'மழை பொழிகிறதே. இப்போது எப்படி நான் வீட்டைச் சரி செய்வது?'
'ஏனப்பா இப்படி கஞ்சனாக இருக்கிறாய்? வீட்டுக்கூரை முழுக்க எத்தனை ஓட்டை. மழையின் போது முழுக்க முழுக்க ஒழுகிறது. நீ ஈரத்துடனே வாழுகிறாய். வீட்டைச் சரி செய்யலாம் அல்லவா?' என்று கேட்ட அண்டைவீட்டாருக்குக் கந்தன் சொன்ன பதில் தான் இது.
சரி மழைக்காலம் முடிந்து வேனில் வந்தவுடன் வீட்டைச் சீர்செய்துவிடுவான் இவன் என்று அண்டைவீட்டார் நினைத்துச் சென்றுவிட்டனர்.
வேனிலும் வந்தது. வீட்டைச் சரி செய்தானா கந்தன்?
இல்லையே. கேட்டு வந்தவர்களுக்கு அவன் சொன்ன பதில்: மழை தான் நின்றுவிட்டதே. இப்போது ஏன் நான் வீட்டைச் சரி செய்யவேண்டும்?
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
ReplyDelete....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்
//மழை தான் நின்றுவிட்டதே. இப்போது ஏன் நான் வீட்டைச் சரி செய்யவேண்டும்?
ReplyDelete//
சரியான பதில்தானே! தவிரவும் எங்கெங்கே ஒழுகிறது என்று அவனால் எப்படி கண்டுபிடிக்க முடியும்!
நல்ல கதை; நல்ல காரணம் :)
ReplyDeleteஆர். கே. சதீஷ்குமார். பாடலுக்கு மிக்க நன்றி. நீங்கள் வலைப்பதிவுலகத்திற்குப் புதியவர் என்றால் என்னுடைய பின்னூட்ட விதி தெரியாமல் இருக்கலாம். ஒரு பாடலை இட்டால் அதற்குரிய விளக்கத்தையும் பின்னூட்டத்தில் இடவேண்டும் என்பது என்னுடைய பின்னூட்ட விதி. அதுவும் சித்தர் பாடல்கள் என்றால் சட்டென்று புரியாதே?! அதற்கு விளக்கம் கட்டாயம் சொல்ல வேண்டுமே. தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள். :-)
ReplyDeleteஅது சரி சிபி. நேற்று கலாய்க்க சதீஷ்குமார் தான் கிடைத்தாரா உங்களுக்கு? பாவம் அவர் அரண்டு போய்விட்டார் போல. :-)
ReplyDeleteநல்ல அக்கா. நல்ல பின்னூட்டம். :-)
ReplyDeleteவிருப்பமில்லாத செலவு பிடிக்கும் செயலை தள்ளிப் போட இது போல் அடுத்தடுத்து காரணங்கள் எழும் !
ReplyDelete:)
அதைச் சொல்லும் எளிமையான கதை !
//
ReplyDeleteநான் ஏன் கவலைப்படவேண்டும்?
//
சரிதானே அவன் அவனுக்காக வாழ்கின்றான்.. பிறருக்காக வாழவில்லை தானே.. நல்ல பதிவு. சிறிய கதையினுடாக நல்ல கருவைத் தொட்டுச்சென்றுள்ளீர்கள்...
பதிவின் கருத்தும் அதை ஒட்டி
ReplyDeleteSATHISH KUMAR போட்ட சித்தர் பாடலும் பிரமாதம்.
நல்ல விளக்கம். நன்றி கோவி.கண்ணன். :-)
ReplyDeleteநல்ல விளக்கம். நன்றி shayanth :-)
ReplyDeleteசதீஷ்குமார் சொன்னது எனக்கு புரியவில்லை. விளக்க முடியுமா கீதாம்மா?
ReplyDeleteகை வலி எப்படி இருக்கிறது? வலியுடன் வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.