இன்னைக்கு திருமலை நாயக்கர் மகால் பத்தி பார்க்கலாம். என்னமோ மதுரையில திருமலை நாயக்கர் கட்டின அரண்மனையை மகால்ன்னு தான் சொல்றாங்க. எந்த காலத்துல இந்த வழக்கம் வந்துச்சோ தெரியல. நானும் மகால்ன்னே சொல்றேன்.
இப்ப மதுரையில இருக்கிறது திருமலை நாயக்கர் கட்டுன மகால்ல ஒரு சிறு பகுதி தான். அந்தப் பகுதிக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு அவர் பேரு வச்சிருந்திருக்கார். அந்தக் காலத்துல மகால்ல மேலேயும் கீழேயும் எல்லா இடத்தையும் பாக்க விட்டுக்கிட்டு இருந்தாங்களாம். யாரோ ரெண்டு மூனு பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு இப்ப எல்லாம் மேலே விடறதில்லை. கீழேயும் சில பகுதிகளுக்கு மட்டும் தான் விடறாங்க. நான் பார்த்ததெல்லாம் இந்தப் பகுதிகளைத் தான். படத்துல இருக்கிறது அனுமதிக்கப் படும் பகுதிகள்ல ஒன்னு. தருமி சார் மகால் முழுக்கப் பார்த்திருக்கலாம்.
இந்தப் பகுதிகள்ல தான் தினமும் இரவு ஆங்கிலத்திலயும் தமிழ்லயும் ஒளியும் ஒலியும் காட்சிகள் நடக்குது. ரொம்ப நல்லா இருக்கும். கண்ணகி மதுரையை எரிக்கிற காட்சி வர்றப்ப கொலைநடுங்கும்.
இப்ப இருக்கிறது திருமலை மன்னர் கட்டுன அரண்மனையோட ஒரு பகுதின்னு சொன்னேன்ல. பிரிட்டிஷ் காலத்துல இந்த அரண்மனையோட சிதிலமான பகுதிகள் எங்கே எங்கே இருந்தது அப்படிங்கறதை நல்லா படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்துல இருக்கிற கண்காட்சியிலும் மகாலுக்குள்ள இருக்கிற கண்காட்சியிலும் அந்த ஓவியங்களைப் பாக்கலாம்.
செவிவழியா வந்த செய்தி. திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு சொல்லுவாங்க. எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல.
மதுரை மக்கள் தொகையில மூனுல ஒரு பங்கு சௌராஷ்ட்ரா காரங்கன்னு சொன்னேன்ல. மகால் பக்கத்துல தான் நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வசிக்கிறாங்க. அந்தப் பக்கம் வேற ஆளுங்களும் இருக்காங்க. அப்படி இருக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு சௌராஷ்ட்ரா தெரிஞ்சுரும். மதுரைக் காரங்க தான் இத்தனை பேரு இருக்கீங்களே...உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா? தருமி சார் உங்களுக்கு?
சௌராஷ்ட்ரா ஆளுங்க குஜராத்துல இருந்து புலம் பெயர்ந்து மெதுவா தெற்கு பக்கம் வர்றப்ப ரொம்ப நாள் ஆந்திராவுல இருந்திருக்காங்க. சௌராஷ்ட்ரா அளுங்களுக்கு இன்னொரு பேரு பட்டுநூல்காரர். நிறைய பேரு பட்டுநூல் நெசவாளிங்க. விஜயநகர சாம்ராஜ்யம் நல்லா இருக்கிறவரைக்கும் ஆந்திராவுல இருந்திருக்காங்க. அதனால அவங்க பேசற பாஷையில தெலுங்கு வார்த்தைகள் நிறைய உண்டு. விஜயநகரம் அழிவுக்கு வர்ற நேரத்துல அவங்க நெசவு செய்ற துணிகளோட மேன்மையைப் பார்த்துட்டு திருமலை நாயக்கர் மதுரைக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாராம். அதனால தான் அவங்க மதுரையில மகால் பக்கத்துல பெரும்பான்மையா இருக்காங்க. இப்ப மக்கள் தொகை பெருக்கத்தால மதுரை நகரை விட்டு சுத்துவட்டாரத்திலயும் நிறைய பேரு இருக்காங்க.
சரி. மகாலைப் பத்தி சொல்றேன்னு ஆரம்பிச்சு சௌராஷ்ட்ரா ஆளுங்களைப் பத்தி சொல்லிக்கிட்டுப் போறேன். அதனால இதோட நிறுத்திகிறேன்.
மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.
ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.
ஏங்க ஒரே படத்தோட நிறுத்தறீங்க? கொஞ்சம் 2-3 போடறது. கொத்து பரோட்டா, மல்லிப் பூ இட்லி எல்லாம் கூட வருதா? :)
ReplyDelete//உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா?//
ReplyDeleteகுமரன் என்ன இப்படி கேட்டுடிங்க. நமக்கு 3 சௌராஷ்ட்ரா ப்ரண்ட்ஸ இருக்காங்க.
மாலை இளவெயில் நேரத்துல StMarys, மஹால்& அதை ஒட்டிய lanes la தான் நகர்வலம் இருக்கும்.
ஆனா இதுவரைக்கும் அந்த பத்துத் தூன் lane & மத்த lanes என்னால தனியா போனா எனக்கு பாதை தெரியாது :-(
இ.கொ ,
கெட்டிசட்னி, முட்டைபரோட்டா & சால்னாவ மறந்துடாப்புல்ல இருக்கு
குமரன், இன்றைக்கு இருக்கின்ற மகால், அன்றிருந்த மகாலின் ஐந்தின் ஒரு பங்குக்குக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று படித்திருக்கிறேன்.
