Saturday, October 08, 2005

மைத்ரீம் பஜத

நீங்கள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இந்த பாடலை கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் 'பெரியவா' என்றும் 'பரமாசாரியர்' என்றும் அறியப்படும் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியார் ச்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் 50ம் ஆண்டு (அப்படித் தான் நினைவு) நிறைவு விழாவில் பாட எம்.எஸ்ஸிற்கு அழைப்பு வந்தது. எம்.எஸ் இந்த அழைப்பைப் பற்றி ஆசாரியரிடம் சொன்ன போது ஆசாரியர் இந்த பாடலை எழுதிக் கொடுத்தார்.

இந்த பாடலை எழுதி ஏறக்குறைய 40 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் இந்த பாடலின் கருத்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வகையில் உள்ளது.

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - பணிவுடனும் நட்புடனும் உலக மக்கள் எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். அது எல்லோர் இதயத்தையும் வெல்ல உதவும்.

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத - பிறரையும் உங்களைப் போலவே எண்ணிப் பாருங்கள்.

யுத்தம் த்யஜத - போரினை விடுங்கள்.

ஸ்பர்தாம் த்யஜத - தேவையற்ற அதிகாரப் போட்டியினை விடுங்கள்.

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமனம் - பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்ரமிக்கும் அக்கிரம செயலை விடுங்கள்.

ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே - பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள்.

ஜனகோ தேவ: சகல தயாளு: - நம் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிக்கக் கருணை கொண்டவன்.

தாம்யத - ஆதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள்.

தத்த - ஆதலால் எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள்.

தயத்வம் - ஆதலால் எல்லோரிடமும் கருணையோடு இருங்கள்.

ஜனதா - உலக மக்களே!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

இந்தப் பாடலின் பொருள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். தமிழ் அறியாத உங்கள் நண்பர் யாருக்காவது நீங்கள் இந்த பாடலின் பொருளை அனுப்ப விரும்பினால் இங்கே சொடுக்கி அனுப்பவும்.

நம் நண்பர் சிவராஜா இந்த பாடலை தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார். கேட்டுப் பாருங்கள்.

10 comments:

  1. Ivalavu arrumanyaana porrul. Ulaggathai ungal veedaga parungal.Annaivarryum sagothara , sagotharigalaga paarungal endra porrul. Hmm..inthat Enlgish link must be sent to Bush, by any chance do u knos his mail ID?

    ReplyDelete
  2. MUDAL NAM INTHUKKAL ,ITHAN PORULAI PURINTHU VALAP PALAKA VENDUM, BUSHIP PIN PARPPOM

    jOHAN -pARIS

    ReplyDelete
  3. MUDAL NAM INTHUKKAL ,ITHAN PORULAI PURINTHU VALAP PALAKA VENDUM, BUSHIP PIN PARPPOM

    jOHAN -pARIS

    ReplyDelete
  4. Johan,

    nIngkal Inthukkal enRu solkiReerkalaa, illai Indiyarkalnnu solreengalaa?

    nInga solrathu sari.

    ReplyDelete
  5. குமரன்,
    எத்தனை தரம் கேட்பது.அத்தனை தரம் கேட்டாலும்,
    அருமையான கனிவோடு மனதில் பொருந்தும் பாடல்.
    உலகத்துக்கு ரொம்ப வேண்டியது.
    தோழமைதானே.
    அதுவும் மன்னிப்பதும் தான் பழி வாங்கும் குணத்தை மாற்றும்.
    பெரியவா சொன்னதும்,
    எம்.எஸ் அம்மா பாடினதும் உங்க ஊரில.இப்போ வேண்டியதும் சினேஹிதம் தான் அங்கே.
    நல்ல பொருள் சொல்லி புது நாள் நல்ல நாளாக விடிந்து இருக்கிறது. நன்றி குமரன்.

    ReplyDelete
  6. நன்றி வல்லி அம்மா.

    ReplyDelete
  7. ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்கு எவ்வளவு பொருத்தமான பாடல் !

    பாடலை அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  8. M.S padiya Paramacharyalin indha padalin Tamizh arthaththai ivvalvu azhagai koduthadarku mikka nanri

    ReplyDelete
  9. சமஸ்க்ருதம் என்ன என்று கூட தெரியாத எனக்கு, இந்த பாடல் விளக்கத்தை படித்து விட்டு அந்த பாடலை யு டியூப்'இல் பார்த்த போது மெய் சிலிர்க்கிறது. அற்புதம்! உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete