தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு ஏன் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியலை
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியலை
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆளை விட்டுடு பொழைச்சு போறான் ஆம்பளை (இரவும்)
ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா?
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்தைத் தோழியா?
பம்பரத்தைப் போல நானும் ஆடுறேனே மார்க்கமா
பச்சைத் தண்ணி நீ கொடுக்க ஆகிப்போகும் தீர்த்தமா
மகாமகக் குளமே என் மனசுக்கேத்த முகமே
நவ்வாப் பழ நிறமே என்னை நறுக்கிப் போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாளே
என்னை அடுக்குப் பானை முறுக்கு போல உடைச்சுத் தின்னாளே
கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வரை பாசத்தோடு காட்டு நீ
தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்
ஈச்ச மரத் தொட்டில் நீ இலந்தைபழ கட்டில்
அறுந்த வாலு குறும்புத் தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு
ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாளே இவ
ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சாளே (தாவணி)
திரைப்படம்: சண்டக்கோழி
வெளிவந்த வருடம்: 2005
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர்: ??
***
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 07 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது.
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 07 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete35 comments:
செல்வன் said...
I dint see this movie yet kumaran.Song is good.Thanks
Saturday, February 10, 2007 4:15:00 PM
--
குமரன் (Kumaran) said...
செல்வன். முடிந்தால் படத்தையும் பாருங்கள். பார்க்கும் படி இருக்கும்.
Sunday, February 11, 2007 3:53:00 PM
--
Kumaresh said...
Recenta vantha padangalla pidicha padam and intha song especially super. Appadiye "thaaliye thevayilla" from thamirabarani potta nalla irukkum. Yuvan Shankar's music really mesmarising (spelling thappa, theriyala).
Nanri,
Kumaresh
Tuesday, February 13, 2007 11:29:00 AM
--
குமரன் (Kumaran) said...
குமரேஷ். நான் இன்னும் தாமிரபரணி பாக்கலை. நீங்க சொல்ற பாட்டும் கேட்டதில்லை. கேட்டுப் பாத்துட்டு அதுவும் பிடிச்சதுன்னா இங்கே போடறேன்.
Wednesday, February 14, 2007 10:52:00 AM
--
வடுவூர் குமார் said...
படத்தின் பெயரை வைத்து பார்க்காமல் விட்டு விட்டேன்.
நல்ல பாடல்.
இந்த படத்தின் முடிவு நன்றாக எடுத்திருக்கார்கள்.
சமீபத்தில் டிவியில் காண்பித்தார்கள்.
Thursday, February 22, 2007 7:52:00 PM
--
SK said...
இப்படத்தில் இன்னும் சில பாடல்களும் ரொம்ப நல்லா இருக்கும்!
நான் ஒரு மீரா ஜாஸ்மின் ரசிகன் கூட!
விஷாலும் வித்தியாசமா இருக்காரு!
Thursday, February 22, 2007 8:25:00 PM
--
குமரன் (Kumaran) said...
படத்தின் பெயரை இடுகையிலும் கொடுத்திருக்கிறேனே வடுவூர் குமார். படத்தின் பெயர் சண்டக்கோழி. (சண்டைக்கோழி என்றும் சிலர் சொல்கிறார்கள்). படத்தின் முடிவு மட்டும் இல்லை; முழுப்படமுமே நல்லா இருந்தது என்பது என் எண்ணம். ஆமாம். நானும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டுத் தான் இந்தப்பாடலை இட்டேன்.
Friday, February 23, 2007 6:23:00 AM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்க சொன்ன மாதிரி இந்தப் படத்துல இன்னும் சில பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஒவ்வொன்றாக இடுகிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எனக்கும் மீரா ஜாஸ்மினைப் பிடிக்கிறது. :-)
விஷால் எந்த வகையில் வித்தியாசமா இருக்காரு? எனக்கென்னமோ எப்பவும் போல தான் இந்தப் படத்துலயும் நடிச்சிருக்காருன்னு தோணுது. :-)
Friday, February 23, 2007 6:24:00 AM
--
ஜீவா (Jeeva Venkataraman) said...
இதெல்லாம் ஒரு பாட்டு??
ஹீம்!
Friday, February 23, 2007 7:04:00 AM
--
SK said...
விஷாலைப் பற்றி நான் சொன்னது ஒரு பொதுவான கருத்து, குமரன்.
அவரது உயரம், நம்மில் ஒருவரைப் பர்க்கும் உணர்வு, இயல்பான, அலட்டலில்லாத நடிப்பு, இதெல்லாம் அவரை மற்ற ஃபார்முலா ஹீரோக்களிடமிருந்து வித்தியாசமாகக் காட்டுகிறது எனச் சொன்னேன்!
