Thursday, August 07, 2008

மறுபதிவுகள் நிறைவடைந்தன

என்னுடைய மற்ற பதிவுகளிலிருந்து கூடல் பதிவிற்கு இடுகைகளை நகர்த்துவது நிறைவு பெற்றுவிட்டது. இனி மிஞ்சி இருக்கும் பதிவுகளை வகைப்படுத்தித் தந்திருக்கிறேன். அவற்றில் தொடர்ந்து சுழற்சி முறையில் எழுதி வர விருப்பம்.

தனிப்பதிவுகள்:

1. அபிராமி அந்தாதி - நான் தொடங்கிய முதல் பதிவு இது. இன்னும் ஒன்றிரண்டு இடுகைகளுடன் நிறைவு பெற்றுவிடும்.
2. Maithreem Bhajatha - எனது ஆங்கிலப் பதிவு. அவ்வளவாக இங்கே எழுதியதில்லை. இனிமேலும் அப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
3. avO amrethenu avO - இது ஆங்கில எழுத்தில் எழுதப்படும் சௌராஷ்ட்ர பதிவு. இதில் இனி மேல் தொடர்ந்து எழுத எண்ணம்.
4. விஷ்ணு சித்தன் - பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்த பாசுரங்களை இனி மேல் இங்கே தொடர்ந்து படிக்கலாம்.
5. பாட்டுக்கொரு புலவன் பாரதி - பாரதியாரின் பாடல்களை இங்கே தொடர்ந்து படிக்கலாம்.
6. ஐயன் வள்ளுவனின் இன்பத்துப்பால் - காமத்துப்பால் குறட்பாக்களின் பொருளுரையை இங்கே படிக்கலாம்.
7. கோதை தமிழ் - கோதைத் தமிழ் ஐயைந்துஐந்தினை இங்கே படிக்கலாம்.
8. கூடல் - எனது பதிவுகளின் தலைவாசல்.

குழுப்பதிவுகள்:

1. கற்பூர நாயகியே கனகவல்லி: அன்னையின் திருவருளைப் போற்றும் பாடல்கள்.
2. நமசிவாய வாழ்க - அத்தனின் திருவருளைப் போற்றும் பாடல்கள்.
3. இந்தியக்கனவு 2020 - இந்தத் தன்னார்வக் குழுவினைப் பற்றிய இடுகைகள்
4. முருகனருள் - பிள்ளையின் திருவருளைப் போற்றும் பாடல்கள்
5. ஸ்தோத்ரமாலா - வடமொழிப்பனுவல்களின் பொருளுரைகள்.
6. கண்ணன் பாட்டு - கண்ணனின் திருவருளைப் போற்றும் பாடல்கள்
7. மதுரை மாநகரம் - கூடல் மாநகரப் பிள்ளைகளின் குழுப்பதிவு.
8. மதுரையின் ஜோதி - நடனகோபால நாயகி சுவாமிகளின் பாடல்களுக்குப் பொருளுரைகள்

13 comments:

  1. ஹ்ம்... இன்னும் படிக்க வேண்டியது இவ்வளவு இருக்கா! முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  2. பார்க்கவே பிரமிப்பூட்டுகிறது.. செயல்பட்டு சாதித்தவருக்கு எப்படியிருக்கும்?..
    ஒரு மீள்பார்வைக்கு அத்தனை பதிவுகளும் பெருமையூட்டுவனவே; புளகாங்கிதம் அடையச் செய்பவையே.
    தங்கள் அயராத பணிக்கு வாழ்த்துக்கள், குமரன்!

    ReplyDelete
  3. தனிப்பதிவுகள்=8
    குழுப்பதிவுகள்=8
    8+8=16
    16உம் பெற்று பெருவாழ்வு வாழ்க குமரன்!
    (அடியேன் பொடியேன் தான்; இருப்பினும் வாழ்த்தினை ஏற்றுக் கொள்ளுங்கள் :)

    ReplyDelete
  4. //கோதை தமிழ் - கோதைத் தமிழ் ஐயைந்துஐந்தினை இங்கே படிக்கலாம்//

    முடியாது!

    ஐயைந்துஐந்தினைப் படிக்க மாட்டோம்!

    ஒரு நூற்று நாற்பத்து மூன்றையும் தான் படிப்போம்! :))))

    ReplyDelete
  5. ஜீவி சொல்லியது போல பிரமிப்பூட்டுகிறது. அயராத உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் குமரன்.

    ReplyDelete
  6. வேலை ஏதும் பாக்கரீங்களா குமரன்?
    :-))
    ப்ரமிப்பு இன்னும் அடங்கலை!
    ஏதாவது ஒண்ணுதான் படிக்க முடியும். ம்ம்ம்ம்ம்ம்? சரி மைத்ரீம் பஜத.

    ReplyDelete
  7. மெதுவா படிங்க கவிநயா அக்கா. ரொம்ப அவக்கரமில்லை (அவசரமில்லை)

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  9. மிக்க நன்றி இரவிசங்கர்.

    முதலில் ஐயைந்து ஐந்தை எழுதுகிறேன். அப்புறம் ஒரு நூற்று நாற்பத்தி மூன்றையும் சொல்ல இறைவனின் திருவருள் இருந்தால் பார்ப்போம். :-)

    ReplyDelete
  10. எழுதினதே ஒரு பெரும் வேலைன்னா அதை எல்லாம் சேர்த்து ஒண்ணா ஆக்குனது அதை விட பெரிய வேலையா இருந்திருக்கும் போல இருக்கே!!

    அதுக்கும் வாழ்த்துகள் அண்ணா!!

    ReplyDelete
  11. பிரமிப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள் மௌலி. கிடைத்த வாய்ப்பில் இன்னும் நிறைய செய்யலாம். செய்தது கைம்மண் அளவே. ;-)

    ReplyDelete
  12. திவா ஐயா. மைத்ரீம் பஜத-வில் தொடர்ந்து எழுதுவதில்லை. அதனால் வேறு ஏதேனும் பதிவை (கூடல்?) தேர்த்தெடுத்துப் படிக்க வேண்டுகிறேன். :-)

    ReplyDelete
  13. நன்றி கொத்ஸ் அண்ணா. :-)

    ReplyDelete