ReplyDeleteமேலும் மகால் என்று பெயர் வந்ததிற்குக் காரணமும் உண்டு. தென்னிந்திய பாணியிலேயே கட்டாமல் முகலாய பாணியையும் கலந்து கட்டிய அரண்மனை. அதனால்தான் மகால் என்று பெயர். நீங்கள் போட்டிருக்கும் புகைப்படைத்தையே கவனியுங்கள். இரண்டு கட்டடக்கலைகளின் சங்கமம் விளங்கும்.
திருமலை மன்னர் அமர்ந்திருந்த தங்கச் சிங்காதனம் இப்பொழுது டெல்லி மியூசியத்தில் இருக்கிறதாம். மதுரையில் சும்மா ஒரு ஒப்புக்குச் சப்பாணி அரியணை வைத்திருக்கிறார்கள்.
நான் இதுவரை ஒலியும் ஒளியும் பார்த்ததில்லை.
திருமலை மன்னரின் ஆட்சியில் நடந்த புகழ்பெற்ற போர் மூக்கறு போர். மூக்கறுக்க வந்து மூக்கறுந்து போனது மைசூர் அரசு.
// மஹால் கட்டுவதற்காக மண் தோண்டிய இடம்தான் வண்டியூர் தெப்பக்குளம் என்றும்,அப்படித் தோண்டும்போது கிடைத்தவர்தான் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் அருள் பாலிக்கும் முக்குறுனி விநாயகர் என்றும் சொல்வார்கள்.இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. //
ReplyDeleteசதயம். இது உண்மைதான் எனத் தெரிகிறது.
மேலும் திருமலையின் காலத்தில் புகழ் பெற்றிருந்த புலவர் குமரகுருபரர். சிறுவயதிலேயே ஊமையாக இருந்து திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடியவர். மீனாட்சியம்மைக்கும் பாடியிருக்கிறார்.
அதே போல கிருஸ்தவ மதப்பிரச்சாரத்திற்கு முதன்முதலில் அனுமதி கொடுத்ததும் திருமலைதான்.
மதுரை பற்றிய ஆன்மீகக் கட்டுரைக்கு மிக்க நன்றி குமரன். இன்றுவரை மதுரையை தரிசித்தது இல்லை. கண்டிப்பாக ஒருமுறை சென்று தரிசிக்க ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள் குமரன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
//மதுரைக் காரங்க தான் இத்தனை பேரு இருக்கீங்களே...உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா? தருமி சார் உங்களுக்கு?//
ReplyDeleteஎங்கூட ஒரு மதுரை செளராஷ்ட்ராகார பையன், நான் வடக்கே அட்டாமிக் பவர் ஸ்டேஷன்ல வேல செஞ்சப்பக் கூட வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். அவங்க வீட்ல நெஞ்ச புடவையெல்லாம் என் மனைவி வாங்கி கட்டி இருக்காங்க. அதே மாதிரி, மதுரைன்னு இல்ல, பட்நூல்காரத்தெருன்னு, திருச்சியில கம்மாளத்தெரு பக்கத்தில இருக்கு. அங்க நிறைய செளராஷ்ட்ர ஜனங்க இருக்காங்க. சின்ன வயிசில அவங்க கிட்ட போய் தான் கலர் நூலு வாங்கிட்டு வந்து எங்க பூக்கடையில கொடுப்பேன்.
அதே மாதிரி, பெரும்பாலான தெலுங்கு ஜனங்க தமிழ்நாட்டுக்கு வந்ததும், விஜய நகர பேரரசு ஆண்டப்பத்தான்!
நல்ல பதிவு குமரன். நானும் ஒலி ஒளி காட்சி பார்த்திருக்கிறேன். ஆனால் கண்ணகி மதுரை எரிக்கும் காட்சி ஞாபகதில் இல்லை. ஒரு வேளை நான் பார்க்கு சமயத்தில் இருந்திருக்காது என நினைக்கிறேன்.
ReplyDeleteபலரும் நினைக்கும் யானை கட்டி போரடித்த இடம் பத்து தூண் சந்து, ஆனால் அது திருமலை மன்னனின் தம்பியின் அரண்மனையின் மீதமான பகுதி என்றுகுறிப்புகளை படித்துள்ளேன்.
மேலும் சில படங்களை போடவும்.
வெளியில சொன்னா வெக்கக் கேடு...என் இளமை வாழ்க்கை, பள்ளி கல்லூரிப் படிப்போடு இணைஞ்ச அந்த மஹாலில் (எப்படிப்பட்ட காலம் அது?) நடக்கும் ஒலி ஒளி நிகழ்ச்சிய இது வரை பார்த்ததில்லை :-(
ReplyDeleteகுமரன், இந்தப் பத்துத் தூண் புகைப்படங்களை எடுத்து அனுப்ப முயல்கிறேன். இந்தப் பதிவிலாவது, தனிப் பதிவிலாவது அதை போட்டு விடுவோம் - மக்கள் கட்டாயம் பார்க்கணும் அவைகளை. எனக்கு ஒரு சந்தேகம்: யானை கட்டுவதற்காகவா இவ்வளவு பெரிய தூண்கள் கட்டியிருப்பார்கள்?