Friday, February 23, 2007 7:23:00 AM
--
குமரன் (Kumaran) said...
என்ன ஜீவா இப்படி சொல்லிட்டீங்க? இந்தப் பாட்டுக்கு என்ன குறை? :-)
Friday, February 23, 2007 7:34:00 AM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்க சொல்ற வகையில விஷால் வித்தியாசமா தான் இருக்காரு.
Friday, February 23, 2007 7:34:00 AM
--
ஜீவா (Jeeva Venkataraman) said...
இசை இல்லாமல், பாடல் வரிகளை மட்டும் படித்துப்பாருங்கள் ஒருமுறை... (நான் பாடலைக் கேட்கவில்லை.)
கொஞ்சம் மாற்றி முயன்றேன், எப்படி இருக்கு சொல்லுங்கள்:
தாவணியில் வந்ததொரு தீபாவளி என் வீட்டில்
கைகால் முளைத்து கிறங்குது என்
பாட்டில்
திடுக் திடுக் மூச்சுக்கு என்னவாச்சோ?
பட்டாம் பூச்சி பக்கம் வந்ததாலோ?
Friday, February 23, 2007 10:23:00 PM
--
அருட்பெருங்கோ said...
நல்ல பாட்டு குமரன்...
படம் வந்த போது அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன் :-)
Saturday, February 24, 2007 8:16:00 AM
--
குமரன் (Kumaran) said...
ஜீவா. நீங்க சொல்ற மாதிரி நல்ல இலக்கியத் தரம் இருக்கிற பாடல்களையும் மாற்றி எழுதலாம். அப்படி எழுதிட்டு அது என்ன பாட்டுன்னும் கேக்கலாம். இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் அப்ப ஈ, எறும்பு மொய்க்கலையான்னு கேக்கலாம். பாரதியார் பாட்டையே அப்படி சொல்லலாம்ங்கறப்ப இந்தத் திரைப்பாடலை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் ஜீவா.
திரைப்பட பாடல்கள் வரிகளில் உள்ள கற்பனை, இசை, பாடியவர்கள், ஆடியவர்கள் என்று பல பரிமாணங்களைக் கொண்டவை. சில பாடல்களில் எல்லாமே சிறப்பா அமைஞ்சிருக்கும். சில பாடல்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ குறையலாம்.
Saturday, February 24, 2007 8:38:00 AM
--
குமரன் (Kumaran) said...
முதல் வருகைக்கு நன்றி அருட்பெருங்கோ. பெண்களூரு நல்லா இருக்கா? இராகவன் பதிவில் உங்களைப் பார்த்திருக்கிறேன்.
படம் வந்தப்ப மட்டும் தானா? இப்பவும் கேக்கலாம்ங்க. எப்பவாவது இந்தப் பாட்டைக் கேக்கணும்ன்னு தோணிச்சுன்னா இங்க வந்துருங்க. இன்னும் பழைய இடுகைகள் எல்லாம் பாருங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுகள் எல்லாம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
Saturday, February 24, 2007 8:40:00 AM
--
நாகை சிவா said...
நல்ல பாடல் குமரன். என்றும் கேட்கும்படி பாடல். இது போக இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களும் கேட்கும்படியாக தான் இருக்கும். குறிப்பாக அந்த சுராங்கனி பாடலும்
Saturday, February 24, 2007 9:45:00 AM
--
சினேகிதி said...
It's ma favorite song:-) Vijay nalla paadi irunthar.
Saturday, February 24, 2007 10:41:00 AM
--
ஜீவா (Jeeva Venkataraman) said...
இலக்கியத் தரம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை குமரன், குறைந்தபட்ச கவிதை நடைகூட இல்லாமல் பாடல்கள் எழுதப்படுவது வேதனைதான் தருகிறது.
போகட்டும், என் ரசனையில் சென்ற ஆண்டில் சிறந்த பாடல்களை இங்கு தொகுத்திருக்கிறேன். வருகை தரவும்!
Saturday, February 24, 2007 10:43:00 AM
--
யாழினி அத்தன் said...
குமரன்,
முதலில் இலக்கிய தரமுள்ள கவிதைகளை ரசிக்க வேண்டுமென்றால், சினிமா பாட்டுகளை மறந்து விடுங்கள். சினிமா பாட்டுக்கள் நோட்டுக்காக எழுதப் படுவது. மக்களை எளிதாக சென்றடைந்து "popular" ஆகிவிட்டால் அதை நல்ல புதுக்கவிதை என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. "பசுவய்யா, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள் சமூக பொறுப்புடன் நம்மை யோசிக்க வைக்கும் இயல்புடையவை. இது சுஜாதா பேச நான் என் காதால் கேட்டது.
