Thursday, May 25, 2006

196: பட்டம் கொடுத்தவரின் ஆராய்ச்சிக்காக

மதுமிதா அக்கா வலைப்பூ நண்பர்கள் எல்லாம் மகிழும்படி பட்டம் எல்லாம் கொடுத்தார்கள். அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர்களே தன்னுடைய ஆராய்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பூக்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இரு ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் (அவருக்கு உதவி செய்ய நல்ல வாய்ப்புன்னு சொல்றேங்க. நம்புங்க) உடனே செயல்படுத்துகிறேன்.

வலைப்பதிவர் பெயர்: குமரன்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர் சிவபுராணம், கீதம் சங்கீதம் சிவராஜா (சிவா)

ஊர்: பிறந்தது மதுரை. வாழ்வது மினெசோட்டா மாநிலத்தில் ஓர் ஊரில்.

நாடு: அமெரிக்கா.

இது எத்தனையாவது பதிவு: 196 (என் எல்லா வலைப்பூக்களையும் சேர்த்து; சில பதிவுகளை பதிவுகளாகவே எண்ணவில்லை; அவற்றை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை)

இப்பதிவின் சுட்டி: http://koodal1.blogspot.com/2006/05/196_25.html

சந்தித்த அனுபவங்கள்: நிறைய. எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவங்கள் தான். வலை பதிக்கத் தொடங்கிய புதுதில் நிறைய எழுதினேன். தமிழ்மண வார நட்சத்திரமாக ஆக்கப்பட்ட போது அதில் கிடைத்த கவனமும் நல்ல ஊக்கம் தந்தது. ஆனால் அதில் என்னையறியாமல் 'நான்' என்னும் எண்ணம் தலைதூக்குவதை அந்த வார இறுதிக்குள் உணர முடிந்தது. அதனால் வலைப்பதிப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. பின்னர் பழைய படி வலைப்பதிப்பதில் வேகம் வந்தது; ஆனால் இந்த சுழற்சி அலையலையாக வந்து கொண்டே இருக்கிறது. மற்ற நண்பர்களிடமும் இது நடப்பதைக் கவனித்தேன். இது நான் மேலும் என்னையே கவனிக்க ஒரு வாய்ப்பும் விழிப்பும் தந்தது.

பெற்ற நண்பர்கள்: நிறைய. உலகெங்கும். குழு மனப்பான்மையுடன் இயங்கும் மனிதனின் இயற்கை குணம் இணையத்திலும் வெளிப்படுவதால் நண்பர்களுக்கு இணையான எண்ணிக்கையில் பிடிக்காதவர்களையும் ஏற்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பை இந்த வலைப்பூக்கள் நல்கும். அதனால் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.

கற்றவை: அதனை அனுபவங்களிலேயே சொல்லிவிட்டேன். ஆனால் கற்றது கைம்மண்ணளவு என்பதை தினந்தோறும் உணர்த்தும் இடம் இந்த இணையம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நேரில் முகத்திற்கு முன்னால் சொல்லத் தயங்கும் சில கருத்துகளை (முக்கியமாக நல்ல கருத்துகளை) எழுத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல முடிகிறது.

இனி செய்ய நினைப்பவை: தொடங்கிய பதிவுகளில் எல்லாம் தொடர்ந்து எழுதுவது

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. மதுமிதாவுக்குத் தெரிந்ததை ஆராய்ச்சியிலும் நூலிலும் பயன்படுத்தலாம்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இணையத்தில் வலைப்பதிக்கும் எல்லோரும் தங்கள் சுதந்திரத்தைப் பேணுவதைப் போல் மற்றவர் சுதந்திரத்தையும் பேணவேண்டிய பொறுப்பினை உணர்ந்து செயல்படவேண்டும்.

1.
வலைப்பூ பெயர் : கூடல்
சுட்டி: http://koodal1.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதுவதிலும் பேசுவதிலும் உள்ள ஆர்வம்; தற்போது வாழும் இடத்தில் தமிழில் பேசவோ எழுதவோ வாய்ப்புகள் குறைவு. அதனால் தமிழில் அறிந்ததையும் மனதில் படுபவைகளையும் எழுதுவதற்காக இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.

