அண்மையில் மரத்தடியில் மதுரபாரதி அவர்கள் எழுதிய சில கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்த போது இந்த கட்டுரைப் படித்தேன். மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோவில் கோட்டையைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் மதுரைக் கோட்டை அது தானோ என்று அவர் நினைப்பதற்கான காரணங்களையும் அங்கே கூறியிருந்தார். பழந்தமிழ் நாட்டில் முருகன், சிவன் ஆகியோருடன் திருமாலும், பலராமனும் கூட வழிபடப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த சிலப்பதிகார வரிகள் உள்ளன என்று தோன்றுகின்றன.
இரண்டு விஷயங்களில் இந்தக் கட்டுரை என்னைக் கவர்ந்தது.
1. தமிழகத்தில் இருந்த, இருக்கும் கோட்டைகளைப் பற்றி இன்னும் நாம் ஆராய வேண்டியவை எத்தனை உள்ளது என்பதையும் அதற்கு நம் இலக்கியச் சான்றுகளையும் பயன் கொள்ளலாம் என்பதையும் கூறியது.
2. தமிழ்க் கடவுள் முருகக்கடவுள் மட்டும் தானா? தென்னாடுடைய சிவனே என்று சொல்வதால் அவர் பழந்தமிழ் நாட்டில் மட்டும் தான் வழிபடப்பட்டாரா? ஆரியரின் கலப்புக்குப் பின்னால் தான் அவர் வடநாட்டிற்குச் சென்று எந்நாட்டவர்க்கும் இறைவன் ஆனாரா? திருமாலும் பல சங்கக் காலத் தமிழ்ப் பாடல்களில் பாடப்பட்டிருக்கிறாரே; திருமாலின் பத்து அவதாரங்களின் தெய்வீகச் செயல்கள் பல சங்கக் காலப் பாடல்களில் பாடப்பட்டிருக்கிறதே? அப்படியென்றால் ஆரியர் வருகை எப்போது நிகழ்ந்தது? எப்போது கலப்பு (எல்லா விதங்களிலும்) ஏற்பட்டது? சங்கப் பாடல்களைக் கொண்டு முருகப் பெருமானைத் தமிழ்க்கடவுள் என்று நிறுவியதைப் போல் எந்தத் தமிழறிஞரும் மாலவனையும் தமிழ்க்கடவுள் என்று நிறுவ முயலவில்லையா? இல்லை அப்படி செய்த ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் இன்னும் என் கண்களில் படவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளை என்னுள் எழுப்பியது.
அந்தக் கட்டுரை இங்கே.
***
இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 18 ஏப்ரல் 2006 அன்று இட்டது.
இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 18 ஏப்ரல் 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete16 Comments:
குமரன்,
டணாயக்கன் கோட்டை என்ற கோட்டை கோவை பவானி அருகே முன்பு இருந்தது.பவானிசாகர் அணை கட்டியபோது அந்த கோட்டை நீரில் மூழ்கிவிட்டது.தண்டல் நாயகன் கோட்டை என்பது மருவி டணாயக்கன் கோட்டை ஆகிவிட்டது.
கோவையில் கோட்டை இருந்த இடம் இன்று அழிந்து கோட்டை மேடு எனும் பகுதியாக மருவிவிட்டது.
By செல்வன், at April 18, 2006 2:24 PM
திருச்சி மலைக்கோட்டையை பத்தி ஆராய்வீங்களா? ஒன்னு தெரியுமா, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பாருன்னு தானே கேள்விபட்டிருக்கீங்க, ஆனா இந்த மலைக்கோட்டையில இருக்கிறது உச்சி பிள்ளையார்! இதெப்படி?
By வெளிகண்ட நாதர், at April 18, 2006 3:00 PM
இதுபோல ஆராய்வதற்கு ஒரு தனி துறை இருப்பதாக என்ணுகிறேன்.
கட்டுரை நன்றாக வந்துள்ளது
By Ram.K, at April 18, 2006 6:21 PM
அன்பு குமரன்,
நான் ஒன்று சொன்னால் சினமுறலாகாது.
