இன்று காலை வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இது அகப்பட்டது. மூன்று பேர் பேசுகிறார்கள் இந்த ஒளிஒலித்துணுக்கில். 'அந்த நாள்' திரைப்படத்தில் வந்த காட்சி என்று நினைக்கிறேன். மூவர் பேச்சும் மிக உணர்ச்சிகரமாக இருக்கிறது. நல்ல நல்ல கருத்துகள் இருக்கின்றன. கடைசியில் வரும் 'வளையலை அணி' என்ற குத்தலைத் தவிர.
நன்றி: rectian, Youtube.
இந்தப் படத்துணுக்கைப் பார்த்த போது பல முறை பதிவுலகில் நடக்கும் விவாதங்களில் எனக்கு ஏற்படும் உணர்ச்சியே உண்டானது. இந்தப் பக்கம் உள்ள கருத்துகளைப் படிக்கும் போது இவர்கள் சொல்வது சரி போலும் அந்தப் பக்கம் உள்ள கருத்துகளைப் படிக்கும் போது அவர்கள் சொல்வது சரி போலும் மாறி மாறித் தோன்றுமே; கடைசியில் நமக்கென்று தனியாக ஒரு கருத்து இருக்கிறதா என்ற ஐயம் எழுமே; அந்த உணர்வைச் சொல்கிறேன். :)
நல்ல துணுக்கு. கடைசிவரை பார்த்தேன்..
ReplyDeleteநம் இன்றைய மாணவர்களுக்கும் இது பொருந்தும்..
அன்புடன்,
சீமாச்சு
சீமாச்சு அண்ணா. இந்தக் கால மாணவர்களுக்கு மட்டுமில்லை; எனக்கே நன்கு பொருந்தும் இந்த நிலை. :-)
ReplyDeleteஉங்க ஊருக்கு வந்த போது உங்களைப் பார்க்க இயலவில்லை. அடுத்த முறையாவது சந்திக்க வேண்டும்.
உண்மையிலேயே அருமையான வசனங்கள். தமிழில் இப்பிடி விளையாண்டா தட்டுறதுக்கு ரெண்டு கை பத்தாது. ஆயிரம் கையிருந்தாலும் தட்டிக்கிட்டேயிருக்கலாம்.
ReplyDeleteநீங்க கை தட்டுறதைப் பத்தி சொன்னதால இன்னொரு தடவை கேட்டேன் இராகவன். :-)
ReplyDelete