2.
வலைப்பூ பெயர் : அபிராமி பட்டர்
சுட்டி : http://abiramibhattar.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

3.
வலைப்பூ பெயர் : விஷ்ணு சித்தன்
சுட்டி: http://vishnuchitthan.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் பாசுரங்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

4.
வலைப்பூ பெயர் : மதுரையின் ஜோதி
சுட்டி :http://nadanagopalanayaki.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மதுரையின் ஜோதி என்று போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகளின் சௌராஷ்ட்ர, தமிழ்ப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

5.
வலைப்பூ பெயர் : பஜ கோவிந்தம்
சுட்டி :http://bgtamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 16/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான ஆதிசங்கரரின் பஜ கோவிந்தத்திற்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

6.
வலைப்பூ பெயர் : திருவாசகம் ஒரடொரியொ
சுட்டி :http://oratariothiruvasagam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 17/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருவாசகத்தில் சில பாடல்களுக்கு அண்மையில் இசைஞானி இளையராஜா ஒரடொரியொ முறையில் இசையமைத்திருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

7. வலைப்பூ பெயர் : பாட்டுக்கொரு புலவன் பாரதி
சுட்டி :http://nambharathi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 02/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

8.
வலைப்பூ பெயர் : கோதை தமிழ்
சுட்டி :http://godhaitamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 24/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கோதை நாச்சியாராகிய ஆண்டாளின் திருப்பாவை பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

9.
வலைப்பூ பெயர் : இந்தியக் கனவு 2020
சுட்டி :http://abtdreamindia2020.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 08/ஜனவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இந்தப் பெயரில் தொடங்கப் பட்டுள்ள ஒரு இயக்கத்தை அறிமுகம் செய்வதற்கும் அதன் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுதற்கும்.

10.
வலைப்பூ பெயர் : சகலகலாவல்லி மாலை
சுட்டி :http://sakalakalavalli.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 31/டிசம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலைக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

11.
வலைப்பூ பெயர்: படித்ததில் பிடித்தது
சுட்டி: http://patipiti.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 05/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இணையத்திலும் வெளியிலும் படித்தவற்றில் பிடித்தவற்றைப் பற்றி எழுத

12.
வலைப்பூ பெயர்: விவேக சிந்தாமணி
சுட்டி: http://vivegasinthamani.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 22/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விவேக சிந்தாமணி என்னும் தமிழ் இலக்கியத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

13.
வலைப்பூ பெயர்: ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
சுட்டி: http://inbame.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 24/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருக்குறளின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

14.
வலைப்பூ பெயர்: கோளறு பதிகம்
சுட்டி: http://kolarupathikam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 27/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

15.
வலைப்பூ பெயர்: கேட்டதில் பிடித்தது
சுட்டி: http://kelpidi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 09/மார்ச்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கேட்ட பாடல்களில் பிடித்தவற்றைப் பாடல் வரிகளுடன் தருவதற்காக.

16.
வலைப்பூ பெயர்: லிங்காஷ்டகம்
சுட்டி: http://lingastakam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 07/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான லிங்காஷ்டகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

17.
வலைப்பூ பெயர்: சொல் ஒரு சொல்
சுட்டி: http://solorusol.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 12/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தனித் தமிழ் சொற்களையும் பழந்தமிழ் சொற்களையும் அறிமுகம் செய்து புழக்கத்தில் கொண்டுவர ஒரு சிறு முயற்சி.

18.
வலைப்பூ பெயர்: தமிழ் அறிவியல்
சுட்டி: http://tamilariviyal.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 06/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதுதற்கும் பிறமொழி அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கும்

19.
வலைப்பூ பெயர்: சின்ன சின்ன கதைகள்
சுட்டி: http://chinnakathai.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 23/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வலைப்பூவின் தலைப்பு சொல்லுவது போல் சின்னச் சின்னக் கதைகளை எழுதுவதற்காக

20.
வலைப்பூ பெயர்: திருநீற்றுப் பதிகம்
சுட்டி:http://thiruneeru.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்: 25/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

32 comments:

  1. அப்பாடியோவ்

    பட்டிக்காட்டான் முட்டாய்கடை பார்த்த மாதிரி விழிக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் குமரன் ,

    ஆகா ஒரு பல்பொருள் அங்காடி போல இருக்கு உங்க வலைபதிவின் எண்ணிக்கை மற்றும் தலைப்புகளை பார்த்தால் :-))(இதானா இன்னும் இருக்கா ...)