இதென்னடா தருமிக்கு இப்படி ஒரு வாழ்வு...blogger.com-ல் ஃபோட்டோ போட்டேன்..இங்க எப்படி வந்திச்சு?
குமரன்,
ReplyDeleteமதுரையை பற்றிய உங்களோட இரண்டு பதிவையும் படித்தேன்.அருமை. திருமலை மகாலை பற்றி விளக்கமாக எழுதி உள்ளீர்கள்.
நான் மதுரை மாப்பிள்ளைதான்.மகாலை பார்த்ததில்லை.வீட்ல சொன்னா அதா இதான்றா...கூட்டிட்டு போக மாட்றா..பார்ப்போம்.....
ஆனால் மகாலை சுத்தி செள ஆட்கள் தான் உண்டு என்று சொல்லி இருக்கிறாள்.
மீனாட்சி கோவிலை பற்றி விளக்கமாக எழுதவும்..
St.Marys highschoolல் தான் படித்தீர்களா சதயம்? நான் சௌராஷ்ட்ரா ஹைஸ்கூலில் படித்தேன். அதனால் உங்கள் அளவுக்கு மகாலுக்குச் செல்ல இயலவில்லை. ஆனால் அடிக்கடி மகாலுக்கு முன்னால் இருந்த (ஆமாம் இருந்த தானே; இப்போது இல்லையே?) பார்க்குக்குப் போவது உண்டு.
ReplyDeleteமகாலுக்குள்ள இருக்குற நாட்டிய மண்டபத்தைப் பாக்குறதுக்காகத் தான் நான் மகாலுக்கு அடிக்கடி போவது. ரொம்ப நல்ல சிற்ப வேலைகளோட இருக்கும். மேடை மாதிரி சுத்தியும் முற்றம் மாதிரி நடுவிலும் இருக்கும். மன்னர் நாட்டியம் பார்க்குறப்ப மேடை மேலே உட்கார்த்து பார்த்திருப்பாரா இல்லை நடுவுல இருக்கிற பள்ளத்துல உக்காந்து பார்த்திருப்பாரான்னு ஒவ்வொரு தடவையும் யோசிப்பதுண்டு. :-)
நாட்டிய மண்டபத்துல (நாடக சாலைன்னு படிச்சதா நினைவு) வச்சிருக்கும் அருங்காட்சியகத்துல தான் மதுரையோட பழைய படங்களை வச்சிருப்பாங்க. பாத்திருக்கீங்களா சதயம்?
ReplyDeleteஅது ஒலி ஒளிக் காட்சி தான் இல்லை?! நான் அந்தக் காலத்துல தொலைக்காட்சியில வெள்ளி வெள்ளி தவறாம பார்த்த ஒலியும் ஒளியும் நினைவுல இந்த ஒலி ஒளிக் காட்சியையும் ஒலியும் ஒளியும்ன்னு சொல்லிட்டேன். :-)
பத்துத் தூண் சந்துக்கு நானே பத்துத் தடவைக்கு மேலே போயிருப்பேனான்னு தெரியாது. :-) எங்க மாமனார் வீட்டு மாடியில இருந்து பார்த்தா மகாலும் பத்து தூண்களில் ஓரிரண்டும் நன்றாய்த் தெரியும். அப்படிப் பார்த்தது தான்.
முக்குறுணி விநாயகர் கிடைத்த வரலாறு உண்மை தான் என்று நினைக்கிறேன் சதயம். கல்வெட்டுகளும் அதனைப் பற்றிக் கிடைத்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாரியம்மன் தெப்பக் குளத்தைப் பற்றி எழுதும் போது முக்குறுணி விநாயகர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.
ReplyDeleteநண்பர் கார்த்திக் ஜெயந்த் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவைப் பற்றி எழுதச் சொல்லியிருக்கிறார். அப்போது நீங்கள் சொல்லும் வரலாற்று விஷயத்தைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
ReplyDeleteமகாலைப் பற்றிய சுட்டிக்கு நன்றி. தவறாமல் வந்து இந்தத் தொடரின் மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் சதயம். என் நட்சத்திர வாரத்தில் நம்ம ஊரைப் பற்றி அவ்வளவாய் நான் பேசவில்லை என்று கோபித்துக் கொண்டீர்களே. அதற்காகத் தான் இந்தத் தொடரையே தொடங்கினேன்.
இலவசக் கொத்தனார். காரணமாத் தான் ஒரு படத்தோட நிறுத்திக்கிறேன். 1) ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதனை கொஞ்சம் ஆழமாக எழுதலாம் 2) பதிவின் நீளம் ரொம்ப அதிகமாய் இருந்தால் படிப்பவர்களுக்கு போரடிக்குமே. 3) மின்னஞ்சலில் வந்த படங்கள் பத்தோ பதினொன்னோ தானே?
ReplyDeleteகொத்துப் புரோட்டா, மல்லிப்பூ இட்லி படங்கள் மின்னஞ்சலில் வரலை. வந்தா அதைப் பத்தியும் எழுதலாம். தூங்கா நகரமாச்சே மதுரை. சாப்பாடுக்கு கோவையை அடுத்து மதுரையை மிஞ்ச ஊரே இல்லை என்பது என் எண்ணம். ஆனால் எந்த நேரத்திலும் அருமையான உணவு வேணும்ன்னா மதுரைக்குத் தான் வரணும். :-)
மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க?
