Thursday, February 14, 2008

மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப்பா....

அன்பென்றால் அதில் காதல் மட்டுமா அடங்கும். நட்பும் அன்பு தானே. அதனால் தானோ என்னவோ நட்பினைப் பற்றிய இந்த கவிதைகளை மின்னஞ்சலில் இன்று ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். அந்தக் கவிதைகளில் இரண்டு எனக்குப் பிடித்தன. அவற்றை இங்கே இடுகிறேன். எழுதியவர் யார் என்று தெரியாது.

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில் தான்
உணர்ந்தேன் நமக்கான நட்பை.


தேர்வு முடிந்த கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று.

13 comments:

  1. பின்னூட்டக் கயமை. நட்புக்காக.

    ReplyDelete
  2. இரண்டுமே உங்களைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை குமரன்..

    மிக எளிமையான, புரிகின்ற கவிதைகள்..

    நன்று..

    இதற்கெதற்கு பின்னூட்ட கயமைத்தனம்..

    இன்னும் ஒரு நாலு மணி நேரம் காத்திருந்தால் இந்தியா விடிந்தவுடன் வந்து கொட்டப் போகிறது கமெண்ட்டுகள்.. அதுக்குள்ளய்யா..?

    ReplyDelete
  3. குமரன்,
    நேற்று இல்லாத மாற்றம் என்னது ... :-))
    //குமரன் (Kumaran) Disciple of GRaa and KRS//

    ஆழ்வார்க்கடியான் அல்லது தொண்டரடி பொடியாழ்வாரா :-))

    அந்தக்கவிதைகள் தபு சங்கர் எழுதியது என்று நினைக்கிறேன், விகடனில் முன்னர் படித்த நினைவு.யாராவது கவிச்சக்கரவர்த்திகள் இருந்தால் சரியா என்று கூறவும்!

    ReplyDelete
  4. இந்தியாவிலிருந்து கொட்டப் போகிற மறுமொழிகளில் நான் தான் முதல்வனா ??

    கிறுக்கல்களில் கவிதைகள் அருமை. பிரியா விடை பெற்று பிரியும் நேரத்தில் கிறுக்கல்கள் தான் உள்ளம் நெகிழ்ந்து எழுதத் தோன்றும். அற்புதக் கவிதைகள், தத்துவக் கவிதைகள் நடுநடுவே முளைக்கும். அவனிடம் பேசியதை விட அவனுக்காக பேசியது அதிகம் இருக்கும்.

    ReplyDelete
  5. வாங்க உண்மைத் தமிழன். பின்னூட்டக்கயமை செய்து வெகு நாட்களாகிவிட்டது. அதனால் செய்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். :-)

    ஆனால் பின்னூட்டங்கள் எல்லாம் கொட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. பாருங்கள் மூன்றே பேர் தான் இதுவரை பின்னூட்டியிருக்கிறார்கள்.

    வவ்வால் பல நேரங்களில் கொட்டுவார். அவரும் அடக்கி வாசித்திருக்கிறார் பாருங்கள். ஆனால் அவர் தான் அவருடைய க்ருத்துகள் கண்ணாடி போன்றவை - கொட்ட நினைப்பவர்களுக்கு அவர் கருத்துகள் கொட்டும்; அன்பாகப் பேசுபவர்களுக்கு அன்பினைக் கொட்டும் - என்று சொல்லியிருக்கிறாரே. உண்மை தான் போலிருக்கிறது.

    ReplyDelete
  6. வவ்வால்,

    அந்த மாற்றம் ஒரு நாளைக்குத் தான். ரெண்டு பேருக்குச் சீடன் என்று சொன்னேன். அதில் ஒருவர் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை - என்ன வேணும்னாலும் சொல்லிக்கோன்னு விட்டுட்டார். இன்னொருத்தர் புலம்பித் தள்ளிட்டார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் அந்த மாற்றம் நீக்கப்பட்டது. :-)

    நீங்களே அடியார்க்கு அடியான்னு சொல்லிக்கிறப்ப நான் சொல்லக் கூடாதா என்ன? :-)

    எனக்குத் தபு சங்கரும் அறிமுகம் இல்லை வவ்வால். நீங்கள் சொன்னது போல் 'நமக்குத் தொழில் கவிதை'ன்னு இருக்கிறவங்க தான் வந்து சொல்லணும்.

    ReplyDelete
  7. நீங்கள் என்றைக்குமே முதல்வர் தான் சீனா ஐயா. வலைச்சர வாரத்திற்குப் பின்னர் உங்களைப் பின்னூட்டங்களில் அதிகம் பார்க்க முடிவதில்லையே?

    நீங்க எழுதியிருக்கிற பின்னூட்டமே ஒரு கவிதையைப் போலத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  8. ஆமாம் குமரன், இப்போதெல்லாம் மறுமொழி போடுவதைக் குறைத்து விட்டேன். ம திரட்டியில் என் பெயர் முதலில் இருப்பதை உறுதி செய்த காலமும் உண்டு. ம்ம்ம்ம்

    இப்போது அன்புடன் புகாரி என்ற வலைப்பூவில் உள்ள அனைத்துக் கவிதைகளையும் வாசித்து மறு மொழி இடுவது தான் வேலை. ஆனால் அவை தமிழ் மணத்தால் திரட்டப் படுவதில்லை. அவ்வளவுதான். கவனித்ததற்கு நன்றி

    ReplyDelete
  9. மறுமொழி இடுவதைக் குறைத்துக் கொண்டால் பரவாயில்லை சீனா ஐயா. ஆனால் என் இடுகைகளை எல்லாம் படிக்காமல் இருந்துவிடாதீர்கள். படித்து முடித்த பின் ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்லுங்கள். வருகைப்பதிவாக 'உள்ளேன் ஐயா'ன்னாவது சொல்லிட்டுப் போங்கன்னு மத்தவங்களுக்குச் சொல்வேன். உங்களுக்கு அது கூட கட்டாயம் இல்லை. ஆனா கட்டாயம் படிக்கணும். :-)

    ReplyDelete
  10. வருகைக்கும் வந்ததைச் சொன்னதற்கும் நன்றி சிவமுருகன். :-)

    ReplyDelete
  11. அழகாகச் சொல்லியிருக்கீறீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. புதுகைத் தென்றலுக்குக் கூடல் குமரனின் நன்றிகள். :-)

    ReplyDelete