    ReplyDelete
  3. பரஞ்சோதி. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. இத்தனை நாளும் உள்ள வந்து பேசாம படிச்சுட்டுப் போறீங்கன்னு நினைக்கிறேன் சரியா? :-)

    உங்க பதிவுகளும் என்னவாம்? முத்தமிழ் மன்றத்துல நீங்க போட்டிருக்கிற கட்டுரைகள் எல்லாத்தையும் தான் நான் இப்ப படிச்சிக்கிட்டு இருக்கேன். அதுக்கப்புறம் உங்க கதைகளையும் படிக்கணும். :-)

    ReplyDelete
  4. //இதானா இன்னும் இருக்கா...//

    தமிழ் வலைப்பதிவுகளை மட்டுமே இங்கு பட்டியல் இட்டிருக்கிறேன். ஆங்கில, சௌராஷ்ட்ர மொழிப் பதிவுகளை பட்டியலில் இடவில்லை.

    ஒவ்வொன்னா முடிக்க முடிக்க இன்னும் வேற தலைப்புலத் தொடங்கலாம்ன்னு இருக்கேன். எல்லாம் நீங்க தொடர்ந்து படிப்பீங்க என்ற நம்பிக்கை தான். :-)

    ReplyDelete
  5. குமரன் அண்ணா,
    ஜூன் 10க்குள்ள இன்னும் ஏதாவது புது பதிவு ஆரம்பிச்சிட்டா, அதையும் சேர்த்துடுங்கோ. ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  6. சிவமுருகன், தற்போதைக்கு இன்னொரு வலைப்பூ தொடங்குவதாக எண்ணமில்லை. 200வது பதிவிற்கு என்ன எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். :-)

    ReplyDelete
  7. சுய பரிசோதனைச் செய்ய தூண்டும் விதத்தில் ஒரு நல்ல அருமையான பதிவு. நன்றி குமரன்

    ReplyDelete
  8. குமரனைப் பற்றி...

    //A SILENT SOUND OBSERVER//

    ReplyDelete
  9. kalakiteeengha kumaran!!

    ReplyDelete
  10. இருபதா!!!! ஆஹா....

    ReplyDelete
  11. //ஒவ்வொன்னா முடிக்க முடிக்க இன்னும் வேற தலைப்புலத் தொடங்கலாம்ன்னு இருக்கேன்.//

    ப்ளீஸ் ப்ளீஸ் கலிங்கத்துபரனி பத்தி எழுதுங்க!

    ReplyDelete
  12. நன்றி தேவ். பட்டத்திற்கும் சேர்த்துத் தான். :-)

    அது சரி. அதென்ன செல்வனை இந்தப் போடு போடறீங்க. அவர் தான் என்கிட்டக் கூட கேக்காம உங்க சங்கத்தோட கூட்டணி வச்சவர். அவரைப் போயி இப்படி கலாய்க்கலாமா? :-)

    அவர் உங்கள் டேவ் டேவ்ங்கறாரே. ஒன்னும் கண்டுக்க மாட்டேங்கறீங்க? நீங்க தேவா டேவா? :-)

    ReplyDelete
  13. சமுத்ரா. ஏற்கனவே ஒரு தடவை இதைப் பத்தி நீங்க கேட்டு நான் பதில் சொன்னேன்னு நினைக்கிறேன். நான் இதுவரை கலிங்கத்துப் பரணி படிச்சதில்லை. படிச்சா அதைப் பத்தி எழுதுறேன். முதல்ல கம்பரோட இராமாவதாரம் படிக்கணும். அப்புறம் தான் மத்ததெல்லாம். மன்னிச்சுக்கோங்க. :-)

    ReplyDelete
  14. பதிவைப் படித்து அதனைச் சொல்ல சிரிப்பானைப் போட்டதற்கு நன்றி வெளிகண்ட நாதர். :-)

    ReplyDelete
  15. நானும் ஒரு சிரிப்பான் போட்டுக்கறேன்.

