Thursday, November 10, 2005

தமிழ்மணக்கும் 50!!!

திக்கெட்டும் பரவி செந்தமிழ் முழங்கும் நம் தமிழ்மண அன்பர்களின் ஆதரவால் இதோ எனது ஐம்பதாவது வலைப்பூ தமிழ் மணத்துடன் தமிழ்மணத்தில் மலர்கிறது. நண்பர் சிவா (சிவபுராணம்) இந்த வருடம் காந்தி ஜெயந்தி அன்று 'ஏன் குமரன்...நீங்களும் ஏன் வலைப்பதிக்கக் கூடாது' என்று கேட்ட அந்த நேரம் நல்ல நேரம் போலிருக்கிறது. மறுநாள் (Oct 3, 2005) ஆரம்பித்தப் பயணம் இதோ இந்த ஆறாவது வாரத்தில் ஐம்பதாவது வலைப்பூவில் வந்து நிற்கிறது.

தமிழ்மணத்தில் எனக்கு எந்த எந்த வலைப்பதிஞர்களின் பதிவுகள் பிடிக்கும் என்று பட்டியலிட ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் அது இந்தப் பதிவை எல்லையில்லாமல் நீட்டிவிடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன். நான் எந்த வலைப்பூக்களை விரும்பிப் படிக்கிறேன் என்பதை என்னிடம் பின்னூட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி ஒரு திரட்டியை உருவாக்கி தமிழன்பர்கள் எங்கிருந்தாலும் தமிழை ஆசை தீரப் பருக வழிவகை செய்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் அன்பான நன்றிகலந்த வணக்கங்கள். எல்லோரும் சொல்வது தான் என்றாலும் 'நன்றி மறப்பது நன்றன்று' அல்லவா?

இந்த வாரம் ஒரு நல்ல வாரமாய் எனக்கு அமைந்தது. முதலில் நம் பட்டங்களின் நாயகி அக்கா மதுமிதா தமிழ் மணத்தில் எழுதும் பலருக்கு பட்டங்களை வாரி வழங்க ஆரம்பித்தார். எனக்கு 'சகலகலா சமரச சத்வ பாரதி' என்ற பட்டம் கொடுத்தார். இந்தப் பட்டத்திற்கு என்ன பொருள் என்று அக்காவுக்கு மட்டுமே புரியும் என்று எண்ணுகிறேன். :-) உங்களில் யாருக்காவது புரிந்தால் தயை செய்து சொல்லுங்களேன்.

நண்பர் சிவா 'ஏன் குமரன். நீங்கள் தான் எல்லா செய்யுளுக்கும் விளக்கம் கொடுக்கிறீர்களே. இந்தப் பட்டத்திற்கும் விளக்கம் கொடுத்தால் என்ன?' என்கிறார். அப்படித்தான் செய்ய வேண்டும் போல என்றவுடன் அவர் தன் பங்குக்கு 'விளக்கத் திலகம்' என்ற பட்டம் கொடுத்துவிட்டார். இப்போது எனக்கு ஒரே குழப்பம். எந்தப் பட்டத்தை ஏற்றுக் கொள்வது என்று. நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எனக்குச் சொல்கிறீர்களா? ஆனால் நண்பர் ராம்கியிடம் சொல்லவேண்டாம். பட்டத்திற்கு அலைகிறேன் என்று திட்டப் போகிறார். :-)

இன்னொரு விஷயத்தையும் இந்த வாரம் கவனித்தேன். என் எல்லாப் பதிவுகளும் தமிழ்மண அன்பர்களில் ஆதரவால் 'வாசகர் பரிந்துரைத்த 25'ல் வருவதைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டம் இடாவிட்டாலும் வாக்களித்து ஆதரவு காட்டும் எல்லா தமிழன்பர்களுக்கும் நன்றிகள்.

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும் போது மதுரையில் இருந்து தம்பி தொலைப்பேசினான். தினமலரில் என் வலைப்பதிவு ஒன்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னான். எனக்கு ஆன்மிகத்திலும் தமிழிலும் சம்ஸ்கிருத்திலும் ஆவலை சிறு வயதிலேயே ஏற்படுத்திய என் தாயைப் பெற்ற தாய் அந்த செய்தியை தினமலரில் கண்டு தம்பியிடம் சொல்லியிருக்கிறார். என் பாட்டியின் குரலில் தெரிந்தப் பெருமையும் சந்தோசமும் பார்க்க (கேட்க?) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இப்படி இந்த வாரம் முழுவதும் நல்ல செய்திகளாகவே வந்து கொண்டு இருக்கிறது. இதோ இப்போது ஐம்பதாவது வலைப்பூவும் மலர்கிறது.

