இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.
அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.
நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.
என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.
இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?
உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.
ரொம்ப நன்றிங்க.
***
இது ஒரு மீள்பதிவு. போன வருடம் இட்ட பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் இங்கே காணலாம். நன்றிகள்.
கண்டிப்பா செய்யனும் அண்ணா, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
ReplyDeleteசொல்லீட்டீங்க செய்து விட்டால் போகிறது.
ReplyDelete//யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு //
ReplyDeleteபக்கத்தில் லக்ஷ்மி வெடியை பற்ற வைக்காதிங்க ! (குமரன் சொல்லாமல் விட்டது)
:)))
குமரன்...!
தீபாவளிக்கு ஈகை [தருமம் - சொல் ஒருசொல்லில் மாட்டிவிடக் கூடாதே !:)
] சிந்தனை செய்திகளை சொல்லியிருக்கிறீர்கள் !
பாராட்டுக்கள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள் !
:)
படிப்பவர் மனங்களில்
ReplyDeleteநல்லுணர்வைத்தூண்டி
நற்செயல்களில் ஈடு படுத்திய
குமரனுக்கு
எனது மனமார்ந்த நன்றி,
நானும் +போட்டுள்ளேன்,
படிப்பவர் மனங்களில்
ReplyDeleteநல்லுணர்வைத்தூண்டி
நற்செயல்களில் ஈடு படுத்திய
குமரனுக்கு
எனது மனமார்ந்த நன்றி,
நானும் +போட்டுள்ளேன்,
உண்மை சிவமுருகன். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
ReplyDeleteகுமரன் சார்,
ReplyDelete//ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க //
இதை வழிமொழிகிறேன்.
நன்றி
நன்று...
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteநல்ல செயல். வாழ்த்துகள்.
பதிவு முன்னிற்க ஒரு + மற்றூம் ஒரு பின்னூட்டம்.
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு குமரன்.
ReplyDeleteபண்டிகை நாட்களிலாவது அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கச்
செய்வது நம் அனைவரது கடமை.
அதைத்தான் இஸ்லாம் ஈகைத் திருநான் என்று கொண்டாடுகிறது.
இதை மற்ற மதத்தினரும் மற்றும்
மதத்தைக் கடந்தும் மனிதம் என்ற முறையில் இஸ்லாமியரும் செய்ய வேண்டும்.
காலத்துக்கேற்ற பதிவு.
குமரன்,
ReplyDeleteநல்ல பதிவு.
வறுமை, பசி எனும் நரகாசுரனை ஒழித்து மக்கள் மனதில் இன்பம் எனும் கங்கை ஊற்றெடுக்க நாம் அனைவரும் முயலவேண்டும். அதை தொடங்க தீப்பாவளியை விட நல்ல நாள் எது?
ஏற்கனவே அதை செய்துகொண்டிருக்கும் உங்களை போன்றோர் அம்முயற்சியை மேலும் விரிவாக்கவும், அதை செய்யாதோர் இனி துவங்கவும் இந்த நாள் ஊக்கமளிக்கட்டும்.
ஓம் நமோ நாராயணா
நன்றி செந்தில் குமரன். தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகோவி.கண்ணன் ஐயா. ஆனாலும் உங்களுக்கு குறும்பு அதிகம். :-) ஆனா நீங்க சொல்றதும் சரி தான். எல்லாரும் சின்ன வயசுல பண்றது தானே. (நான் அப்படி பண்ணுனதா நினைவில்லை. எங்க வீட்டுப் பெரியவங்களைக் கேட்டாத் தான் தெரியும்).
ReplyDeleteஐயா. தருமம் என்பதே இப்போது தமிழ்ச்சொல் என்று ஆகிவிட்டதே. :-) ஆனால் சொல் ஒரு சொல்லால் அதற்குப் பதிலாகத் தமிழ்ச்சொல் இடவேண்டும் என்று தோன்றியதே. அதுவே சொல் ஒரு சொல்லின் வெற்றி. மிக்க மகிழ்ச்சி.
தருமம் - வாழ்க்கை நெறி, ஈகை, கடமை எனப் பல பொருள் உண்டு.
பாராட்டுகளுக்கு நன்றி. தீபாவளி நல்வாழ்த்துகள்.
நல்ல சிந்தனை.
ReplyDelete"உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் இதின்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை"
மனம்கனிந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. + வாக்களித்ததற்கும் நன்றி.
ReplyDeleteநன்றி பூங்குழலி, முத்துகுமரன் & கொத்ஸ்.
ReplyDeleteநன்றி சுல்தான். உங்கள் வீட்டைப் பார்த்தேன். கொஞ்சம் பொறாமைப் பட்டேன். :-)
ReplyDeleteநன்றி செல்வன். ஓம் நமோ நாராயணாய.
ReplyDeleteநன்றி ஜெயஸ்ரீ.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉன்னைக் கண்டு நான் ஆட
ReplyDeleteஎன்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத்
தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து
ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா
உறவாடும் நேரமடா
வாழ்த்துகள்!!
உன்னைக் கண்டு நான் ஆட
ReplyDeleteஎன்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத்
தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து
ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா
உறவாடும் நேரமடா
வாழ்த்துகள்!!
நன்றி வைசா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள் எஸ்.கே.
ReplyDeleteஎன்னங்க நா.கண்ணன் தமிழ் சிபி தீபாவளி மலர்ல பேசியிருந்ததைக் கேட்டீங்களா? :-)
அன்புக் குமரன்
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும், இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் யோகன் ஐயா. தீபாவளி கொண்டாட லண்டனில் இருந்து மீண்டும் பாரிஸ் வந்துவிட்டீர்களா?
ReplyDelete