Saturday, March 22, 2008

வசீகரா... என் நெஞ்சினிக்க...

நாம போடற பாட்டெல்லாம் அம்மணிகளுக்குப் பிடிக்குமோ இல்லையோ? ஒரு அம்மணி திருக்குறள் பதிவுல வள்ளுவர் ஐயாங்க பார்வையில மட்டும் தான் எழுதியிருக்காரா? அம்மாங்க பார்வையில எழுதலையான்னு கேட்டாங்க. அதனால அம்மணிகளுக்குப் பிடித்தப் பாடலா ஒன்னு போடலாமேன்னு சிந்திச்சப்ப ரெண்டு மூனு பாடல்கள் தோணிச்சு. அதுல இன்னொரு அம்மணி பரிந்துரைத்தப் பாடலையே போடலாம்ன்னு இந்தப் பாடலைப் போடுகிறேன். :-)

திரைப்படம்: மின்னலே
வெளிவந்த வருடம்: 2000
இயற்றியவர்: தாமரை
பாடகி: பாம்பே ஜெயச்ரி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா)



தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா)


***

இந்தப் பாடல் 22 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது.

5 comments:

  1. இந்தப் பாடல் 22 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    46 comments:

    முத்துகுமரன் said...
    அழகான கவிதை வரிகள் நிறைந்திருக்கும் பாடல் இது. எளிமையான இயல்பான வார்த்தைகளை அழகாக முத்துக்களாக கோர்த்திருப்பார் தாமரை. கவிதைகள் மென்மையாக மிதக்கும் வண்ணம் இசையும் இருக்கும். ஆனால் படமாக்கிய வகையில் எனக்கு மிகுந்த ஏமாற்றம் தந்தது. இன்னும் கவித்துவமாய் படம்பிடித்திருக்கலாம் என்பது என் எண்ணம்..

    நன்றி குமரன்

    Monday, May 22, 2006 6:05:00 AM

    குமரன் (Kumaran) said...
    இந்தப் பாடலை இந்தப் பதிவில் இட்ட பிறகு ஒன்று தோன்றியது. இந்தப் பாடல் உண்மையாகவே பெண்களுக்குப் பிடித்தப் பாடல் தானா? இல்லை இதுவும் ஆண்களுக்குப் பிடித்த பாடலா? படிக்கிறவங்க தான் சொல்லணும். :-)

    இயற்றியவர் ஒரு பெண் தானே. அதனால் இது பெண்களுக்கும் பிடித்த பாடல் என்று நம்புகிறேன். :-)

    Monday, May 22, 2006 6:11:00 AM

    சீனு said...
    ///காதலெனும் முதுவெளியில் கடிகார நேரம் கிடையாதே //

    அது "காதலெனும் முடிவெளியில் கடிகார நேரம் கிடையாதே" என்று நினைக்கிறேன்.

    Monday, May 22, 2006 6:16:00 AM

    johan -paris said...
    எனக்கும் பிடித்த பாடலில் ;ஒன்று! அழகிய நளினமான இசை; ஏக்கமும்,விரகதாபமும் கலந்த குரல்; இதமான வரிகள்; ஆனால் முத்துக்குமரனை நான் ,ஆமோதிக்கிறேன்; படமாக்கிய விதம் மோசம்.
    எத்தனை தடவை கேட்டாலும்; திகட்டாத பாட்டு எனக்கு!இது இருபாலாரையும் கவரும் என்பது என் கணிப்பு
    யோகன்
    பார்ஸ்

    Monday, May 22, 2006 6:26:00 AM

    முத்துகுமரன் said...
    காதலெனும் முடிவிலியில் என்பதுதான் சரி

    Monday, May 22, 2006 6:35:00 AM

    G.Ragavan said...
    இது எல்லாருக்கும் பிடித்த பாடல் என்று சொல்வேன். ஆண் பெண் குழந்தை பேதமின்றி அனைவரும் ரசித்த பாடல். சமீபத்தில் அப்படி ரசிக்கப்பட்டது சுட்டும் விழிச்சுடரே என்று கருதுகிறேன்.

