தமிழ்மணத்தில் இப்போது புதிதாக 'சூடான பதிவுகள்' என்று ஒரு பட்டியல் தமிழ்மண முதல் பக்கத்தின் இடப்பகுதியில் வருகிறது. இதனைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது? அதனால் என் மனத்தில் குறுகுறுத்துக் கொண்டிருக்கும் கேள்வியை இங்கே கேட்டுவிடுகிறேன். பதில் சொல்வதும் சொல்லாததும் தமிழ்மணத்தாரின் விருப்பம்.
இதுவரை Blog என்பதைப் பதிவு என்றும் Posting என்பதை இடுகை என்றும் சொல்லிவந்த தமிழ்மணம் இப்போது திடீரென்று 'சூடான இடுகைகள்' என்று இடாமல் 'சூடான பதிவுகள்' என்று குழப்புவது ஏன்?
இது தானப்பா என் கேள்வி! மற்ற ஏதாவது கேள்விகள் கேட்டு சொ.செ.சூ. வைத்துக் கொள்வேன் என்று நினைத்து வந்திருந்தால் மன்னித்துவிடுங்கள். அப்படியாவது நிறைய பேர் இந்த இடுகையைப் பார்த்து அது 'சூடான ...' பட்டியலில் வருகிறதா என்று பார்ப்போம். நிறைய பேர் பார்த்தால் தான் இடுகை அந்தப் பட்டியலில் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அந்தப் பட்டியல் எதன் அடிப்படையில் வருகிறது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். :-)
Page loads பொறுத்து அந்த இடத்தில் பதிவுகள் இடம் பெறுகின்றன குமரன்.தேன்கூட்டில் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள் பகுதிபோல
ReplyDeleteஎன்ன செல்வன் நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம கேக்காத கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கீங்க? :-)
ReplyDeleteஒரு சின்ன வேண்டுகோள் - என் ஆசைக்காக ஒரு பத்து முறை இந்த இடுகையை ரிப்ரெஷ் செய்யுங்களேன். :-)
ரூம் போட்டு யோசிப்பீங்களோ... 10 தடவைதானே.. செஞ்சிட்டேன்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசூடான பதிவுகளில் வந்துட்டது !
ReplyDelete:))
//இதுவரை Blog என்பதைப் பதிவு என்றும் Posting என்பதை இடுகை என்றும் சொல்லிவந்த தமிழ்மணம் இப்போது திடீரென்று 'சூடான இடுகைகள்' என்று இடாமல் 'சூடான பதிவுகள்' என்று குழப்புவது ஏன்?
ReplyDelete//
தவறை சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம்.
//இது தானப்பா என் கேள்வி! மற்ற ஏதாவது கேள்விகள் கேட்டு சொ.செ.சூ. வைத்துக் கொள்வேன் என்று நினைத்து வந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.//
:-)))
ரொம்ப ஃபிரியா???
ReplyDeleteஅண்ணாச்சி, சூடான லிஸ்ட்ல வந்துட்டீக. இந்த இடுகை/பதிவு லிஸ்டுல இருக்கு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் தமிழ்மணத்திற்கு போவதில்லை. உங்கள் பதிவிற்கு நேரடியாகவோ அல்லது தேன்கூடு வழியாகவோ வருகிறேன். அப்போதும் அங்கே நீங்க சூடா இருப்பீங்களோ?
ReplyDeleteஅப்பா என்னோடோ சூடு ஏத்தியாகிவிட்டது
நல்ல சந்தேகம், நல்ல யோசனை. நிலமை இப்பிடியாப் போச்சு. லிஸ்டில முதலில் வர வாழ்த்துக்கள். :)))
ReplyDeleteமுதலில் படித்தும் எனக்கும் ஏன் இப்படி? குமரனுமா? என்று தோன்றியது! பின் முழுதும் படித்ததில் சூடு எனக்கே!:)))
ReplyDeleteகோவியார் சொல்வதுபோல் உங்களின் பதிவும் சூடான பதிவுகளில் வந்தாச்சு!
சரி வந்ததுக்கு ஒரு கேள்வி கேட்டு வைப்போம்:-
சில பதிவுகளுக்கு இப்படி சூடான பதிவுகள் என்று தனி சிம்மாசனம் கொடுக்கும் பட்சத்தில் மற்ற பதிவர்கள் என்ன நினைப்பார்கள்? இதில் வராத பதிவுகள் என்ன ஆறிப்போன ஒன்றுக்கும் ஆகாத பதிவுகள் என்ற அர்த்தமா?