நான் என் முடிமீதிருக்கும் கோட்டையை ஆராய்ந்து கொண்டிருப்பவன்.அங்கே உள்ள கபாலக் குகையைத் திறக்க முயன்றுகொண்டிருப்பவன். எனக்குத் தெரிந்த ஒரே கோட்டை "மாயாபுரிக் கோட்டை"தான்.
அதனால் காலம் போதாத காரணத்தினால் இந்த ஆய்வு செய்யவில்லை; இனி செய்யவும் காலமில்லை. காலன் நெருங்கிக் கொண்டுள்ளான்.
By ஞானவெட்டியான், at April 18, 2006 6:35 PM
அண்ணன் தானே விட்டுவிடுங்கள் தம்பி அண்ணனுக்கு அதை விட்டுக்கொடுத்து விட்டார்
By Merkondar, at April 18, 2006 6:44 PM
திருச்சிராப்பள்ளியில் முத்துவடுக நாய்க்கர் அல்லது மங்கம்மாள் அரன்மனையும் சிறியதாகத்தான் உள்ளது திருவரங்கத்தில் காவிரிகரையில் அம்மாமண்டபம் கட்டியதும் ஆற்றுக்கும் அரங்கன் கோயிலுக்கும் சாலைஅமைத்ததும் இந்த மங்கம்மாள் தான் அந்த தர்பார் மண்டபம் ரொம்ப சின்னதாக செங்கற்கள்ளில் கட்டப்பட்டுள்ளது உள்ளது; ஆனால் திருவரங்க அம்மா மண்டபம் பெரியதாக முழுக்க கருங்கற்களால் கட்டப் பட்டள்ளது.
By Merkondar, at April 18, 2006 7:04 PM
குமரன்,
நல்ல கட்டுரை, கோட்டை இருந்த இடம் தான் 18-ஆம் நூற்றாண்டில் மாரட் வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி, என்று மாறி விட்டது. ஆனாலும் கோட்டைவாசல்களான 'கீழவாசல்','தெற்க்கு வாசல்', இன்றும் வழக்கில் உள்ளது.
எனவே கோட்டை எனப்படுவது அந்த அழிக்கப்பட்ட கோட்டையே அன்றி அழகர் கோவில் கோட்டையல்ல,
சிலம்பாறு என்பது எழுகடல் தீர்த்தத்தையோ, கிருதுமால் நதியையோ சொல்லியிருக்கலாம்.
கோட்டைக்குள்ளே, அழிந்துவிட்ட விலாசங்கள் நிறைய உள்ளன. மன்னனின் மகால் இன்றய தேதியில் உள்ளது மூன்றில் ஒருபகுதியே. திருமால் கோவில் என்பது கூடலழகர் கோவில், அருகில் மூன்று சிதிலமடைந்த கோவில்கள் உள்ளன அதில் பலராமரை தரிசித்திருக்க கூடும், சிவன், முருகன் இருவரும் அம்மன் கோவிலில் தரிசித்திருக்கக் கூடும்.
By சிவமுருகன், at April 18, 2006 9:18 PM
செல்வன். கோவையில் இரண்டு வருடம் இருந்திருக்கிறேன். ஆனால் கோட்டை மேட்டினையும் கேள்விப் பட்டதில்லை. டணாய்க்கன் கோட்டையையும் கேள்விப் பட்டதில்லை. தகவலுக்கு மிக்க நன்றி.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:13 PM
வெளிகண்ட நாதர் சார். திருச்சி மலைக்கோட்டையைப் பத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். பல்லவர் சிற்பங்களும் தாயுமானவர் கோயிலும் உச்சிப் பிள்ளையாரும் வரலாற்றில் பல இடங்களில் குறிப்பிடப்பவைகள் (பட்டவர்கள்) இல்லையா?