ReplyDeleteமதுரைக்கு பல தடவை போயிருந்தாலும் இரண்டு தடவைதான் மஹாலை பார்திருக்கிறேன்.பிரமிப்பூட்டும் தோற்றம்.எப்பொழுது மதுரை போனாலும் ஆங்கில மாதம் முதல் தேதி தான் செல்வேன். ஏன் தெரியுமா? அன்றுதான் எங்கள் தாயாருக்கு தங்கப்பாவாடை அணிந்து ஜகஜ்ஜோதியாக திகழ்வாள். பத்து தூணை பார்த்ததில்லை. ராஜமாதங்கியைப்பற்றி சீக்கிரம் எழுதுங்கள் படிக்க ஆவலாய் இருக்கிறேன். தி.ரா.ச
அன்புள்ள குமரன்,
ReplyDelete1983ஆம் ஆண்டு செட்டி நாடு பிளாஸ்டர் பூசினார்கள்
என்று நினைக்கிறேன். பளிங்கை தொடுவதைப் போல்
இருக்கும். கருப்பட்டி, முட்டை எல்லாம் இந்தக் கலவையில்
இருக்கும்.
திருமலை மன்னர் இங்குள்ள சுரங்கம் வழியே கோவிலுக்குச்
செல்லும் போது சுரங்க வாசலை இரண்டு பக்கமும் அடைத்துக்
கொன்று விட்டார்கள் என்பது உண்மையா?
சாம்
உங்களுக்கு சௌராஷ்ட்ரா நண்பர்கள் உண்டா கார்த்திக்? அப்ப ரொம்ப நாளா மகால் பக்கம் அலைஞ்சிருப்பீங்க போல இருக்கு. அந்த சந்து பொந்துகள்ல எல்லாம் ஜாக்கிரதையா இருங்க. சீக்கிரம் தொலைஞ்சு போயிடுவிங்க. அவ்வளவு குழப்பங்கள் உண்டு.
ReplyDeleteஇ.கொ. முட்டைப் புரோட்டாவைத் தானே கொத்துப் புரோட்டான்னு சொன்னார். எப்படி நம்ம ஊரு சங்கீதத்தின் பிறப்பிடமான முட்டை/கொத்துப் புரோட்டாவை மறக்க முடியும்? :-)
ஆமாம் இராகவன். முழுக்க முழுக்க தென்னிந்திய பாணி இல்லை. ஆனால் திருமலை மன்னர் தன் அரண்மனையை மகால்ன்னு பெயர் வச்சாரான்னு தெரியலை. இப்ப இருக்கிற பகுதிகளுக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு பெயர் வச்சிருந்தார்ன்னு தான் தகவல் பலகைகள் சொல்லுது. பின்னால தான் மகால்ன்னு சொல்ற பழக்கம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி இப்ப நட்ட நடுவா வச்சிருக்கிற சிம்மாசனத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கும். சும்மா ஒப்புக்குச் சப்பாணியா ஒரு அரியணையைப் போட்டு வச்சிருக்காங்க. அதுவும் ஒலி ஒளிக்காட்சிக்காக. ஒலி ஒளிக்காட்சியில் நீங்க சொல்ற மூக்கறுப் போர் பற்றியும் சொல்லுவாங்க.
இராகவன்,
ReplyDeleteநீங்க சொல்ற குமரகுருபரர் தான் 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடியவர். அவரோட பாடல்களைத் தான் என்னோட 'சகலகலாவல்லி மாலை' வலைப்பூவுல சொல்லிக்கிட்டு வர்றேன்.
நீங்க சொன்ன மாதிரி செந்திலாண்டவன் அருளால் ஊமைக் குழந்தை பேசத்தொடங்கியபின் மதுரைக்கு வந்த போது திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் அன்னை அங்கயற்கண்ணியின் மேலே மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடி அன்னையின் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். அப்போது அன்னை ஒரு சிறு பெண் குழந்தையாய் வந்து மன்னரின் மடியில் அமர்ந்து பாடல்கள் எல்லாவற்றையும் கேட்டு பின் குமரகுருபரருக்கு ஒரு ரத்தின மாலையும் பரிசாகக் கொடுத்து மறைந்தாள் என்று படித்துள்ளேன்.
அந்த நிகழ்ச்சி அம்மன் சந்நிதியில் வண்ண ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர். குமரகுருபரரின் பிள்ளைத்தமிழில் இருந்து பாடல்கள் சிற்பமாக அமைத்து அன்னையின் திருச்சுற்றில் (உள்சுற்றில்) வைத்திருக்கின்றனர்.
நீங்கள் சொன்னது மாதிரி கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கொடுத்தவர் திருமலை மன்னர் என்றும் அவருக்கு நெருங்கிய நண்பராக ஒரு பாதிரியார் இருந்தார் என்றும் இருவர் நடுவிலும் கடிதப் போக்குவரத்து இருந்ததென்றும் படித்திருக்கின்றேன்.
மூர்த்தி. வாய்ப்பு கிடைக்கும் போது மதுரைக்குத் தவறாமல் வந்து அன்னையையும் அப்பனையும் தரிசித்து அருள் பெறுங்கள். அப்படியே திருப்பரங்குன்றத்திற்கும், திருமாலிருஞ்சோலையாம் அழகர் கோவிலுக்கும், பழமுதிர்சோலைக்கும், நாயக்கர் மகாலுக்கும் மறக்காமல் செல்லுங்கள்.