    :)

    ReplyDelete
  16. நன்றி குமரன்

    மகிழ்வா நிறைவா இருக்கு

    20 வலைப்பூவோட திணறாம எப்படி பதிவிடறேங்க.
    உங்களுக்கும் 24 மணி நேரம் தானே

    அதுசரி பட்டம் பதிவுக்கு காரணகர்த்தா ஸ்டேஷன்பெஞ்ச் ராம்கி காணோமே

    ReplyDelete
  17. //சௌராஷ்ட்ர மொழிப் பதிவுகளை பட்டியலில் இடவில்லை. //

    சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து வடிவம் இல்லையென கேள்விப்பட்டேன் உண்மையா?

    கருவிகளை வைத்து தேகப்பயிற்சி செய்ய முதன் முதலில் நான் சென்ற இடம் மதுரை முனிச்சாலை அருகே அமைந்துள்ள சௌராஷ்ட்ர ஜிம் தான்.

    ReplyDelete
  18. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி மதுமிதா அக்கா. எங்கே அக்கா 20 வலைப்பூவிலேயுமா ஒரே நேரத்தில் பதிவுகள் இடுகிறேன். பல வலைப்பூக்களில் அண்மையில் எந்தப் பதிவும் இடவில்லை. ஒரே நேரத்தில் அதிகம் போனால் 5 அல்லது 6 வலைப்பூக்களில் தான் கவனம் செலுத்த முடிகிறது. :-)

    ReplyDelete
  19. சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து வடிவம் உண்டு ஜெயக்குமார். ஆனால் அந்த எழுத்துகளைத் தெரிந்து கொண்டு சௌராஷ்ட்ரத்திலேயே எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே. சௌராஷ்ட்ர வலைப்பதிவர்களிலேயே சிவமுருகனுக்கு மட்டும் தான் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள் தெரியும் என்று எண்ணுகிறேன் (எனக்குத் தெரிந்த சௌராஷ்ட்ர வலைப்பதிவர்கள் நால்வரே - நான், கால்கரி சிவா அண்ணா, சிவமுருகன், வஜ்ரா சங்கர்). பள்ளிகளிலோ வேறெங்குமோ சௌராஷ்ட்ர மொழி எழுத்துகளைச் சொல்லித் தராததே நாங்கள் எல்லாம் அதனை அறியாததற்கு காரணம். இப்போது தான் அரிச்சுவடியில் இருந்து தொடங்கியிருக்கிறேன் நான். விரைவில் சௌராஷ்ட்ர மொழி எழுத்துகளைக் கொண்டு பதிவுகளை எழுத முடியும் என்று நம்புகிறேன்.

    சௌராஷ்ட்ர எழுத்துகளைக் கற்றுக் கொடுக்கவேண்டும்; கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் சில சௌராஷ்ட்ரர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அதனைக் கற்றுக் கொண்டதால் என்ன ஆதாயம்? தமிழ்நாட்டில் வாழத் தமிழ் தெரியவேண்டும்; இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வாழ இந்தி தெரியவேண்டும்; வெளிநாடுகளுக்குச் செல்ல ஆங்கிலம் தெரியவேண்டும்; இப்படி ஆதாயம் மிகுந்த மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கே நம் மாணவர்களுக்கு நேரம் இல்லை; இதில் சௌராஷ்ட்ரத்தை வேறு கற்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். என்ன சொல்லிப் புரியவைப்பது?

