மொழிச்சிறுபான்மையினரான சௌராஷ்ட்ரர்களால் அரசு உதவி பெற்று நடத்தப்படும் மதுரை சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா வருகின்ற அக்டோபர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. நான் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த பள்ளி இது. மதுரைக்காரர்கள் நிறைய பேர் இந்தப் பள்ளியில் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பள்ளியில் படித்த வலைப்பதிவர்கள் யாராவது இருக்கிறீர்களா?
இந்த நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழ் இன்று கிடைத்தது. அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில அரசியலாளர்களும் பல அதிகாரிகளும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
உங்கள் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தாரே
ReplyDeleteதிரு.சொ.சொ.மி.சுந்தரம் - அவரை நினைவிருக்கிறதா?
அவர் எங்கள் ஊர்க்காரர்
பெரிய த்மிழறிஞர், கவிஞர் மற்றும் சிறந்த ஆன்மிகப் பேச்சாளர்,
சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம் என்ரு கவியரசரால் பாராட்டப் பெற்றவர்
வாத்தியார் ஐயா.
ReplyDeleteதிரு. சொ.சொ.மி. சுந்தரம் ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அவர் எங்கள் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தார் என்பதை அறிந்திருந்தேனில்லை. இன்றே அறிந்தேன். இந்த மகிழ்ச்சியான தகவலைச் சொன்னதற்கு நன்றி ஐயா.
சுந்தரம் ஐயா பெரும் தமிழறிஞர்; கவிஞர்; சிறந்த ஆன்மிகப் பேச்சாளர் என்பதையும் அறிந்திருந்தேன்.
சொல்லுக்குச் சொல் மீறும் சுந்தரம் என்று கவியரசரால் பாராட்டப்பெற்றவரா?! மிக்க மகிழ்ச்சி. பொருத்தமான பாராட்டு என்று நினைக்கிறேன்.
sorry for posting in english...am also a product of that famous school.I was the third generation to study in that school from my family.those are very beautiful days..thanks for giving this info
ReplyDeleteநமது ஊருக்கு இன்னுமொரு மாணிக்கம் அல்லவா இப்பள்ளி.
ReplyDeleteகிருத்தவ மிஷின் ஆஸ்பத்திரி அருகில் இருக்கிறதே, அதுதானே?
பள்ளிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் குமரன்.....
அப்பள்ளியின் ஒரு நாள் மாணவன். காலையில் அப்பா அழைத்து சென்று விட்டுவிட்டு வீடு சென்று சேர்வதற்குள் நான் 12 ல் ஏறி வீட்டுக்கு சென்று விட்டேன். காரணம் ஒன்றுமில்லை வாத்தியார் வகுப்புக்குள் நுழைந்ததும் "பீஸ்" என்றார். பக்கதிலிருந்த பையன் சொன்னான் உட்கார் என்று பொருள் சௌராட்டிரத்தில் என்று .
ReplyDeleteமற்றபடி உழைப்பை நம்பும் அற்புதமான மக்கள் அவர்கள். பிறருக்கு துன்பம் விழைக்க கனவிலும் நினையாதவர்கள்.
I studied in Sourashtra Secondary School (next to New cinema) from 6th grade to 10th grade. we usually come to High school for play time since we don't have playground. I believe So.So.Mee. Sundaram worked in Sourasthra College as professor (not in the school).
ReplyDeleteமூன்று தலைமுறைகளாக சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி தினேஷ். நான் எங்கள் குடும்பத்தில் இரண்டாம் தலைமுறை. என் தந்தையாரும் இதே பள்ளியில் தான் படித்தார்.
ReplyDeleteநான் இந்தப் பள்ளியில் படித்த நாட்களும் இனிமையானவை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு வித்திடப்பட்டது இந்தப் பள்ளியில் தான் - என் தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்த்தவர்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் பட்டிமன்றத் தென்றல் திரு. கிரி.ச.சுரேந்திரன் ஐயாவும் திரு.சக்திவேல் ஐயாவும்.
கிறிஸ்தவ மிஷன் ஆஸ்பத்திரி அருகில் இருப்பது சௌராஷ்ட்ர தொடக்கப் பள்ளி மௌலி. இந்தப் பள்ளி காமராஜர் சாலையில் முனிச்சாலை தாண்டி தெப்பக்குளம் போகும் வழியில் இருக்கிறது. கல் கட்டிடம்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி மௌலி.
வரவனையான் செந்தில் செல்வன்.
ReplyDeleteஒரே நாள் தான் எங்கள் பள்ளிக்கு வந்தீர்களா? அந்த வாத்தியாரைத் தான் சொல்லவேண்டும்.
