)
    நன்றி குமரன் இதைச் சொன்னதற்கு! :)

    சரணாகதி என்பது தனியா ஒன்னு செய்யணும் என்பதான "சடங்கு" இல்லை!
    சரணாகதி என்பது அனிச்சை! மனோ நிலை! பாவித்து இருக்கும் நிலை! உள்ளத்தில் ஊறி வரும் காதல் நிலை! அவன் உள்ள உகப்புக்கே இருக்கும் ஆசை நிலை! சரணம் சரணம் ப்ரபத்யே!

    ReplyDelete
  60. //அருள் கண்டீர் இவ்வுலகில் மிக்கதே!//

    //ரவி இந்த வரிக்கு பொருள் சொல்வார் என்று ஒரு நப்பாசையுடன் இருந்தேன். :)//

    ஹா ஹா ஹா
    ராதா ஒன்னு கேட்டு, அது இல்லை-ன்னு மறுக்க எனக்கு மனசே வராது! :)
    ராதாவுக்காக இதோ இஸ்யாமி, இஸ்யாமி! :)

    //அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே//

    ராதா சொன்னது அனைத்துமே சரி! எம்பெருமானின் அருள் (Grace) இன்றி வேறொன்று இல்லை!
    அது ஞான யோகமோ, கர்ம யோகமோ, பக்தி யோகமோ, மோட்சமோ, இல்லை லூசுப் பசங்க பேசும் சரணாகதியோ... :)
    எம்பெருமானின் அருள் (Grace) இன்றி வேறொன்று இல்லை!

    எம்பெருமான் அருள் காட்டுவான் தான்! அரக்கருக்கும் மோட்சம் கொடுப்பான்! அப்படியிருக்க நிச்சயம் கர்ம/ஞான யோகிகளுக்கு மோட்சம் உண்டு! 100% sure!

    ஆனால் இந்த அருள் இருக்கிறதே, அருள், I mean "Grace"...
    அது எம்பெருமான் நம் மீது காட்டுவது மட்டுமா?

    இல்லை,...நாம் அவன் மீது காட்டுவதும் "Grace" தான்!

    அருள் கொண்டாடி, அருள் கொண்டாடி என்று சொல்லும் போதெல்லாம்....
    நாம் அவன் மீது காட்டும் அன்பும் அருளும் கொண்டாடி என்றே பொருள்!

    கர்ம யோகம் மட்டுமே பண்ணிட்டு கம்முனு இருப்போம். பலன்களில் ஆசை வைக்காமல் செயலை மட்டும் செஞ்சிட்டாலே போதும்! மோட்சம் தான் - இப்படி வாய் கிழியப் பேச வேணா நல்லா இருக்கும்! :) பலனில் ஆசையில்லாம ஒருத்தனையாச்சும் இருக்கச் சொல்லிப் பாருங்க உலகத்துல? ஆனானப்பட்ட ராமகிருஷ்ண மடமோ, இல்லை இராமானுஜர் மடமோ, கூடச் செய்ய மாட்டாங்க! எதுக்கு மடங்களுக்கு இத்தனை சொத்து? :))

    எம்பெருமான் அருள் காட்டுவான் தான்! அரக்கருக்கும் மோட்சம் கொடுப்பான்!
    ஆனால் அவன் எப்படியும் அருள் காட்டி விடுவான்! அரக்கருக்கும் Grace பொழிந்து விடும்-ன்னு இல்லாமல்,
    நாமும் அவனிடத்தில் அருள் காட்டுவோம், காதல் கொள்வோம், அவன் உள்ள உகப்புக்கு இருப்போம் என்ற மனப்பான்மை வரவேணும்!

    அம்மா எப்படியும் நமக்குச் சோறு போட்டுருவா-ன்னு போயிடறோமா?
    நீ சாப்பிட்டியாம்மா-ன்னு பதிலுக்கு வாஞ்சையா கேக்கறோம்-ல்ல? அது தான் உண்மையான "அருள் கொண்டாடுதல்"!

    ராதா எடுத்துக்காட்டிய மதுரகவி பாசுரமும் அதையே சொல்கிறது!
    பகவான் அருளில் Grace-la எல்லாரும் மோட்சம் போயிருவாங்க-ன்னு நம்மாழ்வார் தன்னோட கர்ம யோகம் மட்டும் பண்ணிட்டுப் போயிருக்கலாமே! ஏன் போகலை?

    * அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்! - எதுக்காக?
    = அருள் கொண்டாடும் அடியவர் இன்புற!

    * அருளினான் அவ்வருமறையின் பொருள் - எதுக்காக?
    = அருள் கொண்டாடும் அடியவர் இன்புற!

    இது தான் "Grace"! இது தான் "அருள்"! - நாம் அவன் மீது காட்டும் அருள்!
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே!

    * எப்படியோ எனக்கு மோட்சம் கிடைச்சாப் போதும்-ன்னு இருப்பது அருள் இல்லை!
    * கர்ம யோகம்/ஞான யோகம் மட்டுமே பண்ணிட்டு, அவன் சொன்ன சொல்லைப் பண்ணிட்டேன்! Where is my moksham? It is automatically guaranteed-ன்னு சொல்வது அருள் இல்லை!

    * அவன் நமக்கு அருள் கொண்டாட,
    நாமும் அவனுக்கு அருள் கொண்டாடி இருப்பதே, அருள், Grace!
    * அவனோடு உறவாடி, அவன் உகப்பைக் கண்டு உகப்பதே அருள், Grace!

    இந்தக் காதல் மனோபாவத்தை இதயத்தில் வளர்க்க சரணாகதி உதவும்!

    மற்ற யோகங்கள் வேறு பலவற்றைக் காட்டும்!
    ஆனால் அவனுக்கு நாம், நமக்கு அவன் என்று இருக்க சரணாகதி காட்டும்!
    இந்தக் காதலுக்குத் தான் அந்தக் காதலன், "தருகிறேன்", "தருகிறேன்" என்று கீதையில் கனிவுடன் சொல்கிறான்!

    * அதனால் அருள் கொண்டாடுவோம்! = அவன் மீது நாம்!
    * நம் மீது அவன் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்!
    * அவன் மீது நாம், நாம வாஞ்சையுடன் கொண்டாடுவோம்!

    //You are free to stick to the interpretation that appeals to you. So am I. :)//

    There is no interpretation! There is only one word! His word! Gita!

    //Let us agree to disagree. :)//

    There is nothing to disagree. Itz all Hisagree! :)

    அருள் கொண்டாடும் "அடியார் இன்புற"
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே!

    ஹரி ஹரி ஹரி ஹரி
    ஹரி ஹரி ஹரி ஓம்!

    ReplyDelete