    இந்த நிலைமை தமிழுக்கும் வரலாம்; வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்தியும் தமிழ்ச் சொற்களை மறந்தும் வந்தால் இரண்டு, மூன்று தலைமுறைகளில் ஏன் தமிழ் எழுத்துகளைக் கற்கவேண்டும் என்ற கேள்வியும், கற்பதால் என்ன பயன் (இந்தக் கேள்வி இப்போதே சில பேரால் எழுப்பப் படுகிறது) என்ற கேள்வியும் கேட்கப்படலாம். அந்த நிலைமை வரக்கூடாது என்பதே 'சொல் ஒரு சொல்' பதிவின் நோக்கம். முடிந்த அளவு சிறு தொண்டு. தமிழ் மேல் ஆர்வம் உள்ளவர் எல்லோரும் செய்ய வேண்டியது.

    முனிச்சாலை சௌராஷ்ட்ர ஜிம்மா? நீங்களும் மதுரையா? தெரியாமல் இருந்ததே இதுவரை. :-)

    ReplyDelete
  20. வாழ்த்துகள் குமரன்.

    உங்கள் வலைப்பூக்களைத் தொடுத்துக் கொடுத்திருக்கும் விதம் மாலை போல இருக்கிறது. அத்தனை பூக்கள்.

    சௌராஷ்டிர மக்கள் அந்த மொழியைக் கற்பது சரியே. இப்படித்தான் ஒவ்வொரு மொழியும் அழிவது. ஆகையால் சௌராஷ்டிர மக்கள் மிகுந்த முயற்சி எடுத்து அதைக் கற்று உயிரூட்ட வேண்டும். தவறில்லை.

    சௌராஷ்டிரத்தைக் கற்பதால் தமிழ்ப் பற்று போய் விடும் என்று நான் கருதவில்லை. இடது கண் இருப்பதால் வலது கண்ணால் பார்க்காமல் இருப்போமா என்ன?

    ReplyDelete
  21. //சௌராஷ்ட்ரத்திலேயே எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே.//

    உண்மை தான் அண்ணா.

    //சௌராஷ்ட்ர வலைப்பதிவர்களிலேயே சிவமுருகனுக்கு மட்டும் தான் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள்//

    உங்களுக்கும் தெரியும் என்று எண்ணியிருந்தேன் :(

    //(எனக்குத் தெரிந்த சௌராஷ்ட்ர வலைப்பதிவர்கள் நால்வரே - நான், கால்கரி சிவா அண்ணா, சிவமுருகன், வஜ்ரா சங்கர்)//

    இன்னுமிருக்கிறார்கள், 'மழை' பிரதீப், 'தூறல்' கார்த்திக், பிரதீப், திரு MKS, O.S.சுப்ரமணியன்,
    KTபிரதீப், என இன்னும் தெரியாதவர்கள் எத்தனை பேரோ.

    //பள்ளிகளிலோ வேறெங்குமோ சௌராஷ்ட்ர மொழி எழுத்துகளைச் சொல்லித் தராததே நாங்கள் எல்லாம் அதனை அறியாததற்கு காரணம்.//

    தற்சமயம் விடுமுறைகளில் சொல்லி தருகின்றனர்.

    //இப்போது தான் அரிச்சுவடியில் இருந்து தொடங்கியிருக்கிறேன் நான். விரைவில் சௌராஷ்ட்ர மொழி எழுத்துகளைக் கொண்டு பதிவுகளை எழுத முடியும் என்று நம்புகிறேன்.//

    தேவையான உபகரனங்களை (software tools)தயாரித்துள்ளேன். "கலப்பை" "ப்ரஹா" போல் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், மின்னஞ்சலில் அனுப்புகிறேன். தங்களிடம் suresh font இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  22. நன்றி இராகவன். :-)

    ReplyDelete
  23. குமரன்,

    தங்களின் இந்த ஒரு சுட்டியை வைத்துக் கொண்டே முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்யலாம். பல சுட்டிகளைத் திரட்ட வேண்டாம்.

    :)

    ReplyDelete
  24. இராம்பிரசாத் அண்ணா. அப்படியென்றால் யாராவது எனக்கு முனைவர் பட்டம் கொடுப்பார்களா? சொல்லுங்கள். போய் வாங்கிக் கொண்டு வருகிறேன். :-)

    ReplyDelete