ஒரே வலைப்பதிவால் தமிழ்மண அன்பர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற அக்கா பட்டங்களின் நாயகி, பட்ட வள்ளல் மதுமிதா அவர்கள் கொடுத்த பட்டங்கள் வீணாய்ப் போகக்கூடாது அல்லவா? அதனால் பட்டம் பெற்ற எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் அவர்களின் பட்டத்தைச் சொல்லி ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.

பொறுமையின் சிகரம் காசி அவர்களே, ந்டத்துனர் திலகம் மதி கந்தசாமி அவர்களே, நடுநிலை நாயகன் ராம்கி அவர்களே, சிந்தனைச் செல்வி ரம்யா அவர்களே, வெற்றி விழா நாயகி எங்கள் அன்பு ஆசிரியை துளசி கோபால் அவர்களே, உரை வேந்தன் Sam ஐயா (அதாங்க தருமி ஐயா) அவர்களே, நட்பின் நாயகன் இந்த வார நட்சத்திரம் கணேஷ் அவர்களே, நாகரிக நேசன் இராமநாதன் அவர்களே, எரி தழல் (??) அன்பு நண்பர் சிவா அவர்களே, சிறுவர் நீதிக்கதை அரசு பரஞ்சோதி அவர்களே, செஞ்சொல் பொற்கொல்லன் ராகவன் அவர்களே, சர்வ குரு ஹரி கிருஷ்ணன் அவர்களே, பொறுமையின் சிகரம் என் மனதிற்கினிய என் துணைவியார் ச்ரீலேகா அவர்களே, என் மனைவியைத் தவிர வேறு எல்லோருக்கும் பட்டம் தந்த அக்கா மதுமிதா அவர்களே - உங்கள் அனைவருக்கும் முதற்கண் (கடைசிக்கண்?) என் நன்றி கலந்த வணக்கங்கள்.

என்ன ராகவன்...ஏன் வலைப்பதிவுகளை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வருத்தப்படுகிறீர்களா? என்ன செய்வது? ஐயன் வள்ளுவன் 'எண்ணித் துணிக கருமம்' என்று சொல்லியிருக்கிறாரே? :-)

60 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஹலோ! அது என்ன "எரி தழல் (??)" அப்படின்னு கேள்விக்குறி போட்டுருக்கீங்க. ஏன் சார்?. என் சந்தோசத்தை கெடுக்கறீங்க. மதுமிதா அக்கா இதோ பாருங்க குமரன் பண்ணறத :-)

    வாழ்த்துக்கள் குமரன். தினமலர் புகழா வேற மாறீட்டீங்க. மேலும் மேலும் ப்ளாக்குகள் தொடங்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப சிக்கிரம் அரை சதம் போட்டவர் நீங்களாகத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

    தமிழ் மேல் உங்களுக்கு இருக்கு ஈடுபாடும் ஞானமும் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள் குமரன்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் குமரன்.

    அது சரி. அதென்ன ஐம்பதாவது வலைப்பூக்கள் என்கிறீர்கள்?

    ஐம்பதாவது பதிவு என்றல்லவா சொல்ல வேண்டும்?

    ReplyDelete
  5. அடேங்கப்பா! ஐம்பது பதிவுகள் ஆகிவிட்டனவா குமரன். மிக்க மகிழ்ச்சி. எனது உளமார்ந்த வாழ்த்துகள். உங்களது தமிழ் உழைப்பு தெரிகிறது. இறையருளும் உங்களோடு இருப்பது தெரிகிறது. வெற்றி உமதே.

    சசசபா.குமரன் அவர்களே (ஒங்க பட்டம் பெருசாயிருக்குன்னு சுருக்கீட்டேன்.) எனக்கும் பட்டம் குடுத்துட்டீங்களே. நன்றி.

    உங்களுடைய பல பதிவுகள் வாசகர் பரிந்துரையில் வருகின்றன. ஒரு உழைப்பிற்கு உண்டான நியாயமான ஊதியம் அது. உங்கள் எழுத்து பலரை அடைகின்ற பெருமை அது. அது உங்களையும் உங்களோடு தோள் நிற்கும் துணைவியாரையும் சாரும்.

    அதோடு தினமலரிலும் பெயர் வந்து விட்டது. நல்ல விஷயத்திற்காக பெயர் வருவதே நன்று. அதற்குத் தமிழ் மணம் என்பது உங்களுக்கு கடவுள் அமைத்து வைத்த மேடை.

    கடைசியா ஒரு சின்ன ஜோக். விளையாட்டாச் சொல்றது. ஆகையால சீரியசா எடுத்துக்கக் கூடாது. சரியா.
    'எண்ணித் துணிக கருமம்' ன்னு வள்ளுவர் சொன்னது சரிதான்.

    துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்குன்னும் சொல்லீருக்காரே. நான் கொஞ்சம் துணிஞ்சவன் (பேச்சுலயாவது). ஹி ஹி.

    jokes apart. எண்ணித் துணிவதும் ஒரு விதத்தில் சரியே. எவ்வளவு செய்தோம் என்று தெரிந்திருப்பதும் நன்றே. இப்படி எண்ணி எண்ணியே நீங்கள் விரைவில் ஆயிரம் எண்ண வேண்டும் என்று எண்ணி உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    ReplyDelete
  6. 50வது பதிவைப் பாராட்டி முதலில் கருத்து சொன்ன வெள்ளைக்கார அண்ணாச்சி...ரொம்ப நன்றி...ஆனா நீங்க அப்படியே தேவையில்லாத விளம்பரமும் செஞ்சுருக்கீங்க...அதனால உங்க கருத்தை தூக்க வேண்டியதாச்சு....மன்னிச்சுக்கோங்க.

    ReplyDelete
  7. ஐம்பது பதிவுகளா! எவ்வளவு பெரிய மைல் கல் இது! இது தமிழுக்குப் பெருமை, தமிழ் இணையத்திற்குப் பெருமை, ஏன், மொத்த மனித சமுதாயத்திற்கே பெருமை! இவ்வாறு ஒன்று நிகழ வேண்டும் என்ற என் பல்லாண்டு கால பிரார்த்தனை வீண் போகவில்லை. உங்கள் வலைப்பூவின் வடிவில் அவதரித்துவிட்டான் கல்கி! இனி எங்கள் வாழ்வு சொர்க்கமே!

    ReplyDelete
  8. குமரன்,
    fastest 50 கண்டிப்பா உங்களுதுதான். வெட்டியா ஓட்டாம, கருத்தோட இத்தன பதிவுகள் இவ்வளவு சீக்கிரம் பதிக்கிறது ரொம்ப அபூர்வம். இதே ஸ்பீடில் இப்படியே தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குமரன்....
    தொடர்ந்து இதே ஊக்கத்துடன் எழுதுங்கள்.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. நன்றி சிவா..உங்களுக்கும் எரிதழலுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லவேண்டாம்...ஆறு பொருத்தம் சொல்லுங்க பார்க்கலாம்...

    ReplyDelete
  12. கோனார் தமிழ் உரை படிச்சி அந்த காலத்தில செய்யுளுக்கு பதவுரை தெரிஞ்சு பாஸ் பண்ண போதுமுன்னு படிச்சேன் அந்த காலத்திலே! ஆனா இப்ப நீங்க எழுதற பாசரங்களை படிச்சு அதற்கு உண்டான தெளிவுரையும் தெரிஞ்சிக்கிட்டப்ப அடடா இதல இருக்கா இவ்வளவு ஆனந்தம்னு பூரிப்பா இருக்கு. வாழ்க உங்கள் தொண்டு!

    ReplyDelete
  13. வாழ்த்துகளுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  14. ஜோசஃப் சார்...எனக்கு அந்த நாள் முதல் இந்த நாள் வரை (அதாங்க எழுத ஆரம்பித்த ஒரு மாசமாத்தான்) இந்த வலைப்பதிவு, வலைப்பூ, பதிவு இவற்றில் குழப்பம் உண்டு...ஒவ்வொரு postingம் மலர்வதால் அதை வலைப்பூ என்று சொல்லிவிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  15. இருங்க சிவா
    வந்தாச்சு.

    இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் சேந்து சபையில,
    77 பேருக்கு கஷ்டப்பட்டு(இதுக்காகதான் நெட்டில ரொம்ப நேரம் இருந்தது.இந்த மாசம் எக்குத்தப்பா போன் பில் எகுரும்-னு நினைக்கிறேன்.(இதுக்கு ராம்கியை வன்மையா கண்டிக்கிறேன்:)) )பட்டம்கொடுத்திருக்கேன்.
    நக்கல் பண்ணாதீங்கப்பா:)
    எத்த்ன அடைப்புக்குறி,ஸ்மைலி போட வேண்டியிருக்கு.

    குமரன் ஒரு பத்து நாள் கழிச்சு தான் இங்க வரணும்.
    ஊருக்கு நிம்மதியா போக விடிறீங்களா?
    பட்டத்துக்கு இது வரைக்கும் யாராவது கோனார் நொட்ஸ் போட்டிருக்காங்களா?
    என்ன போட வச்சுராதீங்க.

