Thursday, May 14, 2009

தமிழ்மணத்தில் ஐந்தாயிரம் வலைப்பதிவுகள் - வாழ்த்துகள்!

தமிழ்மணத் திரட்டியின் ஐந்தாயிரமாவது வலைப்பதிவாக என்னுடைய 'உடையவர்' பதிவு நேற்று இணைக்கப்பட்டதாக தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான திரு. நா. கணேசன் ஐயா நேற்று மின் தமிழ் கூகுள் குழுமத்தில் அறிவித்தார்.

ஐந்தாயிரம் வலைப்பதிவுகளைத் திரட்டும் முதல் தமிழ்த் திரட்டி தமிழ்மணம் தான் என்று நினைக்கிறேன். தமிழ்மணம் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற்று தமிழ் வலையுலகத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய தமிழ்மண வாழ்த்துக்கள்!
அதிலும் உடையவர் தமிழ்மண வாழ்த்துக்கள்!

நானே பதிவிட நினைத்தேன்! வழக்கம் போல பந்திக்கு முந்திக் கொண்டீர்கள்! :))

குமரன் (Kumaran) said...

நீங்களும் பதிவிடலாம் இரவி. :-)

தமிழ்மணத்திற்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்லி முடியுமா? எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

கோவி.கண்ணன் said...

ஆகா,

நீங்கள் ஏற்கனவே தொடங்கிய 100க் கணக்கான பதிவுகளின் (இது கொஞ்சம் மிகுதியோ) இடுகைகளை கூடலுக்கு மாற்றினீர்கள். நேற்று புதிதாக ஒரு பதிவை இணைத்திருப்பதைப் பார்த்தேன். எதோ முதன்மை தேவை இருக்கலாம் அதன் பொருட்டு புதிய பதிவு தொடங்கி இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

தமிழ்மணத்தில் 5000 ஆவது வலைபதிவாக இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அப்படியா....
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கள் உடையவர் பதிவை உடையவரே! :)

http://madhavipanthal.blogspot.com/2009/05/5000.html

Raghav said...

வாழ்த்துகள் குமரன்..

உடையவர் புகழை மென்மேலும் பரப்ப இது ஒரு நல்ல தொடக்கம்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கண்ணன். ஒரு நூலை மின்னாக்கம் செய்திருக்கிறார்கள் தமிழ் மரபு அறக்கட்டளையினர். அந்த நூலை ஒருங்குறியில் எழுதி வைப்பதற்காக இந்த புதிய பதிவைத் தொடங்கினேன். அதனைத் தமிழ்மணத்தில் இணைத்த நேரம் தற்செயலாக 5000-ஆவது பதிவாக அமைந்துவிட்டது.

குமரன் (Kumaran) said...

நன்றி முனைவர் குணசீலன் ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவ்.

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்மிளிர்.