குமரன், நான் வந்த வேலை முடிஞ்சது:))))
அன்புடன்...
சரவணன்.
-l-l-d-a-s-u
ReplyDeleteதனி அறை நம்ம வீட்டுலயே இருக்கே. தனியா இன்னொரு விடுதி அறையை எடுத்து சிந்திக்கணுமா? :-)
கேள்வி(கள்) இருந்தன. முதல் கேள்வி உண்மையிலேயே முதன்முறை இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் வந்தது. இரண்டாவது கேள்விக்கு விடை இப்படித் தான் இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தது. அது என் இடுகை (பதிவு?) இப்போது அந்தப் பட்டியலில் வந்ததால் உறுதியாகிவிட்டது.
என் வேண்டுகோளுக்கிணங்க 10 தடவை இந்தப் பக்கத்தைப் பார்த்ததற்கு நன்றிங்க.
ஆமாங்க கண்ணன் அண்ணா.
ReplyDeleteகுறும்பன். அது தவறா என்றே தெரியாது. ஆனால் எனக்குக் குழப்பமாக இருக்கிறது என்று தெரியும்.
ReplyDelete:-)
This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மைத் தமிழன் என்ற பெயரில் தமிழ்மணத்தை விமர்சித்து ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. அது இந்த இடுகையின் நோக்கத்தை திசை மாற்றும் என்பதாலும் எனக்கு ஒப்புதல் இல்லாத கருத்து என்பதாலும் அதனை வெளியிடவில்லை. வேண்டுமென்றால் அதனை உங்கள் பதிவிலேயே இட்டுக் கொள்ளுங்கள் உண்மைத் தமிழரே (அ) உண்மைத் தமிழன் என்ற பெயரில் எழுதியவரே.
ReplyDeleteப்ரீ எல்லாம் இல்லை பாலாஜி. நிறைய வேலை இருக்கு. 'என் கேள்விக்கு என்ன பதில்?'ன்னு தலைப்பு போட்டிருக்கலாம் தான். இல்லாட்டி நேரடியா தமிழ்மணத்துக்கே அந்தக் கேள்வியை அனுப்பியிருக்கலாம். சரி. ஒரு சோதனை செய்து பார்க்கலாம்ன்னு தோணுச்சு. அம்புட்டுத் தான். :-)
ReplyDeleteகூமுட்டை என்ற பெயரில் எழுதும் நண்பரே. தகவலுக்கு நன்றி. நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்த இடுகை சூடாகிவிட்டது. :-)
ReplyDeleteபாத்தீங்களா. நீங்களும் இதை பதிவுன்னு சொல்றதா இடுகைன்னு சொல்றதான்னு குழம்பிட்டீங்க. :-)
இந்த இடுகையைச் சூடு ஏற்றியதற்கு நன்றி சிவா அண்ணா. ஆட்டோ மீட்டர் மாதிரி தான் போகுது இப்ப. :-)
ReplyDelete//அப்படியாவது நிறைய பேர் இந்த இடுகையைப் பார்த்து அது 'சூடான ...' பட்டியலில் வருகிறதா என்று பார்ப்போம//
ReplyDeleteஉங்கள் பதிவு இடம் பெற வேண்டுமா அல்லது இடுகை இடம் பெற வேண்டுமா நீங்களும் குழப்புறீங்களே
நண்பர் குமரன்,
ReplyDeleteநான் இந்தப் பதிவு சம்பந்தமாக தங்களுக்கு எந்தவித கருத்தையும் அனுப்பவில்லை. என் பெயரில் யாரோ போலியாக எழுதியிருக்கிறார்கள் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.. அந்தப் பின்னூட்டத்தைப் போடாமல் விட்டு என் மானத்தைக் காப்பாற்றியதற்காக உங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்.. இங்கே வந்து பாருங்கள்(http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_09.html) என் வீட்ல என்ன நடக்குதுன்னு..
உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கும், சிரமத்திற்கும் மன்னிக்கவும்.
