இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.
அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.
நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.
என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.
இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?
உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.
ரொம்ப நன்றிங்க.
Ungalukkaavathu ithai ezhutha vendum endru thondriyathey...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டு என்ன செய்யலாம் என்று அதிகம் கூறாவிட்டாலும் என் சிந்தனையை தூண்டிவிட்டீர்கள். நன்றி.
ReplyDeleteதீபாவளிக்கு இப்படியெல்லாம் செய்யலாமா?!!!
ReplyDeleteதீபாவளிக்கு இப்படியெல்லாம் செய்யலாமா?!!!
ReplyDeleteநல்ல ஐடியா கொடுத்தீங்க நன்றி.
ReplyDeleteஎன் வீட்டுப்பக்கத்தில் ஆதரவற்றகுழந்தைகள் இல்லம் ஒன்று உள்ளது அவர்களுக்கு இனிப்பு வாங்கித்தர முடிவுபண்ணிட்டேன்.
நன்றி சித்தன். அப்படியே உங்கள் வலைப்பக்கத்திலும் இதைப் பற்றிப் பேசுங்கள். இன்னும் நிறைய பேர் படிக்கட்டும்.
ReplyDeleteநல்ல யோசனை குமரன்..நாம ஆயிரக் கணக்கிலே செலவழிச்சு சந்தோஷப்பட்டுகிறதை விட ஒரு ஏழைக்கு உதவி செஞ்சு அவங்க, 'நீங்க நல்லா இருக்கணும்'னு சொல்வாங்க பாருங்க, அதுக்கு ஈடு இணையே கிடையது.
ReplyDeleteதீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதீர்கள், அங்கு சிரமப்படும் குழந்தைத்தொழிலாளர்களை நினைத்துப்பாருங்கள் என்ற பரபரப்பு வேண்டுகோளில்லாமல், இப்படியொரு வேண்டுகோள் வைத்தமைக்கு நன்றி, பாராட்டுக்கள்.
ReplyDeleteஇங்கு சிங்கையிலும் சிண்டா (Singapore INdian Association - SINDA) மூலம் வருடாவருடம் 'Light up the life...', 'Project Give!' என்ற சில திட்டங்கள் மூலம் நன்கொடை திரட்டப்பட்டு பணமாகவோ/உணவுப்பொருளாகவோ (தீபாவளிக்குமுன்னர்) சிரமப்படும் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதற்கு முடிந்தவரையில் உதவியே வருகிறோம், தொடர்வோம்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு....என்ன செய்யலாம். எங்கள் அலுவலகத்தில் ஒரு சேல்ஸ் போட்டிருக்கிறார்கள். அதாவது அது ஏழைக்குழைந்தைகளுக்கு உதவும் CRY அமைப்பின் சேல்ஸ். என்ன வாங்குவதென்று தெரியவில்லை. ஒரு பாட்டில் தேன் வாங்கினேன். இன்னும் சில பொருட்கள் உள்ளன. எளிமையான பொருட்கள் சிலதை வாங்கி நண்பர்களுக்குத் தீபாவளி பரிசாக வழங்க இருக்கிறேன். பரிசுக்குப் பரிசும் ஆச்சு. தொண்டுக்குத் தொண்டும் ஆச்சு. ஆனால் இதெல்லாம் கொஞ்சம்தான். நாம் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
ReplyDeleteநன்றி ரம்யா நாகேச்வரன். நீங்க சொன்னது மிகவும் சரி. ஆனா நாம எல்லோருமே நமக்கும் நம்ம சொந்தங்களுக்கும்ன்னா ஆயிரக்கணக்கில செலவு செய்யத் தயங்கறதில்ல. ஆனா ஒத்தை ரூபாய் ஒரு ஏழைக்குக் கொடுக்கணும்ன்னா ஆயிரம் யோசனை யோசிக்கிறோம். இந்த நிலை மாறணும்.
ReplyDeleteநல்ல கருத்து சரியா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteநன்றி அன்பு. சிங்கையில் நடக்கும் திட்டங்கள் பற்றி சொன்னதற்கு நன்றி. எல்லா உதவிகளையும் செய்து விட்டு என் செய்தோம் என்று இருக்கும் வகையில் தான் நம் நிலைமை இருக்கிறது. Supply is way low than the demand. We need to do more to support our people to support themselves.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteஉங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய இந்தப் பதிவை பாருங்க:
http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html
நன்றி.