ReplyDeleteஆமாம் வெளிகண்ட நாதர். திருச்சியிலயும் நிறைய சௌராஷ்ட்ரர்கள் இருக்காங்க. இராணி மங்கம்மாளின் ஆதரவு சௌராஷ்ட்ரர்களுக்கு நிறைய இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் இராணி மங்கம்மாளின் ஆட்சி இருந்த இடத்தில் எல்லாம் இவர்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டனர்.
ReplyDeleteதமிழ்நாட்டில் ஏறக்குறைய 40% மக்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான். விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாய் நாயக்க மன்னர்கள் செஞ்சியிலும் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்த போது நிறைய தெலுங்கு மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள் என்றும் படித்திருக்கிறேன்.
சிவமுருகன். நான் ஒலி ஒளிக் காட்சி பார்த்து ஒரு 15 வருடங்களுக்கு மேலே இருக்கும். இப்போதும் அதையே காட்டுகிறார்கள் என்று எண்ணிச் சொல்லிவிட்டேன். அடுத்த முறை மதுரை வரும் போது போய்ப் பார்க்க வேண்டும் மாற்றிவிட்டார்களா என்று.
ReplyDeleteபத்துத் தூண் திருமலை மன்னனின் தம்பி அரண்மனையின் பகுதிகளாய் இருக்கலாம்.
மேலும் படங்கள் வரும்.
தருமி ஐயா. நீங்க சுட்டியில கொடுத்திருக்கிற உங்கப் பதிவைப் பார்த்தேன். கண்ணுல படற உங்க எல்லாப் பதிவுகளையும் ஒரு பார்வை பாத்துடுவேன். ஆனா தொடர்ந்து படித்ததில்லை. மெதுவா உங்க பழையப் பதிவுகளை எல்லாமும் படிக்கணும் போல இருக்கு. நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க. :-)
ReplyDeleteசீக்கிரம் மகால் ஒலி ஒளிக்காட்சியைப் போய் பாருங்க. இன்னும் நடக்குதான்னே தெரியலை.
பத்துத் தூண் புகைப்படங்களை எடுத்து மின்னஞ்சலில் அனுப்புங்க சார். நிச்சயமா இந்தப் பதிவுலயோ இல்லாட்டி தனிப் பதிவாவோ இல்லாட்டி உங்க பதிவுலயோ போட்டுடலாம். யானைகளை கட்டுவதற்கா அவ்வளவு பெரிய தூண்களைக் கட்டியிருப்பார்கள்? எனக்குத் தெரியலை சார். படிச்சதை எழுதுனேன்.
நீங்க ப்ளாக்கர் அக்கவுண்ட்ல தான பின்னூட்டம் எல்லாம் போடறீங்க. அதனால தான் நீங்க ப்ளாக்கர்.காம்ல போட்ட புகைப்படம் இங்கயும் தெரியுது. நல்லா இருக்கு சார் படம்.
உங்க கல்லூரியில உங்களை எப்படி கூப்புடுவாங்க? எனக்கு ஒரு அமெரிக்கன் கல்லூரியில படிச்ச நண்பன் இருக்கான். அவன்கிட்ட உங்களைப் பத்திக் கேட்டுப் பார்க்கலாம்ன்னு.
மதுரை மாப்பிள்ள முத்து. சீக்கிரம் மகாலைப் போய் பாருங்க. அவங்களையும் அனத்திக் கூட்டிக்கிட்டுப் போங்க. மீனாட்சிக் கோவிலைப் பற்றி விளக்கமா எழுதணும்ன்னா நிறைய பதிவுகள் போட வேண்டியிருக்கும். அதுவும் இல்லாம தொடரா எப்படிப் போடறதுன்னு இப்போதைக்கு ஒரு திட்டம் எதுவும் போட்டுவைக்கலை. அதனால மின்னஞ்சல்ல எனக்கு வந்தப் படங்களை மட்டும் போட்டு அதுக்குச் சம்பந்தமா எழுதிக்கிட்டுப் போறேன். அதிலேயே கோவிலைப் பற்றி நிறைய வரும். அதுக்கப்பறம் பின்னூட்டம் போடற நம்ம மக்கள் எல்லாம் இன்னும் நிறைய விஷயங்களை அள்ளி விடுவாங்கள்ல. அதுலயே நிறைய வந்துரும்.
ReplyDeleteதி.ரா.ச. வருஷப் பிறப்பன்னைக்கு நிறைய தடவை கோவிலுக்குப் போயிருக்கேன். ஆனால் அம்மா தங்கப் பாவாடை தரிசனம் தருவதை கவனித்ததில்லை. மரகத மேனியாளின் தரிசனம் எங்கே அதனை எல்லாம் கவனிக்க விடுகிறது. இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகும் போது குறைந்தது ஒரு வருடத்திற்கு தேவையான அளவு அவளின் தரிசனத்தைப் பெற்று மனத்தில் தேக்கிவைத்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அப்போது தானே அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு மனத்தில் அவளை நினைத்து வணங்கலாம்.
