Friday, August 24, 2007
திருக்குறள் vs.காமசூத்திரம்
'குமரன். உனக்கு சமஸ்கிருதம் தெரியும்ல? காமசூத்திரம் படிச்சிருக்கியா?'
'படிச்சிருக்கேன் நடவரசு. ஆனா சமஸ்கிருதத்துல இல்லை. இங்கிலீஷுல எழுதி நிறைய புத்தகம் வந்திருக்கே. அதுல ஒன்னை நூலகத்துல இருந்து எடுத்துப் படிச்சேன்'
'சமஸ்கிருதத்துல நேரடியா படிக்கலாம்ல?'
'எதுக்கு?'
'நேரடியா படிச்சா என்ன எழுதியிருக்காங்கன்னு தெரியும். மொழிபெயர்ப்பைப் படிச்சா அவங்க சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதியிருப்பாங்க இல்லை?'
'அது உண்மை தான். மொழிபெயர்ப்புகளைப் படிக்கிறது நேரடியா படிக்கிற மாதிரி ஆகாது தான். ஆனா காமசூத்திரத்தை மொழி மாத்திப் படிச்சாலே போதும்; அவ்வளவு ஒன்னும் மாத்தி எழுத முடியாது'
'அப்ப எந்த புக்கை நேரடியா அந்த மொழியிலேயே படிக்கணும்ன்னு சொல்ற?'
'கீதை, பஜ கோவிந்தம், சகஸ்ரநாமம்ன்னு நெறைய புத்தகங்கள் இருக்கு. மொழிபெயர்ப்புகள்ல நெறைய நேரம் அவங்கவங்க சொந்த கருத்தையும் சேர்த்து எழுதியிருப்பாங்க. அந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறப்ப நேரடியா அந்த மொழியிலயும் படிக்கணும்'
'உனக்கு சமஸ்கிருதம் தெரியும். அதனால படிச்சுருவ'
'நானும் சமஸ்கிருதம் கத்துக்கிட்டவன் இல்லை. இந்த மாதிரி புத்தகங்களை அகராதி துணையோட படிச்சுப் புரிஞ்சுக்க முயற்சி செய்றவன் தான்'.
'குமரா. பகவத் கீதை படிக்கணும். எந்த புக்கு படிக்கலாம்?'
'இப்ப பகவத் கீதை படிச்சு என்ன பண்ண போற?'
'சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்'.
'கட்டாயம் அது படிக்க வேண்டிய புத்தகம் தான். ஆனா அதுக்கு முன்னால திருக்குறள் படி. சிம்பிளா விளக்கம் சொல்லி நிறைய புத்தகம் இருக்கு'
(இது 2004ல் எனக்கும் என்னுடன் வேலை பார்த்த நண்பர் நடவரசுவுக்கும் நடந்த உரையாடல். இது போல் பலருக்குத் திருக்குறள் படிக்க ஊக்குவித்திருக்கிறேன்.)
***
இப்போது இந்த உரையாடல் ஏன் நினைவிற்கு வந்தது என்று கேட்கிறீர்களா? காரணமாகத் தான்.
நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அவனுடைய பெயரைத் திருத்தி எழுதியிருக்கிறேன்.
ReplyDeleteஇந்த உரையாடல் நடந்த வருடமும் 2003 இல்லை; 2004 என்று சொன்னான். அதனையும் திருத்தியிருக்கிறேன்.
:-)
ReplyDeleteஐயனின் இன்பத்துப் பாலுக்கு பாயிரம், கூடல் பதிவிலா?
அது சரி! "கூடல்" பெயரும் சரியாகத் தான் உள்ளது!
அட ஆமாம். இந்தப் பதிவின் பெயர் 'கூடல்' என்பதும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. :-)நன்றி இரவிசங்கர்.
ReplyDelete