என்னிடம் எந்த வாத்தியாரும் சௌராஷ்ட்ரத்தில் பேசியதில்லை. நான் ட்யூசன் படித்த சௌராஷ்ட்ர ஆசிரியர்களும் தமிழில் தான் அவர்கள் வீட்டிலும் என்னிடம் பேசினார்கள். எப்படி உங்களிடம் அந்த ஆசிரியர் 'உட்கார்' என்பதை சௌராஷ்ட்ரத்தில் சொன்னார் என்று வியப்பாக இருக்கிறது. நீங்கள் ஒருவேளை பார்ப்பதற்கு சௌராஷ்ட்ரர் போல இருப்பீர்களோ?
ஆனால் என் நண்பர்கள் பட்ட கஷ்டம் இன்னொன்று இருக்கிறது. பெரும்பான்மையான மாணவர்கள் சௌராஷ்ட்ரர்களாக இருந்ததால் பள்ளிக்கு வந்தும் எல்லோரும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசிக் கொள்வோம். (அது தவறு என்று எண்ணவில்லை - இரு தமிழர்கள் அவர்களுக்குள் பேசும் போது தமிழில் பேசவேண்டும் என்பதைப் போல் இரு சௌராஷ்ட்ரர்கள் பேசும் போது இப்போதும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசுகிறோம்.சௌராஷ்ட்ரம் தெரியாத நண்பர்கள் இருக்கும் போது தமிழிலேயே பேசுவோம் ). வந்துட்டாங்கடா 'காய்ரா பூய்ரா கம்பெடுத்து ஓய்ரா'ன்னுக்கிட்டு - என்று நண்பர்கள் கடுப்பானதைப் பார்த்திருக்கிறேன். :-)
உழைப்பை நம்பும் மக்கள் என்பது என்னவோ உண்மை. அதனை மதுரை உள்ளூரில் (டவுனில்) இருப்பவர்களைக் காட்டிலும் இலக்குமிபுரம் குடியிருப்பு, திருநகர் போன்ற இடங்களில் வாழும் சௌராஷ்ட்ரர்களிடம் நன்கு காணலாம். அவர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பாட்டாளிகள். டவுனில் இருப்பவர்கள் நடுத்தர வர்க்கம் - அதனால் பல தொழில்கள் செய்பவர்கள்.
பிறருக்குத் துன்பம் விளைவிக்க கனவிலும் நினையாதவர்கள் - இது மதுரையில் வாழ்ந்து சௌராஷ்ட்ரர்களுடன் பழகும் உங்களிடம் இருந்து வருவதைக் கண்டு மிக்க மகிழ்கிறேன். (எந்த வம்புக்கும் போகாத பயந்தவர்கள் என்று மறைமுகமாகச் சொல்லவில்லையே?!) :-)
தெய்வா. சௌராஷ்ட்ர செகண்டரி பள்ளியில் படித்தீர்களா? அண்மையில் மதுரைக்குச் சென்ற போது நான் உங்கள் பள்ளி வழியே தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன்.
ReplyDeleteதிரு. சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள் சௌராஷ்ட்ர கல்லூரியில் பணி புரிந்தவரா? என் தம்பி இப்போது சௌராஷ்ட்ர கல்லூரியில் தான் நூலகராக பணி புரிகிறார். அவரிடம் மேல் தகவல்கள் கிடைக்கிறதா என்று கேட்கிறேன்.
நேற்று (05th Jan 2009) கோவை ராம் நகர் ஐயப்ப சேவா சங்கத்தில் திரு சொ சொ மீ சுந்தரம் அவர்கள் திருவாசகம் பற்றி மெய் சிலிர்க்கும் படி உரையாற்றினார். சௌராஷ்ட்ர கல்லூரியில் (B.Com) படிக்கும் போது (1976 -78) எனக்கு அவர் வணிக இயல் பேராசிரியராக இருந்தார். அன்று விவரம் அறியாமல் வகுப்பில் செய்த சேட்டைகளுக்கெல்லாம் சேர்த்து நேற்று அவர் பாதம் தொட்டு வணங்கி மகிழ்ந்தேன்
ReplyDeleteவாங்க சூப்பர் சுப்ரா. நீங்க சௌராஷ்ட்ர கல்லூரியில் படிக்கும் போது நான் சிறு குழந்தை. நீங்கள் கல்லூரியில் சேரும் போது எனக்கு நான்கே வயது. ஐயா தற்போதும் கல்லூரியில் பயிற்றுவிக்கிறாரா?
ReplyDeleteதிரு.சொ.சொ.மி.சுந்தரம் அவர்கள் சௌராஷ்ட்ர கல்லூரியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தார்
ReplyDeleteதிரு.சொ.சொ.மி.சுந்தரம் அவர்கள் சௌராஷ்ட்ர கல்லூரியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தார்
ReplyDeleteநன்றி சிறியவன்.
ReplyDelete