    'சகலகலா சமரச சத்வ பாரதி'-

    எல்லா விஷயமும் புட்டு,புட்டு வைக்கிறீங்க.
    எல்லாருட்டயும் பண்பா
    நடந்துக்கறீங்க,
    கன்னா பின்னா-ன்னு சண்டை போடறதில்ல
    (போடணும்-னுநினைச்சாலும் என்ன சொன்ன மாதிரி போகுற போக்குல சொல்லிட்டு போறது,)

    (இருந்தாலும் பட்டத்துக்கு அலையறவங்கள பாத்திருக்கேன்,
    பட்டத்துக்கு அலையாம,பட்ட விளக்கத்துக்கு இப்படியா அலையணும்:))

    குமரன் தம்பி
    வாசகர் பரிந்துரைத்த 25,
    தினமலர் உங்களை கண்டு கொண்டது,முக்கியமா சமஸ்க்ருத விருப்பம்
    எல்லத்துக்கும்
    அக்கா மனமார்ந்த வாழ்த்தை சொல்லிக்கிறேன்.

    சில விஷயம் சொல்ல வேண்டியிருக்கு.வந்து சொல்றேன்.
    50 வது பதிவுக்கும் வாழ்த்துகள்
    இதுதான் நானிட்ட பெரிய பின்னூட்டம்-னு நினைக்கிறேன்
    (இப்ப புரியுதா பட்டம் உங்களுக்கு பொருத்தம்-னு)

    மனைவிக்கு பட்டம் கொடுக்கலாம்யா.கொஞ்சம் பொறுங்க.அவங்கள தெரிஞ்ச பெறகு தரலாம்.வீணா மதனி,நாத்தனாருக்கு இடையில கலகம் பண்ணக் கூடாது.

    யூ டூ சிவா!!!!!
    எரிதழல்-கொண்டு வர்றப்ப வே பத்திக்கும்.
    மகாத்மா நினைவு,பாடல்கள்,
    எந்த பதிவுன்னாலும்பழைய நினைவுகளயும் கிளறி பத்த வைக்கிறது .
    1.பத்த வைக்கிறது.(புது சிந்தனையை)
    2.எரிக்கிறது(அறியாமையை)
    3.குளிர்காயவைக்கிறது.
    (குளிர் போக்குறது)
    (குருட்டு சிந்தனைய போக்குறது)
    4.ஒளி ஏத்துறது(அறிவுச்சுடரை)
    5.அழிக்கிறது(அறியாமையை)
    6.இன்னொரு விளக்க ஏத்தறது
    (குமரன இங்க இழுத்து வந்தது)

    போதுமடா சாமி
    இதுக்குதான் அன்பா,பிரியமா,இலவசமா யாருக்கும் எதுவும் பண்ணக்கூடாது.:)

    பொல்லாத உலகஞ்சாமி இது.

    ReplyDelete
  16. வாழ்த்துகளுக்கு நன்றி ராகவன். தமிழன்னையின் அருளும் இறையருளும் தங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்தும் இருந்தால் போதுமே!

    நீங்களாவது எனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்திற்கு விளக்கம் கூறுவீர்கள் என்று எண்ணினேன். அதனைச் சுருக்கி கவுத்திட்டீங்களே...உங்களுக்கு நான் பட்டம் கொடுக்கவில்லை; மதுமிதா அக்கா தான் கொடுத்தார்கள்...உங்களுக்குக் கொடுத்த பட்டமும் நன்றாய் இருக்கிறது.

    தமிழ்மணம் கடவுள் அமைத்து வைத்த மேடை என்பது மிக நிச்சயம்.

    ஏதோ துணிஞ்சிட்டீங்க...இனிமேலாவது எண்ணிப்பாருங்க...ஐ...உங்களை மாதிரியே நானும் சிலேடை எழுதுகிறேனே!!!

    ReplyDelete
  17. //இவ்வாறு ஒன்று நிகழ வேண்டும் என்ற என் பல்லாண்டு கால பிரார்த்தனை வீண் போகவில்லை//

    துறவி சரிநிவாஸ்...உங்கள் வஞ்சப் புகழ்ச்சிக்கு மிக்க நன்றி...நானும் எனது நண்பர்களும் உங்கள் நகைச்சுவை உணர்வை நன்கு ரசித்தோம்...எனது இந்தப் பதிவைப் படித்த நண்பர்களும் ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  18. மதுமிதா அக்கா! நல்ல சமயத்தில் வந்து இந்த விளக்கத் திலகத்திடம் இருந்து காப்பத்தினீங்க. குமரன், 6 ஒற்றுமை கேட்டீங்களே. போதுமா?. மதுமிதா! நீங்க கொடுத்த பட்டத்தை பார்த்து நெறைய பேருக்கு புகை. அதான் இப்படியெல்லாம். நீங்க வேற வாயில நுழையாத பட்டமா அவருக்கு கொடுத்திட்டீங்களா அதான் :-))
    //**கன்னா பின்னா-ன்னு சண்டை போடறதில்ல **// எம்பெருமானே! ஏனிப்படி சோதிக்கிற?. குமரன் தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்கறார். நிஜ ரூபம் எங்களுக்கு மட்டுமே தெரியும் :-))

    ReplyDelete
  19. மதுரக்காரவுகன்னா..மதுரக்காரவுகதான்! பொறவு என்ன சும்மாவா, தமிழுன்னா மதுர..மதுரன்னா தமிழுங்கிறது..