ராகவன், நீங்கள் சொன்ன முறை மிக நல்ல முறை. பரிசுக்குப் பரிசும் ஆச்சு, தொண்டுக்குத் தொண்டும் ஆச்சு. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும். நண்பர்கள் சிலர் பெங்களுரில் சிறு சிறு தொண்டுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருக்கக்கூடும். அவர்களைப் பற்றி மேலும் அறிய http://www.dreamindia2020.org/ சென்று பாருங்கள்.
ReplyDeleteநல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள் குமரன்....
ReplyDeleteநன்றி கல்வெட்டு. உங்கள் வலைப்பதிவுகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். தீபாவளியைப் பற்றிய உங்கள் வலைப்பதிவை இப்போது தான் படித்தேன். அதைப் பற்றிய கருத்தை அங்கு வந்து சொல்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteWhat did you do kumaran, to help the poor?. if you let us know, we will also follow you.
ReplyDeleteRegards
Greatest.
Usually on such occasion/anniversary dates I offer help to a nearby orphanage in my native place. I do this every year atleast once.
ReplyDeleteRegards,
Anand Subramanian
ரொம்ப நன்றி அவதாரம் viji...
ReplyDeleteAnaivarakkum enathu Diwali Nal vaazhtuthkal!!!
ReplyDeleteAnaivarum edhaiye pinpattrinaal naatil ulla pati thottiyellam diwaliyin oli nirainju erukkum!!!
Kandippaaka Anaivarum Kadaip pidikka vaendiya Nallcheyal...
ReplyDeleteரம்யா நாகேஸ்வரன், நீங்கள் சுட்டிக்காட்டிய உங்கள் பதிவைப் படித்தேன். என்னைப் போல தமிழ்மணத்திற்கு புதிதாய் வந்தவர்களும் படித்துப் பயன் பெற நீங்கள் அதை மீண்டும் பதிய வேண்டும். வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் நம்மவர்களுக்கு உதவி செய்ய உள்ள பல வழிகளில் சிலவற்றைப் பற்றிய தெளிவான செய்திகளைக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteகுமரன், சமீபத்தில் தான் யாரோ பின்னூட்டமிட்டதால் இரண்டாவது வலம் வந்தது அந்தப் பதிவு. நிச்சயம் சில நாட்கள் கழித்து மறுபதிவு செய்கிறேன். எனக்கு தெரிந்த நல்ல தொண்டு நிறுவனங்களைப் பற்றி அப்பப்ப என் பதிவில் எழுதியும் வருகிறேன். நன்றி.
ReplyDeleteநன்றி கணேஷ். முதன்முதலா என் வலைப்பதிவில் கருத்து சொல்லியிருக்கீங்க. நல்வரவு. அடிக்கடி வருகை தாருங்கள்.
ReplyDeleteநன்றி ஆனந்த் சுப்ரமணியன், லக்ஷ்மி, ஹமீத் அப்துல்லா.
ReplyDeleteGreatest நண்பரே. நான் ஏதோ என்னால் முடிந்த வரை நம் அளவு அதிர்ஷ்டம் இல்லாத நம் உடன்பிறப்புகளுக்கு உதவி வருகிறேன். List போடும் அளவுக்கு இன்னும் எதுவும் செய்துவிடவில்லை. அப்படியே செய்திருந்தாலும் 'என் செய்தோம். இன்னும் செய்ய வேண்டியது ஏராளமாய் இருக்கிறதே' என்னும்படி தான் நம் நிலைமை இருக்கிறது. அதனால் தான் உங்களைப் போன்ற நண்பர்களும் உதவி செய்யட்டும் என்று இது போன்ற வலைப் பதிவினை எழுதினேன்.
Together we can. Together we should.
www.dreamindia2020.org
+ போட்டிருக்கிறேன் குமரன்.
ReplyDeleteநன்றி
நல்ல நாளும் அதுவுமா பலரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்ததற்கு
+ போட்டிருக்கிறேன் குமரன்.
ReplyDeleteநன்றி
நல்ல நாளும் அதுவுமா பலரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்ததற்கு
மிக்க நன்றி மதுமிதா
ReplyDeletenalla point.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteவெவ்வேறு பரிமானங்களில் தங்களின் பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆத்திகம், சமூக சேவை, எனக் கலக்குகிறீர்கள்.
யாருக்காகவது ஏதாவது செய்ய வேண்டும்- சத்தமில்லாமல் என அடிக்கடி நினைக்கிறேன். எப்படிச் செய்வது தெரியவில்லை. யாரெனும் தொடர்பு கொண்டால் செய்யலாம்.
பார்க்கலாம். உதவி செய்யவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இறையுள்ளம் நினைத்தால் தான் நடக்கும்.
இனிய தீபத்திருவிழா நல் வாழ்த்துகள்.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ஐயா.
ReplyDelete