ஒரு பாடலைப் பொறுத்த வரையில் நீங்கள் எதை விரும்பிக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அதன் தரம். உயரிய கருத்துள்ள பாடல்கள் பொதுவாக மக்களை சென்று சேர்வதில் அதிக் சிரமம் அடைகின்றன.
பாடல்களில் புதுக்கவிதையை மட்டும் ரசிக்க விரும்பினால், ஏராளமான சம்பந்தம் இல்லாத கற்பனைகளை போட்டு வார்த்தைகளை நிரப்பி மக்களை சிந்திக்கச் செய்யாத கவிதை தரமானது என்று சொல்வதில் சுஜாதாவின் கருத்துதான் என் கருத்தும் கூட.
அன்புடன்
Saturday, February 24, 2007 11:12:00 AM
--
குமரன் (Kumaran) said...
நாகை சிவா. ஆமாம். மற்ற பாடல்களும் பிடிக்கும். நீங்கள் சொன்ன சுராங்கனி பாட்டில் ஒரு நாலு வரி ரொம்பப் பிடிக்கும். உன்னை எப்படி பாக்காம இருக்க போறேனோன்னு ஒருத்தர் சொல்ல உன் தங்கச்சியைக் கட்டிக்கிறேன்; எப்பவும் பாக்கலாம்ன்னு இன்னொருத்தர் சொல்றதும், கல்லூரி நட்பைப் போல் இன்னொரு நட்பு கிடையாதுன்னு ஒருத்தர் சொல்ல அதனால தான் அரியர்ஸ் வச்சேன்; அடிக்கடி பாக்கலாம்ன்னு இன்னொருத்தர் சொல்றதும்ன்னு கல்லூரி உணர்வுகளையும் நக்கல்களையும் அடுத்தடுத்து சொல்லியிருப்பாங்க. :-)
Saturday, February 24, 2007 11:21:00 AM
--
குமரன் (Kumaran) said...
உங்களுக்கும் இந்த (உந்த?) பாடல் பிடிக்குமா சிநேகிதி?! மிக்க மகிழ்ச்சி. எனக்கு விஜயோட அப்பா பாடுறது ரொம்பப் பிடிக்கும். விஜயோட பாடல் வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க.
Saturday, February 24, 2007 11:23:00 AM
--
குமரன் (Kumaran) said...
வந்து பார்க்கிறேன் ஜீவா.
Saturday, February 24, 2007 11:29:00 AM
--
சினேகிதி said...
1.Kaathal vaithu kaathal vaithu kaatirunthen - Deepavali
2.Pudichiruku Pudichiruku puthikiruku pudichiruku - Nenjirukum varai
3.kanukkum eatho - THiruvilaaydam aarambam
4. Dei namma kaatila - Pattiyal
5. Pul peesum poo pesum - PuthuPettai
6. Tajmahal ooviyakaathal - Kalvanin Kaathali
7. Antha naal gpaagam - Athu Oru Kanakalam
8. Nizhalinai Nijamum - Raam
9.Appurama Enna -Singara Chennai
10.Kanavu Kanalam vaariya - Jai
11. Kodi Kodi Minnalgal - Jeyam
12. Yenakku Piditta paadal athu - Julie Ganapathy
13.Kaathal Kaathalil nenjam -Kaathal Konden
14.Amma Sonna aarirao - Solla Marandha Kathai
15. Ruku Ruku - Friends
avai enaku piditha Vijayin paadalgal..ivai thaviraum pala paadalgal Vijay paadi ullar.
Saturday, February 24, 2007 11:38:00 AM
--
குமரன் (Kumaran) said...
யாழினி அத்தன்,
சினிமா பாடல்களில் நான் இலக்கியத் தரத்தை எதிர்பார்க்கவில்லையே. மேலே ஜீவாவின் கருத்திற்குப் பதில் சொல்லும் போது இலக்கியத் தரம் உள்ள பாடல்களையே அப்படி மாற்றி எழுதிக் கேள்வி கேட்கலாம்; அப்படி இருக்கத் திரைப்பாடல்களை மாற்றி எழுதுவதா கடினம் என்பதாகத் தான் என் கருத்து இருந்தது. (ஆனால் அதே நேரத்தில் இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் அவ்வப்போது திரைப்பாடல்களிலும் வந்து கொண்டு தான் இருக்கின்றன).