எல்லா இடத்துலயும் நீயே உக்காந்துக்கறே; இங்க மட்டுமாவது நான் உக்காந்துக்கறேன்னு தம்பிக்கிட்ட அனுமதி வாங்கிகிட்டு அண்ணன் சார் உக்காந்துக்கிட்டாரோ இங்க? :-)
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:15 PM
தனி துறை எங்கு இருக்கிறது இராம்பிரசாத் அண்ணா. அரசிலா? இல்லை பல்கலைக் கழகங்களிலா? நம் நாட்டில் இந்த மாதிரி ஆராய்ச்சிகள் பெரிதும் தன்னார்வமாகத் தான் நடைபெறுகின்றன என்று எண்ணுகிறேன். இன்னும் அது வெளிநாட்டினைப் போல் வருமானம் தரும் தொழிலாக ஆகவில்லை.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:17 PM
ஐயா, உங்களுக்கு வயதாகிவிட்டதால் காலன் நெருங்கிவிட்டான் என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையில் காலன் எல்லாரையும் நெருக்கிக் கொண்டே தான் இருக்கிறான். எப்போது அவன் வருவான் என்று யாரால் சொல்ல முடியும்? நெருநல் இருந்தால் இன்றில்லையே.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:18 PM
ஆமாம் என்னார் ஐயா. நானும் அப்படித் தான் நினைக்கிறேன். அண்ணன் கேட்கிறார் என்பதால் தம்பி திருச்சிராப்பள்ளி மலையை அண்ணனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் போலும்.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:19 PM
திருச்சி மங்கம்மாள் அரண்மனையைப் பற்றியும் அம்மா மண்டபத்தைப் பற்றியும் சொன்னதற்கு மிக்க நன்றி என்னார் சார். அண்மையில் பெங்களூர் சென்றிருந்த போது திப்புவின் அரண்மனைக்குச் சென்றோம். அதுவும் நீங்கள் சொல்வது போல் சிறிதாகத் தான் இருந்தது. பழங்காலத்தைப் போல் பெரிய அரண்மனைக் கட்டிக் கொள்வது மங்கம்மாள்/திப்பு காலத்தில் குறைந்து விட்டது போலும். கோவில்களையும் அதனைச் சார்ந்த மண்டபங்களையும் பெரியதாகக் கட்டியிருக்கின்றனர் அவர்கள் காலத்திலும்.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:22 PM
சிவமுருகன்,
கீழவாசல், தெற்குவாசல் போன்ற பெயர்கள் வந்த காரணம் இது தானா? அது சரி. மேலவாசலும் வடக்குவாசலும் இல்லாத காரணம் உங்களுக்குத் தெரியுமா?
மதுரை கோட்டை என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப் படும் கோட்டை அழகர் கோவில் கோட்டை இல்லை என்பது தான் என் கருத்தும். அழகர் கோவில் கோட்டை பிற்காலத்தில் கட்டப்பட்டது என்று படித்திருக்கிறேன்.
சிலம்பாறு என்பது நூபுர கங்கை என்னும் அழகர் மலை தீர்த்தத் தொட்டி தீர்த்தம் தான். அதில் சந்தேகமில்லை. நூபுரம் என்றால் வடமொழியில் சிலம்பு என்று பொருள். அதனால் சிலம்பாறு எழுகடலையோ, கிருதமாலையையோ குறிக்கவில்லை.
நானும் ஒத்துக் கொள்கிறேன். திருமால் கோவிலுக்கு கூடல் அழகரை சொல்லலாம். மற்ற கடவுளர்களுக்கு (பலராமரைத் தவிர்த்து) பழமையான கோவில்கள் தான் மதுரை எல்லைக்குள்ளேயே இருக்கின்றனவே.
By குமரன் (Kumaran), at April 21, 2006 9:32 PM
குமரன்,
கோட்டைகளைப் பற்றி கேள்வி ஞானம் தான் இது வரை. கோட்டைகளைப் பற்றி அதிகமாகப் படித்ததும் இல்லை. வழி காட்டியமைக்கு நன்றி.
By பாரதி, at April 23, 2006 1:38 AM
படித்து உங்கள் கருத்தினைச் சொன்னதற்கு நன்றி பாரதி.
By குமரன் (Kumaran), at April 25, 2006 2:07 PM