உண்மைத்தமிழன்
எனக்கு ஒரு சந்தேகம். ஒரு இடுகையை அதிகம் ரெஃப்ரெஸ் செய்தால் அது அதிகம் பார்வையிடப்பட்ட இடுகையில் சேருமா? அல்லது தேன்கூட்டிலோ அல்லது தமிழ்மணத்திலோ அதிகம் க்ளிக் செய்து பார்வையிடப்பட்டால் வருமா?
ReplyDeleteபதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் பொழுது உண்மையிலேயே சூடாகத்தான் இருக்கிறது. மற்றபடி உங்கள் கேள்விக்கான விடை தெரிந்திருக்கவில்லை. இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteமலைநாடான். சூடான பதிவுகள் - இன்று பட்டியல்ல முதல்ல வராமலேயே இடுகை சூடான பதிவுகள் - இந்த வாரம் பட்டியலுக்குப் போயிடுச்சு. எப்படியோ என் ஆசையைத் தீர்த்துவச்ச தமிழ்மண வாசக தெய்வங்கள் அனைவருக்கும் நன்றி. :-)
ReplyDeleteசரவணன். உங்கள் நம்பிக்கையை மீறாமல் இருந்ததற்கு மகிழ்ச்சி. :-)
ReplyDeleteநீங்கள் கேட்ட கேள்விகள் எனக்கும் தோன்றியது. ஆனால் இந்த வசதியைச் சில தமிழ்மணம் பயனர்கள் விரும்பிக்கேட்டார்கள் என்று நினைக்கிறேன்; அப்படி கேட்டதை எங்கேயோ படித்த நினைவு.
சூடான பதிவுகள்/இடுகைகள் என்று தனி சிம்மாசனம் தேவையில்லை தான். ஆனால் அந்தப் பட்டியலில் வரும் இடுகைகளைப் பார்த்தால் அண்மையில் என் மேலாளர் ஒருவர் சொன்னது சரியாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. அவர் சொன்னதை தனியாக இன்னொரு இடுகையில் சொல்கிறேன்.
யார் எழுதுகிறார் என்பதைப் பொறுத்து "இடுகை, பதிவு" என்பன மாறுபடும்.
ReplyDelete'-/பெயரிலி' எழுதினால் 'இடுகை' என எழுதுவார். மற்றர்வர்கள் எழுதினால் வழக்கம்போல் 'பதிவு' என்று எழுதுவார்கள். தமிழ்மணத் திரட்டியின் குறிப்பிட்ட பகுதிக்குரிய தலைப்பு '-/பெயரிலி'யால் எழுதப்படவில்லையென்பது தெளிவு. (-/பெயரிலி'யே சிலநேரங்களில் இடுகையை 'பதிவு' என எழுதியிருக்கிறார்.)
சரியில்ல.. நீங்களுமா எங்களை மாதிரி சின்னப்பசங்களுக்குப் போட்டியா
ReplyDeleteஉப்புமா கிண்டுவீங்க?
பினாத்தல்-உப்புமா-சுரேஷ்
------------------
சுரேஷ் தனிமடலில் அனுப்பிய பின்னூட்டம் இது.
நீங்களுமா இப்படி மொக்கை போடணும்? இப்படி தலைப்பு வைத்து ஏமாற்றும் பதிவர்களை அடுத்த முறை படிக்க யோசிக்க வேண்டி இருக்கிறது ;(
ReplyDeleteஇரவிசங்கர். கோவிச்சுக்காதீங்க. இதுவே முதலும் கடைசியும் (அப்படித் தான் நினைக்கிறேன்). வழக்கம் போல் படிச்சுக்கிட்டு வாங்க. ரொம்ப ஏமாத்த மாட்டேன். :-)
ReplyDeleteநீங்க இடுகை/பதிவு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீங்களே. அதனை வைத்து சொல் ஒரு சொல்லில் ஒரு இடுகை இடலாம் என்று இருக்கிறேன். உங்கள் கட்டுரைப்பகுதியை எடுத்து இட உங்கள் அனுமதி தேவை.
என் பதிவின் உள்ளடக்கம் உங்களுக்குப் பயன்பட்டால் மகிழ்ச்சியே.
ReplyDeleteநன்றி இரவிசங்கர்.
ReplyDeleteநான் தமிழ்மணத்தை எட்டிப்பார்த்து நாட்கள் ஆகிவிட்டன என்ன நடக்குதுனு தெரியல
ReplyDelete