Sunday, April 06, 2008

கல்தோன்றி மண்தோன்றிக்...

அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் நான் முதன்முதலில் பார்த்த தமிழ்ப்படம்/இந்தியப்படம் ஜீன்ஸ். வெளிநாட்டிலும் நம் நண்பர்களின் கூச்சல்கள், கிண்டல்கள், விசில்கள் என்று அந்தப் படத்தைப் பார்த்த அனுபவமே அருமையாக இருந்தது. அதற்குப் பின் பல தமிழ் திரைப்படங்களை இங்குள்ள திரையரங்குகளில் பார்த்தாலும் அன்று முதல் முதலில் பெற்ற அனுபவம் அப்புறம் கிடைக்கவில்லை.

அப்போது தான் எனக்குத் திருமணம் நிச்சயமாகி மூன்று மாதப் பணிக்காக அமெரிக்கா வந்திருந்த நேரம். அதனாலும் இந்தப் படத்தில் இருக்கும் எல்லா பாடல்களும் மிகவும் பிடித்துவிட்டதோ என்னவோ?!

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசை ஆவது அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் (பூவுக்குள்)



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறு வாசமுள்ளப் பூவைப் பார்
பூவாசம் அதிசயமே
அலைகடல் தந்த மேகத்தில் ஒரு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

(கல் தோன்றி)

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால் கொண்டு நடமாடும்
நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய் பேசும் பூவே நீ
எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்களும் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

(கல் தோன்றி)

திரைப்படம்: ஜீன்ஸ்
வெளிவந்த வருடம்: 1998
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிகிருஷ்ணன்


***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 1 டிசம்பர் 2007 அன்று இடப்பட்டது.

1 comment:

  1. இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 1 டிசம்பர் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    4 comments:

    G.Ragavan said...
    ஏ.ஆர்.ரகுமான் உச்சத்துல இருந்தப்ப வந்த படமிது. எனக்கும் பிடிச்ச பாட்டு இது. அப்பல்லாம் ரகுமானின் பயங்கர ரசிகன் நான். :)

    Saturday, December 01, 2007 3:59:00 PM
    --

    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    //அதிசயமே அசந்து போகும் நீயெந்தன் அதிசயம்//

    அன்புக் குமரா!!
    இந்த வரியைக் கேட்டுவிட்டு வைரமுத்து' அசந்த அந்த அழகை
    நினைத்து வியந்தேன்.
    கண்ணதாசனின் கர்ணன் 'வறுமைக்கு வறுமை'..
    வைரமுத்து...சந்தர்ப்பம் கிடைக்கும் போதேல்லாம் இந்த நடையை பின்பற்றுகிறார்.

    Saturday, December 01, 2007 4:51:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    இப்பவும் நிறைய ரகுமான் பாடல்கள் பிடிக்கும் தானே இராகவன். எனக்கு இன்னும் பிடிக்கிறது. :-)

    Saturday, December 01, 2007 6:34:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா. இந்த பாணி பல காலங்களாக இருப்பது தானே. தேவதேவன் (தேவர்களுக்கெல்லாம் தேவன்), சத்யஸ்ய சத்யம் (சத்தியத்திற்கெல்லாம் சத்தியம்) என்றெல்லாம் இறைவனைச் சொல்வதுண்டே. அதே போல் அதிசயமே அசந்து போகும் அதிசயம் என்கிறார் இந்தக் கவிஞர்.

    கண்ணதாசன் சொன்னதும் இதே போல் தோன்றினாலும் ஒரே ஒரு சின்ன வேறுபாடு உண்டு. இவைகளை விட கண்ணதாசன் சொன்னது இன்னும் சுவையுடையது. மேலே காட்டிய மூன்று எடுத்துக்காட்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவைகளில் மிகமிகச் சிறந்தவைகளைக் காட்டுகின்றன (தேவர்களில் சிறந்தவன், சத்தியத்தில் சிறந்தது, அதிசயத்தில் சிறந்தது). கண்ணதாசன் சொன்னதோ வறுமைக்கு வறுமை. இங்கே கணிதத்தின் படி வரும் Negative x Negative = Positive போல் பொருள் வருகிறது. இல்லாமையை இல்லாமை செய்து வளம் கொழிக்கச் செய்பவன் கர்ணன் என்று புகழ்கிறார்.

    Sunday, December 09, 2007 12:29:00 PM

    ReplyDelete