ReplyDeleteதருமி சார் பத்து தூண்களைப் புகைப்படம் பிடித்து அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனை பதித்தப் பின் உங்களுக்கு வழக்கம் போல தனிமடல் அனுப்புகிறேன். தவறாமல் வந்து பார்த்துவிடுங்கள். அது பிடித்திருந்தால் அடுத்த முறை மதுரை போகும் போது உங்கள் சௌராஷ்ட்ரா நண்பர்களுடன் பத்துத் தூண் சந்திற்கும் போய் வாருங்கள். :-)
ராஜமாதங்கியைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனி வலைப்பூவைத் தான் தொடங்கவேண்டும். ஏற்கனவே தொடங்கிய வலைப்பூக்களை எல்லாம் நிறைவு செய்துவிட்டு பின்னர் திருவிளையாடல் புராணத்திற்காக ஒரு வலைப்பூவைத் தொடங்கி அன்னை மீனாட்சியின் புகழை வாயாரப் பாடலாம்.
ReplyDeleteஇந்தத் தொடரில் அங்கங்கே அன்னையின் புகழையும் ஆலவாய் அப்பனின் புகழையும் தொட்டுச் செல்வேன் என்று எண்ணுகிறேன்.
ஆமாம் சாம். அண்மையில் மகாலுக்கு புது வண்ணமும் பூசியிருக்கிறார்கள். தூண்கள் ஒவ்வொன்றும் நீங்கள் சொல்வதைப் போல் பளிங்கைத் தொடுவதைப் போல் இருக்கும். இந்த மகாலுக்கும் அன்னை மீனாட்சி கோவிலுக்கும் சுரங்கப் பாதை இருந்தது என்று நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அது கட்டுக் கதையாய் இருக்கலாம். ஏனெனில் அந்தக் கதையோடு திருமலை நாயக்கரின் ஒழுக்கத்தைப் பற்றிய அவதூறான கதையும் சொல்லப் படுகிறது.
ReplyDeleteசுரங்கப் பாதையில் வைத்து அவரை கொன்று விட்டார்கள் என்று கட்டுக் கதையாகக் கூட நான் இதுவரைப் படித்ததில்லை. மதுரை மக்களே! வேறு யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சாம். நீங்க மகாலுக்கும் அம்மன் கோவிலுக்கும் உள்ள சுரங்கப் பாதையைப் பத்திக் கேட்டிருக்கீங்க. தருமி சார் தன்னோட பதிவுல மகாலுக்கும் மகால் பக்கத்துல இருக்கிற தேவாலயத்திற்கும் இருந்ததா சொல்லப்படற சுரங்கப் பாதையைப் பத்தி எழுதியிருக்கார். படிச்சுப் பாருங்க.
ReplyDeleteகுமரன் சார்,
ReplyDeleteஅழகர் கோவில் பத்தி சொல்லுபோது, மறகாம, 18-ம் படி கருபண்ணசாமி பத்தி சொல்லுங்க.[வருசத்துல ஒரு நாள் தான் சாமிய பாக்க முடியும். அந்த விழாவுக்கு எம்புட்டு கூட்டம்.].
மூலவர் : கள்ளழகர் தாயார்: சுந்தரவல்லி,ஸ்ரிதேவி
திருமோகூர் பத்தியும் சொல்லுங்க.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் முன்னால் இருந்து பார்க்கும் போது சக்கரத்தாழ்வார் பின்னால் இருந்து நரசிம்மர், 16 கைகள் அதில் 16 விதமான ஆயுதகள் ..
மூலவர் :காளமேக பெருமாள் தாயார்: மோகனவல்லி
ரெண்டும் 108 திவ்ய தேசஸ்தலத்தில் உள்ளது.
ஆகா எல்லாம் கண்ணுலயே இருக்கே...அடடா...எம்புட்டு நாளாச்சு ஊரப்பக்கம் போயி... சீக்கிரம் போயிப் பாக்கணும்...
ஆமாம் குமரன்
எனக்கு சௌராஷ்ட்ரா நண்பர்கள் உண்டு. போனதடவை ஒருத்தன பாக்குறதுக்கு StMarys la வண்டிய வச்சிட்டு உள்ள போனவந்தான். சுத்துறேன், சுத்துறேன் தெருவுல எல்லாரும் ஒருமாதிரியா பாக்குற மாதிரி ஆகிப்போச்சு.இதுல ஒருவீட்டில் மட்டும் 3 தடவை வழி வேற கேட்டேன்
//சங்கீதத்தின் பிறப்பிடமான முட்டை/கொத்துப் புரோட்டாவை மறக்க
அதே அதே ...
மதுரைக்கு போகிறபோதெல்லாம் போகனும்னு நினைக்கிறது. வாய்ப்பு அமையல நிச்சயம் பார்க்கவேண்டிய லிஸ்ட்ல சேத்து இருக்கேன் .வருகின்ற பதிவ படிச்சா இன்னும் சேறும்னு நெனக்கிறேன்.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteமதுரை தொடர் நன்றாக வந்து கொண்டு இருக்கிறது. நானும் திருமலை நாயக்கர் மஹால் சென்றிருக்கிறேன். சமீபத்தில் அல்ல. 1984-85 என்று நினைக்கிறேன். பள்ளிச் சுற்றுலாவில்.
இப்போது அந்த தூண்களை நினைக்கும்போது பம்பாய் திரைப்படத்தின் பாடல் "கண்ணாளனே..எனது கண்ணை" நினைவுக்கு வருகிறது.
அங்குதான் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதா?
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
குமரன்,
ReplyDeleteகூடல் அழகர் கோவில் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள்?
(நினைவூட்டல்)
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
கார்த்திக் ஜெயந்த், அழகர் வைகை ஆத்துல இறங்குற திருவிழாப் பத்திச் சொல்லச் சொன்னீங்க. இப்ப அழகர் கோவிலைப் பத்தியும் பதினெட்டாம்படியானைப் பத்தியும் எழுதச் சொல்றீங்க. பாக்கலாம். படம் போட்டு பதிவு போடறதால அழகர் கோவில் பத்தி படம் வேணும். இணையத்துல தேடிப் பார்க்கிறேன்.
