காதல்ன்னாலே அதுல களவு, கற்புன்னு ரெண்டு வகையைச் சொல்லுது பழந்தமிழ் இலக்கியம். இந்தக் காலத்துலயும் பாட்டுல பாருங்க 'கள்ளத்தனமா காதலை பண்ணு; ஊரறியக் கல்யாணம் பண்ணு'ன்னு அதையே சொல்றாங்க. ஆக அந்தக் காலத்துல இருந்து நம்ம பண்பாட்டுல அவ்வளவா மாற்றம் வரலை. இல்லீங்களா?
கடைசிப் பத்தியில நல்ல ஒரு அறிவுரையா சொல்றாங்க பாருங்க இந்த ஆத்தா. நம்ம பசங்க எல்லாம் இதைப் பயன்படுத்திக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். எல்லாரோட ஆசிர்வாதத்தோட காதல் கல்யாணமும் வெற்றிகரமா நடக்கும்.
***
ஊரை விட்டு உறவை விட்டு சாதி விட்டு சாமி விட்டு
எல்லை விட்டுத் தொல்லை விட்டு மானம் விட்டு ஈனம் விட்டு
மனசை மட்டும் பார்க்குமடா காதல் - நல்ல
மனசை மட்டும் பார்க்குமடா காதல்
என்னத்தைச் சொல்ல வர்ற?
ஏய் அப்பூ எடுத்து விடு
ஆங்...
காதல் பண்ணத் திமிரு இருக்கா
கையைப் பிடிக்கத் தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தா
கள்ளத்தனமா காதலை பண்ணு
ஊரறிய கல்யாணம் பண்ணு
ஏய் (காதல் ...)
பேரா பேரா செல்லப் பேரா
ஜோரா ஜோரா லவ்வு பண்ணு பேரா
பொண்ணுங்களை நம்புறது தப்பு
கவுந்துப்புட்டா ஊரெல்லாம் கப்பு
காதலொரு வாலிப மப்பு
கிறங்கிப்புட்டா ஒண்ணுமில்லை தப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைனாக்கா எக்கச்சக்க அப்பு
ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல்ன்னா என்ன பண்ணும் ஆத்தா
ஒழுக்கத்துல இராமனா இருங்க
சீதைங்களைத் தேடித் தான் புடிங்க
தேவதாஸை மறங்கடா முதல்ல
மன்மதனை நெனைங்கடா அதில
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்க
பேரா பேரா
என்ன கிழவி
செல்லப் பேரா
சொல்லு சொல்லு
ஜோரா ஜோரா லவ்வு பண்ணு பேரா
என்னைப் புடிச்ச பொண்ணை நான் பாத்தேன்
என் மனசை அவகிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோபக்காரன்
அண்ணன் கூட அவசரக்காரன்
எப்படி நான் சரிக்கட்டப் போறேன்
எப்ப நானும் ஜோடி சேரப்போறேன்
ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா
சந்தையில அப்பனோட பாத்தா
வேட்டியை நீ இறக்கியும் விடுடா
கோவிலில ஆத்தாவோட பாத்தா
பட்டுன்னுதான் காலுல விழுடா
பஸ்ஸுக்குள்ள பாட்டியோட பாத்தா
எடம் கொடுத்து டிக்கெட்டையும் எடுடா
பேரா பேரா செல்லப் பேரா
அவ அண்ணன்கிட்ட எடு நல்ல பேரா
(காதல்)
திரைப்படம்: கோவில்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பரவை முனியம்மா, வடிவேலு, சிம்பு
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 18 ஆக்ஸ்ட் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete14 comments:
G.Ragavan said...
இதென்ன படம். கேட்டதே இல்லையே. இத எங்க பிடிச்சீங்க?
Saturday, August 18, 2007 5:23:00 PM
--
G.Ragavan said...
http://kelpidi.blogspot.com/2007/08/blog-post.html
இதென்ன படம். கேட்டதே இல்லையே. இத எங்க பிடிச்சீங்க?
Saturday, August 18, 2007 5:24:00 PM
--
வெற்றி said...
குமரன்,
தலைப்பைப் பார்த்துவிட்டு, யாருக்கோ சவால் விடுகிறீர்களாக்கும் என நினைத்தேன். :-))
பாடலை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுப் பின்னர் வருகிறேன்.
Saturday, August 18, 2007 10:59:00 PM
--
குமரன் (Kumaran) said...
இராகவன்,
ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பதிவுல இடுகை இட்டதனால வழக்கமா சொல்றதைச் சொல்லாம விட்டுட்டேன். இந்தப் பாட்டு கோவில் படத்துல வர்ற பாட்டு. அந்தப் படத்துல எல்லா பாட்டும் நல்லா இருக்கும். கேட்டுப் பாருங்க.
படம் வந்தப்ப இருந்து சிடி இருக்கு. நெறைய தடவை காருல கேட்டிருக்கோம்.
Sunday, August 19, 2007 5:18:00 PM
--
குமரன் (Kumaran) said...
வெற்றி,
சொன்னாலும் சொல்லாட்டியும் உடம்புல வேண்டிய திமிரு இருந்தா தானே காதல் பண்ண முடியும்? ஒத்துக்குறீங்களா? :-)
நான் சவால் விடற வயசை எல்லாம் தாண்டி வந்தாச்சுங்க. :-)
Sunday, August 19, 2007 5:20:00 PM
--
குமரன் (Kumaran) said...
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4608/
இந்த படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்.
Sunday, August 19, 2007 5:21:00 PM
--
Kishore said...
Super Song Kumaran.
Monday, August 20, 2007 9:47:00 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி கிஷோர்.
Tuesday, August 21, 2007 9:03:00 PM
--
சிவபாலன் said...
Good Song!
Thanks
Wednesday, August 22, 2007 9:48:00 PM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரா!
ஒரு 35 வருசத்துக்கு மு கேட்டிருந்தால்; பதில் சொல்லலாம்; இப்போ..;என்னத்தைச் சொல்லிறது.
இவ்வளவு சொல் இந்தப் பாட்டுக்க இருக்குதா?? ஆச்சரியமா இருக்கு...எதோ ஆய் ஊய் என்கிறாங்க எனு நினைச்சேன். வயதுப் பிரச்சனை
Thursday, August 23, 2007 4:07:00 AM
--
pathy said...
cokkaD sE.
pathy.
Thursday, August 23, 2007 4:57:00 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
Saturday, August 25, 2007 10:10:00 AM
--
குமரன் (Kumaran) said...
எனக்கு விரைவில் நீங்கள் சொல்வது போன்ற நிலை வந்துவிடும் யோகன் ஐயா. நானும் விரைவில் நடுத்தர வயது என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். :-)
Saturday, August 25, 2007 10:11:00 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி பதி ஐயா.
Saturday, August 25, 2007 10:12:00 AM
அது சரி... :)
ReplyDelete//நானும் விரைவில் நடுத்தர வயது என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். :-)//
ஒரு வருஷம் ஆகப் போகுதே, இப்ப என்ன சொல்றாங்க? :)
யாரும் இன்னும் அப்படி சொல்லலை அக்கா. ஆனா எனக்கு அப்படித் தோணத் தொடங்கியாச்சு. :-)
ReplyDelete