    வாழ்த்துக்கள்.

    அதுசரி, விளக்கதிலகமே! 'உரை வேந்தன்' அப்டின்னா என்ன? (அந்தக் காலத்து 'கோனார் நோட்ஸ்' ஞாபகத்துக்கு வந்தது.)

    ReplyDelete
  20. சிவா
    பதிவுகளின் பின்னூட்டத்தில சண்டை போடறதச் சொன்னேன்
    அப்ப நாங்க போட்டோமான் -னு கேக்கக்கூடாது:)

    குமார்

    பவதஹ மாதமஹி சக்ருதம் புண்யம் க்ருதவதி
    தஸ்யாஹ சகுணசிந்தா அத்ய பலதி தஸ்ய ரூபேண
    தஸ்யாஹ க்ருதே மம தன்யவாதாம் ப்ரேஷயது
    தச தினானி அனந்தரம் நகரம் புனஹ ஆகமிஸ்யாமி
    தத் சமயே வதாமி.புனர் மிலாமஹ

    ReplyDelete
  21. நன்றி ரேஸ்நாதர்...I mean இராமநாதன். இறையருளால் இதே வேகத்தில் பதிவிடுதலைத் தொடரமுடியும் என்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் (சரி...சரி...நினைத்துக்கொண்டிருக்கிறேன்...இந்த சிலேடை வந்தது தான் வந்தது...என்ன சொல்லவருகிறேன் என்று எனக்கே புரியவில்லை). வழக்கம்போல் உங்கள் ஆதரவு வேண்டும்...

    ஒரு வேண்டுகோள்...காதை இப்படி கொண்டு வாங்க...உங்க பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுபவர்களை இந்த பக்கமும் அனுப்பினால் என்ன? ராகவனும், சிவாவும், நானும் பதிவுகளைப் போட்டுவிட்டு யாராவது வந்து படித்துப் பார்த்து பின்னூட்டம் இடமாட்டார்களா என்று காத்திருக்கிறோம்...உங்களுக்கும், டோண்டு ஐயாவுக்கும், தருமி ஐயாவுக்கும், மட மடன்னு பின்னூட்டங்கள் வருகிறதே...ரகசியம் என்ன? (நீங்கள் இதை சிவாவிடமும் ராகவனிடமும் சொல்லாதீர்கள்; என்னுடன் சண்டைக்கு வரப் போகிறார்கள்)

    ReplyDelete
  22. ஏன் சார். இப்படி பின்னோட்டத்துக்கு அலையறீங்க. என்னையும் வேற இழுக்கறீங்க:-) வர வர ரொம்ப கெட்டு போய்டீங்க.

    ReplyDelete
  23. //உங்களுக்கும், டோண்டு ஐயாவுக்கும், தருமி ஐயாவுக்கும், மட மடன்னு பின்னூட்டங்கள் வருகிறதே...ரகசியம் என்ன?//
    நானெல்லாம் இந்த விஷயத்துல ஜுஜுபி. பின்னூட்ட நாயகி, முகமூடி, குழலினெல்லாம் இருக்காங்க. அவங்கள்ளாம் என்ன பதிவு போட்டாலும் சூப்பர் ஸ்டார் மாதிரி பின்னூட்ட ஓப்பனிங் கிடைக்கும்.

    பின்னூட்டம் எப்படி அதிகரிக்கணும் கேக்கறீங்களா? ரொம்ப ஈஸி. 30 வந்தா, அதுல 20 ஒங்களுதா இருக்கணும். ஒரு பின்னூட்டத்திற்கு வெறும் பதிலா நன்றியோட நிறுத்தக்கூடாது, கமெண்ட் கொடுத்தவர வம்புக்கு இழுக்குறா மாதிரி ஏதாவது கேள்வி கேக்கணும், அவர் பதில் போட, நாம மீண்டும் கொக்கி போட, 20-30 வாது கியாரண்டி. ரிப்பீட் ஆடியன்ஸ் ஆச்சு.

    (இப்ப செஞ்சிருக்கீங்களே.. இதே டெக்னிக் பயன்படுத்தினாலே போதும்) ;)

    ReplyDelete
  24. prEvu Kumaran,
    nandinin!
    amre mai bhaashaam mullo tumi rovvo likket cokkat rhaai.
    Pathy.