ReplyDeleteவருசத்துல ஒரு நாள் மட்டும் சாமியப் பாக்க முடியும்ன்னு சொல்றீங்க. எனக்குத் தெரிஞ்ச வரை எந்த சிலையும் கருப்பண்ண சாமிக்கு இல்லையே. கருப்பண்ண சாமியென்று வணங்கப்படும் கோபுர வாசற்கதவைத் திறக்கும் நாளைப் பற்றிச் சொல்றீங்களா? அப்படி என்றால் அந்த நாளுக்கு நான் இதுவரை சென்றதில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் உங்களுக்கு என்னை விட அதிகமாய் அந்த நாளைப் பற்றியும் அன்று வரும் கூட்டத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும். நீங்களே படத்தோட ஒரு பதிவு போட்டுடுங்களேன்.
திருமோகூர் பற்றியும் நீங்களே எழுதுங்கள் கார்த்திக். நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுத முயல்கிறேன். 108 திவ்ய தேசங்களைப் பற்றி தனியாய் வலைப்பூ தொடங்கி எழுதினால்.
ReplyDeleteஆமாம் சிங்.செயகுமார். மதுரைக்குப் போனாப் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியல்ல நிச்சயமா மகால் இருக்கணும். சீக்கிரம் போய் பாருங்க.
ReplyDeleteஆமாம் சிபி. பம்பாய் திரைப்படத்தில் வரும் 'கண்ணாளனே' பாடல் எடுத்தது திருமலை நாயக்கர் மகாலில் தான்.
ReplyDeleteஅதென்ன நீங்களும் டோண்டு சார் மாதிரி உங்க பின்னூட்ட நகலை எல்லாம் தனிப் பதிவில் போடத் தொடங்கிவிட்டீர்கள்? அவருக்கு வந்த மாதிரி தொல்லைகள் உங்களுக்கும் வந்ததா என்ன?
சிபி, கூடல் அழகர் கோவிலைப் பற்றி ஏற்கனவே தேசிகன் எழுதிவிட்டார் என்று சுட்டியும் கொடுத்திருந்தேனே. பார்க்கவில்லையா? நானும் இந்த தொடரில் முடிந்தால் அந்தக் கோவிலைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் அது கடைசியில் மீனாட்சி அம்மன் கோவில் படங்களைப் பற்றி எல்லாம் எழுதி முடித்தப் பிறகு வரும்.
ReplyDeleteதேசிகனின் பதிவு: http://www.desikan.com/blogcms/?item=106&category=Desikan
//எந்த சிலையும் கருப்பண்ண சாமிக்கு இல்லையே//
ReplyDeleteதாங்கள் சொல்லுவது சரிதான்.கோபுர வாசற்கதவைத் திறக்கும் நாளைதான் சொன்னேன்.பதினெட்டாம்படியான் படம் கைவசம் இல்லை.
எனக்கு கோர்வையா எழுத வராது.அதனால்தான் உங்களிடம் சொன்னேன். :-)
இன்னும் 2 மாததில் சித்திரை திருவிழா வரவிருக்கிறது. அதை பற்றியும் எழுதவும். சில படங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
ReplyDeleteசிவமுருகன்
// ஆமாம் இராகவன். முழுக்க முழுக்க தென்னிந்திய பாணி இல்லை. ஆனால் திருமலை மன்னர் தன் அரண்மனையை மகால்ன்னு பெயர் வச்சாரான்னு தெரியலை. இப்ப இருக்கிற பகுதிகளுக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு பெயர் வச்சிருந்தார்ன்னு தான் தகவல் பலகைகள் சொல்லுது. பின்னால தான் மகால்ன்னு சொல்ற பழக்கம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். //
ReplyDeleteமகால் என்ற பெயர் பின்னல் வைக்கப்பட்டது என்றுதான் நான் நினைகிறேன். சொர்க்க விலாசம் என்பது அத்தானி மண்டபத்திற்குப் பெயர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் என்று படித்த நினைவு.
// நீங்க சொன்ன மாதிரி இப்ப நட்ட நடுவா வச்சிருக்கிற சிம்மாசனத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கும். சும்மா ஒப்புக்குச் சப்பாணியா ஒரு அரியணையைப் போட்டு வச்சிருக்காங்க. அதுவும் ஒலி ஒளிக்காட்சிக்காக. ஒலி ஒளிக்காட்சியில் நீங்க சொல்ற மூக்கறுப் போர் பற்றியும் சொல்லுவாங்க. //
சொல்றாங்களா? நான் இது வரைக்கும் பாத்தது இல்லை. அடுத்து மதுரைக்குப் போனா கண்டிப்பா பாக்கனும்.
மூக்கறு போர் முடிவு தெரியுமா? மதுரைப் படை மைசூருக்குள்ள நுழைஞ்சது. ம்ய்சொரெ மன்னன் குளிச்சிக்கிட்டு இருந்தவன்...அப்படியே துணியில்லாம தப்பிச்சு ஓடீட்டான். அவன தோன்டி விட்ட அவனொட சித்தியப் பிடிச்சி மோல அறுத்துட்டாங்களாம்.