மக்களிடம் வரவேற்பு பெற்றுவிட்டதாலேயே அது நல்ல கவிதை என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதே போல் எது கவிதை என்பதும் ஒவ்வொருக்கும் வேறுபடும். எனக்குக் கவிதையாகத் தோன்றுவது மற்றவருக்குத் தோன்ற வேண்டும் என்று இல்லை.
சுஜாதாவின் கருத்து நல்ல கருத்து. அவர் கவிதைக்குத் தரும் வரையரையும் நன்கு இருக்கிறது. ஆனால் அது மட்டுமே கவிதை; மற்றவை இல்லை என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
நல்ல கருத்துள்ள திரைப்பாடல்களும் கவிதைகளும் மக்களைச் சென்றடைவது கடினமாக இருக்கிறது என்பதனை ஒத்துக் கொள்கிறேன் (ஒரு வேளை நான் எப்போதோ எழுதிய கவிதைகளும் அப்படித் தானோ? :-) யாரும் படிக்க மாட்டேன் என்று விட்டார்களே?! :-) )
உங்கள் பின்னூட்டத்தில் கடைசிப் பத்தி புரியவில்லை - சில நல்ல கவிதைகளைப் போல. :-)
Saturday, February 24, 2007 11:44:00 AM
--
சந்தோஷ் aka Santhosh said...
உங்களோட விநோதமான செயல்களை(weird things) சொல்ல சொல்லி இங்க கூப்பிட்டு இருக்கேன், கொஞ்சம் சொல்ல முடியுமா?
Saturday, March 24, 2007 9:33:00 PM
--
குமரன் (Kumaran) said...
சந்தோஷ். அழைப்பிற்கு நன்றி. நானும் ஐந்து பேரைக் கூப்பிடணுமாம். என்னையும் ஐந்து பேர் கூப்பிடட்டும்ன்னு காத்துக்கிட்டு இருக்கேன். இராமநாதன், (வி)எஸ்.கே., நீங்க - மூணு பேர் ஆயாச்சு. இன்னும் ரெண்டு பேர் கூப்பிடட்டும். :-)
சும்மா சொன்னேன். நாளைக்கு எழுதலாம்ன்னு இருக்கேன். எழுதுறேன். :-)
Saturday, March 24, 2007 10:11:00 PM
--
cheena (சீனா) said...
குமரன் பொறுமையா படிச்சிட்டு எல்லாத்துக்குமெ பதில் போடுரேன்
http://keettathilpidiththathu.blogspot.com
Friday, November 09, 2007 1:14:00 PM
--
கோவி.கண்ணன் said...
உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Friday, November 09, 2007 8:58:00 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சீனா ஐயா.
நீங்கள் தந்த சுட்டிக்கு நன்றி. இப்போது புரிகிறது ஏன் நான் கேட்டதில் பிடித்தது என்று உரல் (URL ) கேட்ட போது பிளாக்கர் Not Available என்று சொன்னது என்று. அப்புறம் தான் கேள்பிடி.பிளாக்ஸ்பாட்.காம் என்று எடுத்துக் கொண்டேன்.
Saturday, November 10, 2007 8:43:00 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி கோவி.கண்ணன். உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Saturday, November 10, 2007 8:44:00 PM
--
வல்லிசிம்ஹன் said...
திரைப்பட பாடல்கள் வரிகளில் உள்ள கற்பனை, இசை, பாடியவர்கள், ஆடியவர்கள் என்று பல பரிமாணங்களைக் கொண்டவை. சில பாடல்களில் எல்லாமே சிறப்பா அமைஞ்சிருக்கும். சில பாடல்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ குறையலாம்.
//
இதுதான் உண்மை குமரன்.
எனக்கும் இந்தப் பாட்டு மிகப் பிடிக்கும்:))
நல்லா அனுபவிச்சுப் பாடி யிருக்காங்க.
கிராமப் புறமா ஒரு குடும்பத்தையே பார்க்கிறதனாலே ரொம்ப மகிழ்வா உணருவேன்.
மீரா,விஷால்,ராஜ்கிரண் எல்லாமே நடிப்பில ஈடுபாட்டோட செய்திருக்காங்க.
நன்றி.:))
Saturday, November 10, 2007 9:02:00 PM
--
தஞ்சாவூரான் said...
சிரேயா கொரல் கொரல்தானுங்க... விஜய் தம்பியும் அலட்டிக்காம பாடியிருக்கார்..
Saturday, November 10, 2007 10:45:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் வல்லியம்மா. ஒரு நல்ல படம் இந்தப் படம்.
Sunday, November 11, 2007 6:04:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் தஞ்சாவூரன். நன்கு பாடியிருக்கிறார்கள் இருவரும்.
Sunday, November 11, 2007 6:05:00 PM