    ReplyDelete
  25. நன்றி அன்பு....ஊக்கப்படுத்த உங்களைப் போன்றவர்கள் பலர் இருப்பதனால் தான் எழுதமுடிகிறது....

    ReplyDelete
  26. இன்னொரு வெள்ளைக்கார அண்ணாச்சி கருத்து போட்டிருந்தார்...அதையும் தூக்கியாச்சுல...

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் குமரன். மென்மேலும் நிறைய எழுத எனது அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. Vaazhthukal

    AGP

    ReplyDelete
  29. ஆமாம் வெளிகண்ட நாதர். நீங்கள் சொல்வது சரிதான். தமிழுக்கே உரிய இனிமை தமிழ்ச்செய்யுள்களில் தான் நன்றாய் வெளிப்படுகிறது. தொடர்ந்து வந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறி ஆதரவு தாருங்கள்.

    அது சரி, வெளிகண்ட நாதர் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்ன பொருள்?

    ReplyDelete
  30. மதுமிதா அக்கா, நீங்க கொடுத்த பட்டங்களை நக்கல் பண்ணலை. நீங்க நல்ல காரியம் தான் செஞ்சிருக்கீங்க. நாங்க சும்மா சிவாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் வாரிவிட்டுகிட்டு இருக்கோம். நீங்க ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க.

    ஒரு யோசனை. எக்குதப்பா போன் பில் வந்ததுன்னா நீங்க பட்டம் கொடுத்த 77 பேருக்கும் அந்த பில் தொகையை பிரிச்சுக் கொடுத்து கட்டிட சொல்லுங்க. பட்டம் வாங்குனதுக்கு இதைக் கூட செய்யாட்டி எப்படி? என்ன நான் சொல்றது?

    பத்து நாள் கழிச்சு வரப்போறேன்னு சொல்றீங்க. ஆனால் பல பேர் பதிவுகளில உங்க பின்னூட்டம் வருது. ஊருக்கு போறீங்களா இல்லையா?

    நீங்க பட்டத்துக்கு கோனார் உரை போடணும்னு தான் நினைக்கிறேன். தருமி ஐயாவில இருந்து எல்லாரும் பட்டத்துக்கு விளக்கம் என்கிட்ட கேக்கறாங்க.

    அக்கா, எனக்கு குடுத்த பட்டத்துக்கு விளக்கம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இப்பத்தான் எனக்கு பல விஷயங்கள் புரியுது. நீங்க சூப்பரா ஒரு பட்டம் கொடுத்துருக்கீங்க. எனக்கும் புரியலை. செஞ்சொற் பொற்கொல்லருக்கும் புரியலை. நான் பட்டத்துக்கு விளக்கம் கேட்டு அலைஞ்சா அவர் அந்த பட்டத்தையே சுருக்கி சசசபான்னு கூப்புடுறார். இப்பத்தான் அர்த்தம் புரியுது.

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா. பெரிய பின்னூட்டத்துக்கும் நன்றி. ராகவனுக்கு அப்புறம் நீங்க தான் பெருசா பின்னூட்டம் போடறீங்க போலிருக்கு. இப்ப உங்க பின்னூட்டத்துக்கு பதிலா நான் போடற பின்னூட்டம் ரொம்ப ரொம்ப பெருசா போச்சு.

    ஆஹா...ரொம்ப அருமையா சிவாவுக்கு கொடுத்த பட்டம் எப்படி அவருக்குப் பொருத்தம்ன்னு விளக்கிட்டீங்க. நிச்சயமா நீங்க கோனார் உரை போட்டுத்தான் ஆகணும்ன்னு நினைக்கிறேன். :-)

    //போதுமடா சாமி
    இதுக்குதான் அன்பா,பிரியமா,இலவசமா யாருக்கும் எதுவும் பண்ணக்கூடாது.:)// ஐயோ கடவுளே...இப்படி எல்லாம் நினைக்காதீங்க அக்கா. நாங்க எல்லாம் பட்டத்துக்கு அலையாட்டியும் (??) நீங்க பட்டம் கொடுத்தவுடனே எப்படி மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டோம்ன்னு தெரிஞ்சா இன்னும் நீங்க நிறைய அன்பா, பிரியமா, இலவசமா தருவீங்க.

    ReplyDelete
  31. சிவா ஏன் நம்ம ரகசியத்தை எல்லாம் பொதுவில வந்து எடுத்து விடறீங்க. ஆனா நீங்க சொல்றது என்னமோ வாஸ்தவம் தான். மதுமிதா அக்கா என் பட்டத்துக்கு கொடுத்த விளக்கத்தை சொன்னவுடனே என் மனைவியார் சொன்னது - அவங்களை இங்க வந்து பார்க்க சொல்லணும். ஏதோ வலைப்பதிவுன்னவுடனே சாதுவா படம் காமிக்கிறீங்க... :-)

    ReplyDelete
  32. தருமி ஐயா வருக வருக. ரொம்ப நாளைக்கப்பறம் நம்ம வலைப்பக்கம் வந்துருக்கீங்க. ரொம்ப சந்தோசம்.