// திருமலை மன்னர் இங்குள்ள சுரங்கம் வழியே கோவிலுக்குச்
ReplyDeleteசெல்லும் போது சுரங்க வாசலை இரண்டு பக்கமும் அடைத்துக்
கொன்று விட்டார்கள் என்பது உண்மையா? //
இந்தச் செஇதி உண்மை இல்லை. திருமலை மன்னர் உடல் நலக் குறைவினால் இறந்தார் என்றுதான் நான் படித்திருக்கிறேன்.
கார்த்திக், அப்ப எனக்குக் கோர்வையா எழுத வருதுன்னு சொல்றீங்களா? கிண்டல் தானே. :-) பொய்யா இருந்தாலும் அப்படி சொன்னதற்கு நன்றி. :-)
ReplyDeleteசெந்தமிழும் நாப்பழக்கம் அப்படிங்கறது போயி இப்ப செந்தமிழும் ப்ளாக் பழக்கம்ன்னு ஆயாச்சு. எழுத எழுதத் தானே கோர்வையா வரும். தயங்காம எழுதுங்க.
சிவமுருகன், நீங்கள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தேன். மிக்க நன்றி. சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்னர் அப்புகைப்படங்களை வைத்து திருவிழாவைப் பற்றி எழுதுகிறேன்.
ReplyDeleteஇராகவன், மூக்கறுப்பு போரைப் பற்றி இன்னும் நான் நிறையப் படிக்க வேண்டும். நீங்க என்னென்னமோ சொல்றீங்க...
ReplyDeleteகுமரன் நிஜமா என்னவிட நீங்க நல்லாதான் எழுதுறிங்க. மண்டபத்தின் "ஆன்மிக சூடர்" நீங்க, உங்கள கிண்டல் பண்ணமுடியுமா :-)
ReplyDeleteநானே எழுத பாக்குறேன்.
கார்த்திக், ஆன்மிக சூடரா? :-) சூடம் கொளுத்துறவன்னு சொல்றீங்களா? இல்லை வேற ஏதாவது சொல்றீங்களா? :-)
ReplyDeleteநிச்சயமா எழுதுங்க. சிவமுருகன் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பத்தி எழுதத் தொடங்கிட்டார்.
சிவமுருகன் பதிவு: http://sivamurugan.blogspot.com/
//அதென்ன நீங்களும் டோண்டு சார் மாதிரி உங்க பின்னூட்ட நகலை எல்லாம் தனிப் பதிவில் போடத் தொடங்கிவிட்டீர்கள்? அவருக்கு வந்த மாதிரி தொல்லைகள் உங்களுக்கும் வந்ததா என்ன?
ReplyDelete//
டோண்டு அவர்களின் பதிவொன்றில் நான் பின்னூட்டமிட்டபிறகு
எச்சரிக்கைப் பின்னூட்டங்கள் வந்துள்ளன!
அனானிமஸ் பெயரிலும், காசி அவர்கள் பெயரிலும். அதனால்தான்!
வருமுன் காப்பது சாலச் சிறந்ததல்லவா?
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
)
sorry kumran,
ReplyDeletea small spelling mistake.
முன்னெச்சரிக்கையா இருக்க வேண்டியது தான் சிபி.
ReplyDeleteNo Problem Karthik. I know it was a typo error. Do not worry. I was just kidding. :-)
ReplyDelete//**மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க **// குறித்துக் கொண்டேன் குமரன் :-))
ReplyDeleteஒளியும் ஒலியும் என்றால் திரைப்படமா..மேடையில் செய்து காட்டுவார்களா?.
சிவா. ஒளி ஒலிக்காட்சி என்றால் திரைப்படமும் இல்லை; மேடையில் நடிக்கப் படுவதும் இல்லை. மதுரையின் வரலாற்றை சுருக்கமாக ஒரு மணி நேர அளவில் வண்ண வண்ண விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் சத்தங்களை நம்மை சுற்றி ஏற்படுத்தியும் தரும் நிகழ்ச்சி. மகாலின் உள்ளே இருக்கும் வெட்டவெளியில் நாற்காலிகளைப் போட்டு நம்மை உட்கார வைத்துவிடுவார்கள். நம்மை சுற்றி எல்லாவிதமான சத்தங்களும் விளக்குகளும் அணைந்தும் ஏற்றியும் நன்றாய் இருக்கும். மகாலின் வாசலில் இருந்து குதிரை வருவது போல் சத்தம் ஏற்படுத்தி அது மெது மெதுவாக நம்மைக் கடந்து அரசர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று குதிரையில் வந்த வீரன் செய்தி சொல்வது போல சத்தததாலேயே நன்றாய் செய்திருப்பார்கள். அது போலவே அந்தப்புரத்தில் அரசரும் அரசிகளும் பேசுவதும், கண்ணகி வழக்கிட்டு மதுரையை எரிப்பதும், போர்கள் நடப்பதும் என்று நன்றாக இருக்கும்.
ReplyDeleteஆமாம் சதயம். இருவர் படத்திலும் பல காட்சிகள் மகாலில் எடுக்கப் பட்டிருக்கிறது.
ReplyDeleteNanum St. Mary's il padichen, ana Mahalukku ponathennamo 2 thadavai than. Oli OLi ore oru thadavai parthen, athuvum chinna vayasula. Next time vacation porappa nichayama pakkanum.
ReplyDeleteKumaresh
ஆமாம் குமரேஷ். நானும் அடுத்த முறை மதுரை போகும்போது ஒலி ஒளிக் காட்சி பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete