Monday, February 09, 2009
சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள் கூடும் கூடல்!!!
காணக் கண் கோடி வேண்டும்! ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்
(காணக்)
மானாட மழுவாட மதியாட புனலாட
மாலாட அயனாட மங்கை சிவகாமியாட
(காணக்)
நீர் பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா!
பார் பூத்த உந்திப் பரந்தாமனே கண்ணா!
கார் மேவும் ச்ரிரங்கம் காவிரிக் கரை மேலே
கள்ளத் துயில் கொண்டுலகைக் காக்கும் பெருமாளே!
ஏன் பள்ளி கொண்டீரையா? ஸ்ரீரங்கநாதா!
(ஏன்)
மணம் வீசும் கதம்ப வன வாசினீ!
மாமதுராபுரி ஆளும் தேவி மகராணி!
திக்குவிஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி!
(மணம்)
(கானக்) குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே!
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே!
ஒரு மாங்கனி வேண்டிச் சிறுபிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா!
உன் திருக்கோவில் வலம் வர நான் என்ன
புண்ணியம் செய்தேன் வடிவேலா!
பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே!
(பச்சை)
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!
:)
ReplyDeleteதலைப்பைப் பாத்து பயந்தே (மகிழ்ந்தே) போயிட்டேன் :)
முன்பு சொல்-ஒர்-சொல்-க்கு செஞ்சாப் போல...
அங்குள்ள எல்லா இடுகைகளையும், இங்கே இழுத்து விட்டீர்களோ?-ன்னு ஒரு இன்ப அதிர்ச்சி :)))))
கீழே பதஞ்சலி, மாணிக்கவாசகப் பெருமான் இருக்காங்களே!
ReplyDeleteஅப்படின்னா ஆசார்ய ஹ்ருதயம் வலைப்பூ கூடச் சேர்த்து இருக்கணும் தானே? :))
தலைப்பை இடும் போதே நினைத்தேன் இரவி. அப்படி ஒரு பொருளும் வரப் போகிறது என்று. :-)
ReplyDeleteஆசார்ய ஹ்ருதயத்தில் நான் இதுவரை எந்த இடுகையும் இடவில்லை. அது மட்டுமில்லை - அது இப்ப முழுக்க முழுக்க 'உங்கள்' பதிவு. அதனை நான் எப்படி இங்கே குறிப்பது? :-)
//அது மட்டுமில்லை - அது இப்ப முழுக்க முழுக்க 'உங்கள்' பதிவு. அதனை நான் எப்படி இங்கே குறிப்பது? :-)//
ReplyDeleteஹா ஹா ஹா!
என் பதிவு-ன்னா தாராளமாகக் குறிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கே!
இங்கு குறிக்கவில்லை என்பதால், அது அடியேன் வலைப்பூ இல்லை-ன்னே நினைக்கிறேன்! :)
//சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள்//
ReplyDeleteஇதை நான் வ"ண்"மையாகக் கண்டிக்கிறேன்!
சின்னவங்களை, இளையவங்களைத் தான் எப்பமே மொதல்ல சொல்லுவாங்க!
அப்படின்னா எங்க முருகனருள் தானே பர்ஷ்ட்டு? மொதல்ல துவங்கியதும் அதானே? :))
நாட்டாமை...வரிசையை மாத்தி சொல்லு :))
முருகனருள், கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, சிவன் பாட்டு!
வலைப்பதிவுகளின்/வலைப்பூக்களின் வரிசையை சொல்லியிருந்தால் நீங்கள் சொன்ன வரிசையில் தான் சொல்ல வேண்டும். ஆனால் நான் இந்தப் பாடலில் வரும் வரிசையைத் தானே சொன்னேன். அதன் படி இந்தத் தலைப்பே சரி. :-)
ReplyDeleteஅப்புறம் சொல்ல மறந்தேனே. உங்கள் வண்மையைத் தான் மாதவிப்பந்தலில் பார்க்கிறேனே. ஆன்மிக அமுதத்தை எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்குவதால் உங்களைத் தான் இனிமேல் 'வள்ளலார்' என்று அழைக்கவேண்டும். அந்த வள்ளலார் வடசிதம்பரம் கட்டியதைப் போல் நீங்கள் மேல்திசையில் ஒரு சிதம்பரம் கட்டினாலும் தகும். :-)
ReplyDeleteதிருவரங்கம் மட்டுமே அமெரிக்கக் கீழ்க்கரைக்கு வந்தால் போதுமா? திருச்சிற்றம்பலமும் வரட்டும். :-)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆன்மிக அமுதத்தை எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்குவதால் உங்களைத் தான் இனிமேல் 'வள்ளலார்' என்று அழைக்கவேண்டும். அந்த வள்ளலார் வடசிதம்பரம் கட்டியதைப் போல் நீங்கள் மேல்திசையில் ஒரு சிதம்பரம் கட்டினாலும் தகும். :-)//
இப்படி ரவுசு பண்ணி ரவுசு பண்ணியே....
:)))
//திருவரங்கம் மட்டுமே அமெரிக்கக் கீழ்க்கரைக்கு வந்தால் போதுமா? திருச்சிற்றம்பலமும் வரட்டும். :-)//
அப்போ தீட்சிதரா யாரைப் போடலாம்-ன்னு சொல்லுங்க? குடுமி வைச்ச ஜிரா எப்படி இருக்கும்-ன்னு yosiching! :)))
பாட்டு கூடல் மட்டுமல்ல, கூட்டும் கூட!
ReplyDeleteபல பாடல்களில் கூட்டு!
ம்... நல்ல பாட்டு. எங்கயாச்சும் ஆடிட வேண்டியதுதான் :) மிக்க நன்றி குமரா.
ReplyDeleteநன்றி அக்கா.
ReplyDeleteஆமாம். நாட்டியம் ஆடுவதற்கு மிக நல்ல பாட்டு.