    தஞ்சாவூர் பக்கம் பொறந்தா தானா சங்கீதம் வரும்ன்னு சொல்லுவாங்களே...அது மாதிரி சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையில் பொறந்தா தமிழ் தானா வரணுமே.

    வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி ஐயா. அடிக்கடி வந்து உங்க கருத்துகளைச் சொல்லிட்டுப் போங்க.

    உங்க பட்டத்துக்கு விளக்கம் மதுமிதா அக்காகிட்ட தான் கேக்கணும். கூடிய சீக்கிரம் 'ஆறு' பொருத்தங்களுடன் எல்லாரோட பட்டங்களுக்கும் விளக்கம் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. ஆஹா...மாட்டிக்கிட்டோமே...மதுமிதா அக்கா சமஸ்கிருதத்துல என்னமோ சொல்லிட்டுப் போயிருக்காங்களே...யார்கிட்ட அர்த்தம் கேக்கிறது????

    ReplyDelete
  34. இராமநாதன். என்ன செய்யணும்ன்னு தெளிவா சொல்லியிருக்கீங்க. இதோ இந்தப் பதிவுக்கே 30 தாண்டியாச்சு. நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு தேமேன்னு இருந்துடாதீங்க. அப்புறமா வந்து நான் ஏதாவது கொக்கி போட்டிருக்கேனான்னு ஒரு பார்வை பார்த்துட்டுப் போங்க. என்ன சொல்றது சரியா?

    ReplyDelete
  35. prEvu Pathy AyyAnu,

    tumI sange sohan mI keruvaayIs. hoyEti aththAk kotthi amrE nAyaki dEvun gIthunuk arthu sangenkon melli sE. tye musaththEr amrE bhAsAm melli likkus. thura AsirvAth.

    prEv sentO
    Kumaran

    ReplyDelete
  36. நன்றி மூர்த்தி. முத்தமிழ் மன்றத்தை அறிமுகப்படுத்தியதற்கு கூடுதல் நன்றிகள்.

    ReplyDelete
  37. மதுமிதா அக்கா, நான் முறைப்படி சமஸ்கிருதம் படித்ததில்லை. எல்லாம் பல நூல்கள் படித்து வந்த கேள்வி ஞானம் தான். அந்த அரைகுறை அறிவை வைத்து நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன். சரியா என்று சொல்லுங்கள்.

    //குமார்

    பவதஹ மாதமஹி சக்ருதம் புண்யம் க்ருதவதி
    தஸ்யாஹ சகுணசிந்தா அத்ய பலதி தஸ்ய ரூபேண
    தஸ்யாஹ க்ருதே மம தன்யவாதாம் ப்ரேஷயது
    தச தினானி அனந்தரம் நகரம் புனஹ ஆகமிஸ்யாமி
    தத் சமயே வதாமி.புனர் மிலாமஹ
    //

    குமார்

    தங்களுடைய தாயைப் பெற்ற தாய் நிறைய புண்ணியம் செய்தவர்கள். அவர்களுடைய நல்ல குணங்களுடன் கூடிய நல்சிந்தனை தான் உங்கள் உருவத்தில் இப்போது வந்துள்ளது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்து நாட்கள் பல நகரங்களுக்குச் சென்று மீண்டு வருகிறேன். அப்போது பேசலாம். மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  38. அன்புள்ள குமரன், நீங்கள் செய்வது மிக நல்ல சேவை. உங்கள் சேவையை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    உங்கள் அன்பு வாசகன் A G குமரேஸன்.

    ReplyDelete
  39. பாராட்டுகள் குமரன்,

    மிக விரைவில் 50 பதிவுகள், அனைத்தும் அருமையான பதிவுகள்.

    ஆன்மீகத்தை நீங்க சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது.

    தினமலரில் உங்க வலைப்பூ வந்தமைக்கு பாராட்டுகள்.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள், படிக்க ஆவலோடு இருக்கிறோம்.