    Monday, May 22, 2006 6:36:00 AM

    சிங். செயகுமார். said...
    2000 ல் அந்த பாடலாசிரியரை சந்திக்கும் வாய்ப்பு. தமிழில்திரையுலகில் முதன்முதலாக ஒரு ஆணை வருணித்து எழுதிய பாடலாசிரியை. விக்ரமனின் "உன்னிடத்தில் என்னை கொடுதேன்" இல் பிரபலமான இவரது பெயர் மீண்டும் இந்த பாடல் மூலம் மீள்பரிமாணம். மனதை வருடும் பாடல்

    Monday, May 22, 2006 7:26:00 AM

    வல்லிசிம்ஹன் said...
    குமரன் நல்ல பாடல்.பாம்பே ஜெயஸ்ரீஇயின் அமுதமான குரல்.கேட்ட பிறகு படத்தைப் பார்க்கும் போது இனம் புரியாத கோபமும் ஏமாற்றமும் வந்தது. அப்புறம் தமிழை ரசிக்க இப்படியும் ஒரு வழியோ என்று நினைத்தேன்.நல்ல வேளை,ரேடியோ கேட்கும் பழக்கம் இருப்பதால் பாடல் பிழைக்கிறது. நன்றி

    Monday, May 22, 2006 8:27:00 AM

    நந்தன் | Nandhan said...
    Nothing about this song in particular.
    One of my friends (a girl) said this

    "If I will have to marry some one, I should be able to relate 'snegithane' song with him. If someone will have to marry me he should be able to relate 'kaadal sadugudu' song with me ;)

    Monday, May 22, 2006 8:31:00 AM

    குமரன் (Kumaran) said...
    நன்றி முத்துகுமரன். நல்ல கவிதை; நல்ல குரல்; நல்ல இசை என்பதில் ஐயம் இல்லை. :-)

    முடிவெளியில் என்று தான் நானும் முதலில் கேட்டேன். ஆனால் அந்த சொல் எந்த பொருளும் தருவதாகத் தோன்றவில்லை. அதனால் முதுவெளியைத் தான் அப்படி பாடகர் பலுக்கிவிட்டாரோ (உச்சரித்துவிட்டாரோ) என்று தோன்றியது. ஆனால் அது முடிவிலியில் என்று நீங்கள் சொன்னதும் அது அந்த வரியில் மிக நன்றாகப் பொருந்துவதை உணர்ந்தேன். அதனால் அந்தச் சொல்லை பதிவிலும் மாற்றிவிட்டேன். மிக்க நன்றி.

    பலுக்குதல் என்பது உச்சரித்தல் என்று உங்களுக்குத் தெரியாது என்று நினைத்து அடைப்புக்குறிக்குள் சொல்லவில்லை. பலுக்குதல் என்ற சொல் இன்னும் புழக்கத்தில் அதிகமாய் வரவில்லையாதலால் படிப்பவர்களில் யாருக்காவது உதவும் என்று தான் உச்சரித்தல் என்பதனையும் சொன்னேன்.

    Monday, May 22, 2006 10:56:00 AM

    குமரன் (Kumaran) said...
    சீனு, திருத்தம் சொன்னதற்கு நன்றி. முடிவெளி என்று தான் எனக்கும் முதலில் கேட்டது. ஆனால் முத்துகுமரனின் பின்னூட்டத்தைப் பார்த்தபின் முடிவிலியில் என்பது தான் நமக்கு அப்படி கேட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

    காதல் என்னும் முடிவே இல்லாத ஒன்றில் கடிகார நேரம் என்பது கிடையாதே என்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.

    Monday, May 22, 2006 10:58:00 AM

    குமரன் (Kumaran) said...
    நன்றி யோகன் ஐயா. ஒரு பதிவு எழுதும் வகையில் உங்கள் பின்னூட்டங்கள் இருக்கின்றன. எப்போது உங்கள் வலைப்பூவைத் துவங்கப் போகிறீர்கள்? இணையத்திலும் எழுதத் துவங்கலாமே?

    Monday, May 22, 2006 10:59:00 AM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் இராகவன். எல்லாரையும் 'வசீகரிக்கும்' பாடல் தான் இது. :-) சுட்டும் விழிச்சுடரே பாடல் கூட மிகவும் பிடித்தப் பாடல். விரைவில் அதனையும் இங்கு இடுகிறேன். பாடகர் விழிச்சுடரே என்று பாட பாடகி விழிசுடரே என்று எல்லா இடத்திலும் ஒற்றினைப் பலுக்காமலேயே பாடுவார் இந்தப் பாடலில். கவனித்திருக்கிறீர்களா?

    Monday, May 22, 2006 11:01:00 AM

    குமரன் (Kumaran) said...
    செயக்குமார். நீங்கள் சொல்லும் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்; என் உள்ளமெல்லாம்...' என்று போகுமே அந்த பாடலா? இளங்கவி திரைக்கவியைச் சந்தித்திருக்கிறீர்களா? நன்று. எப்போது இந்தப் பழங்கவியைச் சந்திக்கப் போகிறீர்கள்?

    Monday, May 22, 2006 11:03:00 AM

    குமரன் (Kumaran) said...
    வல்லி. எனக்கென்னவோ படம் எடுக்கப் பட்ட விதம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் பாடல் வரிகளும், பாடுபவர்களின் குரலும், இரண்டிற்கும் பின்னால் இசையும் தான் திரைப்பாடல்களில் முக்கியமாகப் படுகின்றன. அதனால் இந்தப் பாடல் எப்படி படமெடுக்கப்பட்டது என்று கூட நினைவில்லை. :-) தமிழை ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்படி பாடல்களை பதிவுகளில் இட்டு முகமறியா அன்பர்களுடன் சேர்ந்து ரசிப்பதும் ஒரு புது வகை. மிகவும் பிடித்திருக்கிறது. :-)

    Monday, May 22, 2006 11:06:00 AM

    குமரன் (Kumaran) said...
    நந்தன். இரண்டு நல்ல பாடல்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். புது மாப்பிள்ளைக்கு ஒரு நண்பர் நல்ல கருத்து தான் சொல்லியிருக்கிறார். உண்மை தான் அது. விரைவில் நீங்களும் முழுவதும் உணர்வீர்கள்; ஏன் முழுவதும் என்று சொல்கிறேனென்றால் ஏற்கனவே அதன் தொடக்கத்தை நீங்கள் உணரத் தொடங்கியிருப்பீர்கள் என்பதால். :-) இன்னொரு முறை உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

    Monday, May 22, 2006 11:08:00 AM

    வெளிகண்ட நாதர் said...
    குமரன் என்னது 'மயங்குகிறாள் ஒரு மாது' பாட்டு போட்டிட்டீங்க! ஏதுன் வசீகர பார்வை பார்த்திட்டீங்களா?

    Monday, May 22, 2006 11:09:00 AM

    குமரன் (Kumaran) said...
    வெளிகண்டநாதர். மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு போடச் சொல்றீங்களா? :-) பாக்குறேன். :-)

    நம்ம பார்வை வசீகரப்பார்வை எல்லாம் இல்லீங்கோ.... :-)

    Monday, May 22, 2006 12:34:00 PM

    Sivabalan said...
    குமரன்,

    நல்ல பாடலங்க!!

    நன்றி !!

    Monday, May 22, 2006 1:00:00 PM

    மலைநாடான் said...
    இப்பாடல் குறித்து முத்துக்குமரன், யோகன், வள்ளி, ஆகியோரது கருத்துக்களே எனது கருத்துக்களும்.

    Monday, May 22, 2006 1:36:00 PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவபாலன் & மலைநாடான்.

    Monday, May 22, 2006 1:43:00 PM

    Anonymous said...
    குமரன்,

    மிகவும் பிடித்த பாடல். சுட்டும் விழி சுடரே lyricsக்காக காத்திருப்பேன். முடிவிலி என்பதை Englishல் INFINITY என்பார்கள்.

    குமரேஷ்

    Monday, May 22, 2006 2:54:00 PM

    வெற்றி said...
    குமரன்,
    பாடல் சுட்டிக்கு நன்றிகள்.
    ஏனோ தெரியவில்லை இப் பாடலின் இசை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பாடல் வரிகளும் ஓகோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு கவிநயம் நிறைந்ததாகப்படவில்லை என்பது தான் என் கருத்து. ஒவ்வொருவரின் இரசனைகளும் வேறுபட்டவை. எனவே இப் பாடல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதனால் தரம் குறைந்த பாடல் என்று பொருள் இல்லை. நன்றிகள்.

    Monday, May 22, 2006 3:14:00 PM

    சிங். செயகுமார். said...
    நீங்க சொல்லும் பாட்டு எங்கன்னு தெரியல.நாஞ்சொல்ரது மல்லிகைப்பூவே மல்லிகைபூவே பார்த்தாயா? பொன் மாலை என் தோடத்தில்.......... ,பாடியவர் சுஜாதா

    Monday, May 22, 2006 5:02:00 PM

    சிவமுருகன் said...
    நல்ல பாடல், சாதாரண வரிகளை கொண்டு, பாடல் எழுதப்பட்ட விதம், பாடலில் தெரியும் கொஞ்சம் அதிகமான கற்பனை வளம், படமாக்கிய விதமும் நன்றாக இருக்கும்,

    //குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
    அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்//

    என்ற வரிகளை முதல் முறையாக அனுபவிக்கிறேன். பாடலின் எழுத்து வடிவத்தை கண்டதில்லை, பாடலை எழுத்திலும் தந்தற்க்கு மிக்க நன்றி.