    ReplyDelete
  40. நன்றி A.G. குமரேஸன். உங்கள் பெயரில் எனக்கு ஒரு பால்ய சினேகிதன் உண்டு. :-)

    ReplyDelete
  41. பாராட்டுகளுக்கு நன்றி பரஞ்சோதி. தொடர்ந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  42. பாராட்டுகளுக்கு நன்றி பரஞ்சோதி. தொடர்ந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  43. இந்த வெளிகண்ட நாதர் பெயர் விளக்கம் நான் தருமிக்கு சொன்ன மாதிரி,

    நாடுவிட்டு நாடு வந்தா நாடோடி, அது மாதிரி ஊரு விட்டு ஊரு போயி, மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி, பிறகு பொறந்த தேசத்தை வுட்டுட்டு வெளி நாடு வந்து வெளி உலகங்களை கண்டதுனால, வெளி கண்ட நாதர்.. ம்.. ஒண்ணுமில்லை, சின்ன வயசுல நாங்க தங்கன வீட்டுக்கு பக்கத்தில இருந்த கோயில்ல இருந்த சாமி பேரு தான்.. வச்சுகிட்ட நல்லாருக்குமின்னு வச்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  44. // ஏதோ துணிஞ்சிட்டீங்க...இனிமேலாவது எண்ணிப்பாருங்க...ஐ...உங்களை மாதிரியே நானும் சிலேடை எழுதுகிறேனே!!! //

    ஐயோ! அப்ப உண்மையாவே என்னச் சொல்றீங்களா? எண்ணச் சொல்றீங்களா? செஞ்சிட்டா போச்சு.

    அப்புறம். உங்களுக்குப் பின்னூட்டமே வரலைன்னு வருத்தப்பட வேண்டாம். 46 பின்னூட்டங்கள் இந்தப் பதிவிற்கு.

    ReplyDelete
  45. அப்படிப் பார்த்தா நான் கூட வெளிகண்ட நாதர் தான். இல்லீங்களா?

    ReplyDelete
  46. ஆமாம் இராகவன். இராமநாதன் சொன்ன அறிவுரையை follow செஞ்சதால வந்த பின்னூட்டங்கள் :-)

    ReplyDelete
  47. Vazhthukkal Kumaran ! Especially the proud feeling of your Grandma is really great to know!

    My best wishes to keep such initiatives going...

    ReplyDelete
  48. வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஆனந்த் சுப்ரமணியன்.

    அடிக்கடி வந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

    ReplyDelete
  49. குமரன்
    கற்றது கையளவு
    கல்லாதது உலகளவு
    எல்லாருக்குமே இது தான்.

    பரவாயில்லை நன்றாக சொன்னீர்கள்.

    அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவி
    பத்து நாட்களுக்குப் பிறகு நகரம் மறுபடி வருவேன்.

    சமஸ்கிருதம் எங்கு கற்றீர்கள்?

    மகிழ்ச்சியாய் இருக்கிறது.
    இப்பதான் 50 பதிவு பார்த்தமாதிரி இருக்கு.
    அதற்குள் 60 வந்தாச்சா.
    நன்று.தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  50. மதுமிதா அக்கா. திருத்தங்களுக்கு நன்றி. சமஸ்கிருதம் கேள்வி ஞானம் தான். எங்கும் சென்று தனியாய் கற்றுகொள்ளவில்லை.

    ஆமாம். இன்றைக்கு 60வது பதிவு போட்டேன். நிறைய வலைப்பக்கங்கள் இருப்பதால் 50லிருந்து 60 வருவதற்கு நிறைய நாள் பிடிக்கவில்லை :-)

    ReplyDelete
  51. வாழ்த்துகள் குமரன். ஐம்பது பதிவுகளையும் ஒரு முறையாவது வாசித்து விட்டு எனது கருத்துகளையும் சொல்கிறேன்....

    நீங்க மதுரையா... ஊர்க்காரங்களாகிப்புட்டீங்க.. இனிமே தவறாம வரவேண்டியதுதான்

    நீங்க குமரன்

    நான் முத்து குமரன்.....

    ஆனால் உங்கள் பதிவுகள் முத்துக்களாக இருக்கும் என்றே நம்புகிறேன்

    ReplyDelete
  52. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி 'முத்து'குமரன். சீக்கிரம் 50 (உண்மையில் 60...இன்று தான் 60வது பதிவைப் போட்டேன்) பதிவையும் படித்து உங்கள் கருத்துகளை (விமர்சனங்களைக்) கூறுங்கள்.

    //உங்கள் பதிவுகள் முத்துக்களாக இருக்கும் என்றே நம்புகிறேன்// அப்படிதான் நானும் நம்பறேன். :-)

    ReplyDelete
  53. பதிவைப் படிக்கலை. பின்னூட்டம் சுவாரச்யமாய் இருக்கு

    ReplyDelete
  54. பதிவைப் படிக்கலை. பின்னூட்டம் சுவாரச்யமாய் இருக்கு

    ReplyDelete
  55. நன்றிகள் சிவபிரகாசம்.

    ReplyDelete