    Monday, May 22, 2006 10:24:00 PM

    Merkondar said...
    நல்ல பாடல் இணிமையானது

    Tuesday, May 23, 2006 7:00:00 AM

    lakshmi said...
    nanri kumaran....
    appadiye pazhaiya paadalum podalaame...
    kanna daasan evalavo paadal arumaiyaa yezhudierukkaraar....

    Tuesday, May 23, 2006 11:24:00 AM

    குமரன் (Kumaran) said...
    குமரேஷ், ரொம்ப பிடித்தப் பாடலா? :-) சுட்டும் விழிச்சுடரே விரைவில் வரும். எத்தனை விரைவில் என்று தெரியாது. :-) ஆமாம் முடிவிலி என்பது Infinity தான்.

    Tuesday, May 23, 2006 1:03:00
    PM

    குமரன் (Kumaran) said...
    வெற்றி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இந்தப் பாடலின் வரி சொல்லவந்தவற்றை நேரடியாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன். உணர்வுகளைத் தொடுவதால் நல்ல கவிதை என்று எண்ண வைக்கிறது.

    Tuesday, May 23, 2006 1:04:00 PM

    குமரன் (Kumaran) said...
    செயக்குமார். நீங்க படத்தின் தலைப்பைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் அது பாடலின் முதல் வரி என்று எண்ணிவிட்டேன். மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா? பாடலும் நல்ல பாடல். குறித்து வைத்துக் கொண்டேன். :-)

    Tuesday, May 23, 2006 1:05:00 PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவமுருகன். கற்பனை வளம் கொஞ்சம் அதிகமோ உங்களுக்கு? :-)

    Tuesday, May 23, 2006 1:06:00 PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி என்னார் ஐயா.

    Tuesday, May 23, 2006 1:06:00 PM

    குமரன் (Kumaran) said...
    பழைய பாடலும் போடுகிறேன் லக்ஷ்மி. இந்த வலைப்பூவை ஒரேயடியாக அதிகம் கவனிப்பதாய் மற்ற வலைப்பூக்கள் எல்லாம் கூச்சல் போடுகின்றன. அவற்றையும் கொஞ்சம் கவனித்துவிட்டு பின்னர் இந்த வலைப்பூவிற்கு வருகிறேன். :-)

    Tuesday, May 23, 2006 1:07:00 PM

    சிவமுருகன் said...
    //கற்பனை வளம் கொஞ்சம் அதிகமோ உங்களுக்கு? :-)//

    என்ன இப்படி கேட்டு போட்டீங்க?

    பல விதமான பின்னூட்டம், பல விதமான (unique) பதிவுகள்னு நீங்களே பார்த்துகொண்டு தானே இருக்கிறீர்கள்.

    ஒருவேளை பார்க்கவில்லையோ? :-)

    Wednesday, May 24, 2006 8:08:00 AM

    பொன்ஸ்~~Poorna said...
    குமரன்,
    எல்லாரும் வந்து போனதற்கு அப்புறம் வருகிறேன்.. இருந்தாலும் ஒரு மாற்றம் சொல்லத் தோணுதே!!

    "நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
    ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே"
    --- இது தானே கேட்ட நினைவு?!!

    பெண்களுக்கு பிடித்த பாடல் தாங்க.. என்ன சந்தேகம்?!! :)
    படமாக்கியவிதத்தில் தான் பாடலின் அழகு கெட்டுவிட்டது என்பது என் எண்ணம்.

    Thursday, May 25, 2006 11:47:00 PM

    Karthik Jayanth said...
    குமரன்,

    :-)

    (ஏதாவது கருத்து சொல்லி நமக்கு நாமே திட்டத்தில் ஆப்பு வைக்க எனக்கு இஷ்டம் இல்ல)

    Friday, May 26, 2006 10:04:00 AM

    பொன்ஸ்~~Poorna said...
    //(ஏதாவது கருத்து சொல்லி நமக்கு நாமே திட்டத்தில் ஆப்பு வைக்க எனக்கு இஷ்டம் இல்ல) //
    பேராசிரியர் நல்லா மெரண்டிருக்காரு.. அவரோட இஷ்ட தெய்வங்களை அழைச்சு நல்லா வேப்பிலை அடிக்கச் சொல்லணும்!!! :)

    Friday, May 26, 2006 10:21:00 AM

    குமரன் (Kumaran) said...
    பாத்துக்கிட்டுத் தான் இருக்கேன் சிவமுருகன். நான் சொன்னது திருமணம் ஆகாத நீங்கள் தந்திருந்தப் பின்னூட்டத்தைப் பார்த்துத் தான். :-)

    Friday, May 26, 2006 11:25:00 AM

    குமரன் (Kumaran) said...
    பொன்ஸ். ஏங்குகிறேன் ரெண்டு தடவை வருதா இல்லை ரெண்டாவது தேங்குகிறேனான்னு ஒருதடவைக்கு ரெண்டு தடவை கேட்டுப் பாத்துட்டுச் சரி பண்றேன். நீங்க சொல்றது சரியா இருக்கும்ன்னு தோணுது.

    கடைசி ஒரு அம்முணியாவது வந்து பின்னூட்டம் போட்டீங்களே. எங்கடா யாரையும் காணோம்ன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ;-)

    Friday, May 26, 2006 11:27:00 AM

    குமரன் (Kumaran) said...
    கார்த்திக்கு & பொன்ஸு, நீங்க ரெண்டு பேருமே என்ன சொல்றீங்கன்னு இந்த மரமண்டைக்கு ஏறவே இல்லை. :-( ?????

    Friday, May 26, 2006 11:28:00 AM

    நாமக்கல் சிபி said...
    அழகான படலும், அதற்கேற்றார்போல் இசையும்! அனுபவித்து ரசிக்க கூடிய பாடல்!

    Wednesday, May 31, 2006 7:04:00 AM

    பொன்ஸ்~~Poorna said...
    //கடைசி ஒரு அம்முணியாவது வந்து பின்னூட்டம் போட்டீங்களே. எங்கடா யாரையும் காணோம்ன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ;-)
    //
    ம்ம்.. என்ன செய்யறது?!! எல்லாத்துக்கும் நம்ம தான் ரெப்ரசன்ட் பண்ண வேண்டியதா இருக்கு!! இணையத்தமிழின் ஒரே இளைய சமுதாய பிரதிநிதியா இருந்தாலும், அம்மணிகளின் பிரதிநிதியா இருந்தாலும் ;)

    Wednesday, May 31, 2006 12:26:00 PM

    குமரன் (Kumaran) said...
    உண்மை சிபி. நல்ல பாடல்; நல்ல இசை.

    Wednesday, May 31, 2006 3:40:00 PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி பொன்ஸ். தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் குமரன். :)

    Wednesday, May 31, 2006 3:40:00 PM

    பொன்ஸ்~~Poorna said...
    //நன்றி பொன்ஸ். தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் குமரன். :) //

    நினைப்புத் தான்னு சொல்லி ஒரு குட்டு குட்டுவீங்கன்னு பார்த்தா இப்படி முடிச்சிட்டீங்களே.. குத்து ஏதாச்சும் விழுந்துடப் போகுது - எனக்குத் தான் :)

    Wednesday, May 31, 2006 3:53:00 PM

    குமரன் (Kumaran) said...
    அதெல்லாம் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது பொன்மகளே. இன்று வம்புக்கு இழுக்கும் மனநிலையில் இல்லையோ என்னவோ? :-)

    Wednesday, May 31, 2006 4:05:00 PM

    ReplyDelete
  2. பாம்பே ஜெயஸ்ரீ பாடியதால் ( அவருடைய வித்தியாசமான குரலால்) இந்தப் பாடல் பொலிவுற்று அனைவரையும் வசப்படுத்தியதென்னவோ மறுக்க முடியாத உணமை!

    ReplyDelete
  3. வசீகரப்பாடல் இழுத்துவிட்டது என்னையும் இங்கு...
    நன்றி குமரன்.

    ReplyDelete
  4. ஆமாம் ஐயா. வித்தியாசமான குரல் தான். இதே போல் தான் 'என்னவளே அடி என்னவளே' பாட்டும் உன்னிகிருஷ்ணனின் குரலில் பலருக்கும்பிடித்தது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. வாங்க ஷைலஜா. ரொம்ப நல்ல பாடல் இது. அது தான் உங்களை இழுத்து வந்துவிட்டது. :-)

    ReplyDelete